Tuesday 26 October 2010

குறிக்கப்பட்ட இடுகைகள்3D – வியூ பயர்பாக்ஸ்

அனைத்து இணையதளத்தையும் 3D – வியூவில் பயர்பாக்ஸ்-ல் பார்க்க

பயர்பாக்ஸ் இணைய உலாவியில் மட்டும் செயல்படக்கூடியது.
உங்களிடம் பயர்பாக்ஸ் இணையஉலாவி இல்லை என்றால்
www.mozilla.com என்ற தளத்திற்கு சென்று தரவிரக்கி கொள்ளவும்.
ஒரே நேரத்தில் பல இனையதளங்களை திறந்து வைத்து இருக்கும்
நமக்குத்தான் இந்த பதிவு.

பல இணையதளங்களை திறந்து வைத்திருக்கும் போது ஒன்றில்
இருந்து மற்றொன்றிற்கு செல்லும் போது கொஞ்சம் சிரமமாகத்தான்
இருக்கும். இப்ப்படி ஒரு இணையதளத்தில் இருந்து மற்றொரு இணைய
தளத்திற்கு 3D-வியூ ல் சென்றால் எப்படி இருக்கும். அதைத்தான் இனி
பார்க்கப் போகிறோம். பயர்பாக்ஸ் இணைய உலாவியில்
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8879 முகவரிக்கு செல்லவும்.
” Add to Firefox ” என்பதை அழுத்தவும். அதுவாகவே டவுன்லோட்
ஆகிவிடும். Install பட்டனை அழுத்தவும்அதன் பின் பயர்பாக்ஸ் -ஐ
Retstart செய்யவும்.இப்போது பயர்பாக்ஸ் இணையதளதில் பல
இணையதளங்களை திறந்து வைத்துக்கொள்ளவும்.

படம் 1 ல் காட்டிய ஐகான் தேர்வு செய்யவும். நாம் திறந்து வைத்த
இணையதளங்களை 3D வியூவில் பார்க்கலாம் விரும்பிய
இணையதளத்திற்கும் நொடியில் செல்லலாம்.

படம் 2 ல் காட்டிய ஐகானை தேர்வுசெய்வதன் மூலம்
விரும்பியபடி 3D வியூவையும் Background-ம் வடிவமைத்து
கொள்ளலாம்.

Post Comment

Monday 25 October 2010

WINDOWS-7ல் சிஸ்ட்டம் Trayல் அனைத்து ICONனையும் கொண்டுவர

வேகமாக புரோகிராம்களை திறப்பதற்கு பயன்படுவது,இந்த Tray Icon-கள் ஆகும், இதனை நமது விருப்பம் போல மாற்றி அமைத்து கொள்ள முடியும். System Tray Icon னை நீங்கள் விரும்பியது போல மாற்றி கொள்ள முடியும். பின்வரும் முறையினை பயன்படுத்தி நீங்கள் விரும்பியது போல System Tray Icon னை மாற்றி கொள்ள முடியும்.


பொதுவாக SYSTEM TRAY ICON/ மாற்றம் செய்த பிறகு SYSTEM TRAY ICON:


அனைத்து வித Icon னையும் தெரியவைக்க Taskbar ல் தெரியும் Arrow கீயினை அழுத்தி Customize என்பதை தேர்வு செய்யவும்.



தோன்றும் விண்டோவில் always show all icons and notifications on the taskbar என்னும் செக்பாக்சில் டிக் செய்து விட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.


னி அனைத்து வித ஐகானையும் நீங்கள் System Tray லேயே காண முடியும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டுமெனில் RightClik செய்து தோன்றும் விண்டோவில் Customize notification icons என்பதை தேர்வு செய்து தோன்றும் விண்டோவில் always show all icons and notifications on the taskbar என்ற செக்பாக்சில் உள்ள டிக்கினை எடுத்துவிடவும்.








இனி நீங்கள் விரும்பிய படி Taskbar-ல் ஐகானை மறைத்து வைத்துகொள்ள முடியும்.

Post Comment

விண்டோசில் அதிக அளவுடைய வெற்று பைல்களை உருவாக்க

கணினியை பயன்படுத்தும் அனைவருக்குமே புதிய,புதிய சந்தேகம் எழும், அப்படித்தான் நேற்று எனக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு பெரிய அளவுடைய பைல்களை மாற்றினால் எவ்வளவு நேரத்தில் மாறும், அதுவும் மிகப்பெரிய அளவுடைய பைல்களாக இருந்தால் எவ்வளவு நேரம் பிடிக்கும், இதற்கு ஒரு போல்டரை உருவாக்கு அதில் அனைத்துவித பைல்கள்/போல்டர்கள் என அனைத்தையும் காப்பி செய்து உருவாக்க வேண்டும், அப்படி இல்லாமல் ஒரே போல்டர் அல்லது பைல்ளாக இருந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும், அதை ஏன் நாம் வெற்று போல்டராக உருவாக்க கூடாது என நினைத்து, இதை பற்றி கூகிளாரிடம் கூறினேன் அவர் காட்டிய வழிபடி சென்றேன், அதில் கிடைத்ததுதான் File Filler என்னும் சிறிய அளவுடைய மென்பொருள் ஆகும்.

மென்பொருளை பதிவிறக்க: File filler



மென்பொருளை பதிவிறக்கி அதை ஓப்பன் செய்யவும், பின் எந்த பாத்தில் வெற்று போல்டரை உருவாக்க நினைக்கிறிர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். பின் வேண்டுமெனில் எந்த பைல் பார்மெட்டோ அதை தேர்வு செய்யவும். அல்லது அதனை இருப்பியல்பாக விட்டுவிடவும். அடுத்து அளவினை குறிப்பிட்டு GO பொத்தானை அழுத்தினால் சிறிது நேரத்தில் வெற்று பைலானது உருவாகி விடும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 2000, NT, XP , VISTA, 7 ஆகியவற்றில் இயங்கும்.

Post Comment

பென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்

பென்ட்ரைவ் என்பது இப்பொழுது கணினி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருள் இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணினியில் பதியவோ உபயோகபடுத்த படுகிறது. இந்த பென்ட்ரைவ்கள் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணினிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. இதிலிருந்து நம் பென்ட்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்களை கீழே கொடுத்துள்ளேன்.
1. USB WRITE PROTECTOR :
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்ட்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த
பென்ட்ரைவ்களை கண்டறிய முடியவில்லை. இந்த மென்பொருள் மிக சிறிய அளவே(190KB) உடையது.


2. USB FIREWALL :
பென்ட்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். USBயில் இருந்து கணினிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன் படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும். ஏதேனும் வைரஸ் உங்கள் கணினியில் புக முயற்சிக்கும் போது இந்த இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. நன்றாக வேலை செய்கிறது.


3. PANDA USB VACCINATION TOOL :
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf பைலை முற்றிலுமாக தடைசெய்கிறது. உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கபடுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

4. USB GUARDIAN :
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான பைலை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.


மேலே கூறிய நான்கு மென்பொருட்களும் உங்கள் பென்ட்ரைவை பாதுகாக்க உதவுகின்றன. தரவிறக்கி கொள்ளுங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

Post Comment