Tuesday 7 September 2010

பிளாஸ் டிரைவ்களில் டேட்டாக்களை பாஸ்வேட் தந்து சேமிப்பதற்கு சிறந்த மென்பொருள்



பாஸ்வேட் போன்ற மிக முக்கியமான தகவல்களை பிளாஸ் டிரைவுகளில் சேமிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்? அப்படியானால் இந்த மென்பொருள் உங்களுக்கு மிகவும் பயன்படும்.

பிளாஸ் டிரைவுகளில் சேமிக்கும் பைல்களை எப்போதும் பிறர் இலகுவாக பார்க்க முடியாத படி எங்கிரிப்ட் செய்து சேமிப்பதே சிறந்தது


ஏனெனில் பிளாஸ் டிரைவ் தொலைக்கும் சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் அந்த பைல்களை பார்க்க முடியாது. USB Safeguard எனும் மென்பொருளை பிளாஸ் டிரைவில் நிறுவி பின்னர் எங்கிரிப்ட் செய்ய வேண்டிய பைல்களை Drag and drop முறையில் பாஸ்வேட் கொடுத்து சேமித்துக் கொள்ளலாம்.

USB Safeguard முதலில் பயன்படுத்தும் போது ஒரு பாஸ்வேட் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் எங்கிரிப் செய்ய வேண்டிய பைல்களை மவுஸினால் இழுத்துவந்து சேமியுங்கள். பின்பு Encrypt All என்பதை கிளிக் செய்தால் போதும். பைல்கள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு விடும்.



ஸ்கிரீன் கீ போட் வசதியையும் வழங்கும் இந்த மென்பொருள், பிளாஸ் டிரைவினுள் உங்கள் தொலைபேசி இலக்கத்தையும் சேமித்து வைக்க உதவுகின்றது.

இதன் மூலம் பிளாஸ் டிரைவ் ஐ பிறர் கண்டெடுக்கும் போது அவர்கள் உங்களுக்கு அழைத்து தெரியப்படுத்தலாம்.

டவுண்லோட் செய்ய
http://usbsafeguard.altervista.org/index.html

Post Comment

0 comments: