Thursday 10 April 2008

நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி

நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி நம்மில் பலர் இணைய தளத்திலேயே நாள் முழுதும் மூழ்கிக் கிடக்கலாம். இதனால் ஏற்படும் கால விரயம், பண விரயம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் எப்போதாவது இதற்கு செலவாகும் பணத்தையோ, நேரத்தையோ யோசித்திருக்கிறோமா என்பதே கேள்வி.உலாவியை (பிரவுசர்) இணையதள இணைப்பின்றியே பெற முடிந்தால்... ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! ஆஃப் லைன் பிரவுசர் தற்போது வந்துள்ளது. இதற்கான மென்பொருள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்யும்.இந்த மென்பொருள் நீங்கள் பிரவுஸ் செய்யும் இணைய தளம் முழுவதையுமோ, ஒரு சில பகுதிகளையோ உங்கள் ஹார்டுவேரில் சேமிக்கும் திறன் கொண்டது. இதனால் இணையதள இணைப்பைப் பயன்படுத்தாமலேயே நீங்கள் அந்த இணைய தளத்தை பிரவுஸ் செய்யலாம்.பேஜ்நெஸ்ட் டாட் காம் (http://pagenest.com/) இது ஒரு இலவச ஆஃப் லைன் பிரவுசர். இதனைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த இணையதளத்தின் பக்கங்களை காப்பி செய்து ஹார்டு டிஸ்கில் ஏற்றிக் கொள்ளலாம்.பேஜ்நெஸ்டில் இணையதள முகவரி ஒன்றை அளியுங்கள் அது அந்த இணையதளம் முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ உங்கள் ஹார்டு டிஸ்கில் பதிவிறக்கம் செய்து விடும். அப்படியே அந்த இணையதளத்தில் ஆன்லைனில் என்ன கண்டீர்களோ அது அப்படியே டெக்ஸ்ட், இமேஜஸ், எச்.டி.எம்.எல் அனைத்தையும் அப்படியே அச்சு அசலாகக் காட்டும்.பேஜ்நெஸ்ட் மூலம் 40 கோப்புகள் வரை டவுன்லோடு செய்ய முடியும். விரைவில் டவுன்லோடு செய்தும் முடித்து விடலாம். இதில் பல சிறப்பம்சங்களும் உள்ளன.சமீபத்திய டவுன்லோடுகள் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கிளிக் செய்யலாம். ஒரே கிளிக்கில் டவுன்லோடு செய்த பல்வேறு இணையதளங்களுக்கு செல்லும் வசதியும் உள்ளது. மேலும் இதற்காக நீங்கள் எந்த செட்டிங்கையும் மாற்ற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பேஜ்நெஸ்ட் பிரவுசர் மூலமும் நீங்கள் பிரவுஸ் செயலாம். மேலும் டவுன்லோடு செய்த இணையதளக் கோப்புகளை காப்பி செய்து நீங்கள் லேப்-டாப்பிலும் வைத்துக் கொள்ளலாம் எனவே நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதனை வாசிக்கலாம். இதனை விண்டோஸ் விஸ்தா, எக்ஸ்பி-2000, எம்.இ மற்றும் 98 ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும்.இதே போல் http://www.httrack.com/ மற்றும் http://www.spadixbd.com/backstreet/ ஆகிய இணையதளங்களும் உள்ளன. இந்த இணையதளங்களை மட்டுமே ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட மணி நேரங்கள் பயன்படுத்தி நீங்கள் வழக்கமாக பார்க்கும் இணையதளங்களை டவுன் லோடு செய்தால் இன்டர்நெட் இணைப்பு பற்றிய பிரச்சினைகளும் இல்லை, செலவும் பெருமளவு குறையும

Post Comment

Sunday 3 February 2008

Fingerprints தொழில் நுட்ப்பம்

Fingerprints தொழில் நுட்ப்பம்நம் கணினியையும் அதில் உள்ள தகவல்களையும் திருடு போகாமல் பாதுகாக்க இப்போது பிரபலமடைந்து வரும் முறை கைவிரல் ரேகையை கடவுசொல்லுக்கு பதிலாக பயன்படுத்துவது தான்.நாம் நம் கணினிக்குள் நுழையும் போது, encrypt செய்யப்பட்ட பைல்களை திறக்கும் போது மற்றும் சில windows applications களை திறக்கும் போதும் இந்த விரல் ரேகை முறையை கடவுச்சொல்லுக்கு பதில் பயன்படுத்தலாம். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுச்சொல் பயன்படுத்துவோர் அதை சிரமப்பட்டு நினைவில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை மேலும் நமது கடவுச்சொல்லை யாரேனும் திருடிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் தேவை இல்லை. நம் விரலை வெட்டி எடுத்து சென்றுவிடாமல் பார்த்து கொண்டால் போதும்.மேலும் விபரம் அறிய இங்கே சென்று பார்க்கவும். http://www.upek.com/solutions/eikon/default.asp
Ayngaran

Post Comment

Thursday 31 January 2008

விரும்பிய கோப்புக்கு மாற்ற

விரும்பிய கோப்புக்கு மாற்றவும் youtube லிருந்து தரைவிறக்கவும் இந்தத் தளம் பயன்படுகிறது அதாவது http://www.mediaconverter.org/index.php இந்தத் தளம் online யினிலேயே கோப்பை மாற்றுகிறது

Post Comment

Wednesday 30 January 2008

இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள்


இன்று இணையத்தில் பல செயலிகளை (programs) இலவசமாக அல்லது ஒரு குறிக்கப்பட்ட கால எல்லை வரைக்கும் பாவிக்கக் கூடியவகையில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது.
ஒருமென்பொருளைத் தயாரித்து வெளியில் விடுவதற்கு ஒரு கணிசமான அளவில் செலவு ஏற்படும். ஆனால் அந்த மென்பொருளை இலவசமாக பாவனையாளர்களுக்கு வழங்குவதனால் அங்கு எந்தவிதத்திலும் உற்பத்திச்செலவை திரும்ப பெற்றுக்கொள்ளக்க கூடிய வாய்ப்பில்லை.
எனவே இவ்வாறான இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அந்த மென்பொருட்களுடன் சில கட்டளைத்தொகுப்புகளையும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இனி நாங்கள் இவ்வாறான இலவச செயலிகளை பாவிக்கின்ற போது இடையிடையே தான்தோன்றி சாளரங்கள் (pop-up windows) மூலமும் பட்டைகள் (banners) மூலமும் விளம்பரங்கள் மாறிமாறி அடிக்கடி எமது திரையில் தென்படும். இவ்விளம்பரங்கள் மூலம் இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அவற்றிற்கான உற்பத்திச்செலவை திரும்ப பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு ஒரு செயலி இயங்கிக்கொண்டு இருக்கின்ற பொழுது, தான்தோன்றி சாளரங்கள் மூலமும் பட்டைகள் மூலமும் விளம்பரங்கள் மாறிமாறி அடிக்கடி எமது திரையில் விழுவதுபோல் செய்யப்பட்ட மென்பொருள் ADWARE என அழைக்கப்படும்.
ஆனால் இவ்வாறான செயலிகள் உங்களைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் நீங்கள் கணணியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் அவதானித்து அவற்றை உங்களுக்குத்தெரியாமல் அல்லது உங்கள் அனுமதி இல்லாமல் மூன்றாம் நபர்களுக்கு அனுப்பக்கூடிய கட்டளைத்தொகுப்புகளையும் தன்னுள் உள்ளடக்கி இருக்கின்றன.
இனி SPYWARE என்றால் என்னவென்று பார்ப்போம். நாங்கள் இணையத்தில் தொடுத்து இருக்கின்ற வேளையில் எமக்குத் தெரியாமல் எமது அனுமதி இன்றி எம்மைப்பற்றிய தகவல்களை சேகரித்து பின்வழியால் (back channel)வேறுபட்ட நிறுவனங்களுக்கும் விளம்பரதாரருக்கும் அனுப்பிவைக்கும் தொழில்நுட்ப மென்பொருள் SPYWARE எனப்படும்.
இவ்வாறான உளவுபார்க்கும் கட்டளைக்கோப்பகளை முற்றாக எமது கணணியிலிந்து நீக்கி எமது கணணியை சுத்தப்படத்த பின்வரும் SPYBOT SEARCH AND DESTROY மென்பொருளை நீங்கள் பாவிக்கலாம்.

Post Comment

MS Office VS Open Office

Open Office is a Freeware Software, which is as good as the $550 value Microsoft Office.You can download it here freely DOWNLOAD HERE

Post Comment

Tuesday 29 January 2008

Explore Mars

friends! check this link. it shows a animation of images taken from mars. hope we will go there soon. don't forget to check the page 'Live from Mars' in that website

Post Comment

நேரத்தை மிச்சமாக்கும் தளம்

இலவச சேவைகளைக் கூட அங்கத்தவருக்குத்தான் தருவோம் எனக்கூறி ஒரு பெரிய படிவத்தையும் நிரப்பத்தருவார்கள். அதில் அம்மா பெயர், அப்பா பெயர், நீங்க நெட்டையா குட்டையா, கறுப்பா சிவப்பா என எரிச்சலூட்டும் கேள்விகளைக் கேட்பர். இதில் இருந்து விடுதலை பெற ஒரு தளத்தை அமைத்திருக்கின்றார்கள்...!நீங்கள் http://www.bugmenot.com/ என்ற முகவரிக்கு சென்று அங்குள்ள பெட்டியில் உங்களுக்கு தேவையான இணைய முகவரியின் பெயரை இட்டு தேட வேண்டியதுதான்...!

Post Comment

Vista Transformation Pack 6.0

Vista Transformation Pack 6.0Size 30,03
MBThis release has successfully archived full setup integration support (no more experimental) and add covering on x64 partial support (experimental). Also added many new 3rd-party applications to make your system looks more like Vista such as Styler, Sidebar, Taskbar thumbnail preview, Start orb fix for msstyles, etc. and update many new resources for system files.This program will transform your Windows user interface to ultimate Windows Vista look that everyone will never notice it’s the same old Windows XP (or 2003)
Features
Vista Transformation Pack will replace many of the resources in Windows XP/Windows Server 2003. It can change such things as:Boot screen,Welcome Screen / Logon Screen, New msstyles files (visual styles), New desktop and file icons, New toolbar icon, Progress Dialogs, Sounds scheme, System Tray icons, New Wallpapers, Windows Media Player Skin,And much moreå
Download :http://rapidshare.com/files/17430525...nPack.v6.0.rar

Post Comment

அவாஸ்ட் Anti-virus software

அவாஸ்ட் Anti-virus softwareமிகவும் சிறந்ததொரு நாச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளை தேவைப்படின் பதிவிறக்கம் செய்யவும்.
http://www.avast.com/eng/download-avast-home.html
Serial No : S9448333R0046S1111-UKRTA98W

Post Comment

அனிமினேஷன்

இங்கே சுடக்குங்கள்இ-மெயிலில் எனக்கு வந்த ஒரு சுட்டி மிகவும் அருமையாக இருந்ததுஉங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்

Ayngaran

Post Comment

ஒரே பக்கத்தில் காட்டக்கூடிய இணையத்தளம்..

நமக்குத்தேவையான இணையத்தளங்கள் வலைப்பூக்கள் என்பவற்றை ஒரே பக்கத்தில் காட்டக்கூடிய இணையத்தளம்..

  1. http://www.netvibes.com
  2. http://www.readnotify.com

Post Comment

ஒரு GB இலவச்மாக mail அனுப்ப...

ஒரு GB இலவச்மாக mail அனுப்ப... click http://http://www.yousendit.com/

Post Comment

50GB free Storage

உங்கள் 5 GBபடங்களை எல்லாம் யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைக்கலாம். 50 GB தருகிறார்கள்
www.adrive.com

Post Comment

F# எனும் புதிய கணினிமொழி!


C#க்கு அடுத்து இப்பொழுது F# எனும் புதிய கணினி மொழியை உருவாக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இது Phython, Javascript போன்று ஸ்கிரிப்டிங் மொழியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பான இன்றைய புதுயுக கணினி இயக்கத்துக்கு இந்த மொழி பெரும்பங்காற்றும் என்று தெரிகிறது.எது எப்படி இருந்தாலும் மைக்ரோசாப்டின் பயனாளர் நட்பு (User Friendlyness) மேலும் மேலும் அதிகரித்து வருவதில் ஐயமேதும் இல்லைமேலும் தெரிந்துகொள்ள:F# பற்றிய மைக்ரேசாப்ட்டின் இணைய பக்கம்

Post Comment

கூகுள் அட்சென்ஸ்

கூகுள் அட்சென்ஸ்

உங்களிடம் சொந்தமாக இணையத்தளம் அல்லது ஒரு வலைப்பதிவாவது இருக்கின்றதா??? அப்போ நீங்கள் அட்சென்ஸ் பாவிக்கலாம்.இது கூகிளின் உடைய ஒரு சேவை. இவர்கள் மற்றவர்களிடம் விளம்பரங்களை வாங்கி உங்கள் தளத்தில் காட்டுவார்கள். விளம்பரங்களை உங்கள் தளத்திற்கு வருபவர்கள் சொடுக்கும போது அதற்குப் பணம் அறவிடுவார்கள். அறவிடும் பணத்தை உங்களுடன் பங்கிடுவார்கள்.பணத்தை செக்காக அனுப்புவார்கள். இலவச தளமானாலும் வேலைசெய்யும். அவர்கள் தரும் ஸ்கிரிப்ட் (Code) உங்கள் தளத்தின் டாக்குகளுக்கிடையில் போடவேண்டும். அவ்வாறு போடுவதன் மூலம் உங்கள் தளத்தில் அவர்கள் விளம்பரங்களைக் காணலாம்.நாம் ஏற்கெனவே இணையத்தளமோ அல்லது ப்ளாக்கோ வைத்திருந்தால் அதன் மூலம் உபரியாக பணம் சம்பாதிக்க எளிய வழிதான் இந்த 'ஆட்சென்ஸ்'. 'கூக்கிள் ஆட்வேர்ட்ஸ்' மூலமும் வேறு சில வகைகளிலும் இவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து விளம்பரங்களைப் பெறுகிறார்கள். அந்த விளம்பரங்களை நம் வெப்சைட் மூலம் நுகர்வோருக்கு விளம்பரப்படுத்த வேண்டும். அதற்காக நமக்கு பணம் தருவார்கள். உங்களிடம் ஒரு வெப்சைட் இருந்தால், அதில் நீங்கள் 'ஆட்சென்ஸ்'சை உபயோகப்படுத்தி பணம் சம்பாதிக்கலாம். உங்கள் வெப்சைட்டில் இடம் பெற செய்த 'ஆட்சென்ஸ்சின்' விளம்பரங்கள் கிளிக் செய்யப்படும் எண்ணிக்கையை வைத்து உங்கள் கணக்கில் பணம் ஏற்றப்படும். அது மாதம் ஒரு முறை உங்களுக்கு காசோலையாக அனுப்பி வைக்கப்படும். அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வைத்துள்ளார்கள். 'கூகிள்' மிகவும் நம்பிக்கையான நிறுவனம். மற்ற நிறுவனங்களைப் போல் ஏமாற்றுவதில்லை. பணத்தை தவறாமல் அனுப்பி வைத்துவிடுகிறார்கள். இது பற்றி மேலும் விபரமறிய http://www.google.co.in/intl/en/ads/ என்பதை சுட்டுங்கள். பொறுமையாக படியுங்கள் அனைத்துவிபரமும் இருக்கிறது.ஒரு வெப்சைட் அல்லது ப்ளாக் உருவாக்கிக்கொள்ளுங்கள். பின் மேலே நான் என் சுட்டியில் சென்று பதிவு செய்யுங்கள். நீங்கள் பதிவு செய்யும் போது உங்கள் பெயர், மற்றும் காசோலை அனுப்புவதற்கான வேண்டிய முகவரி மற்றும் உங்களின் இணையதள சுட்டி ஆகியவற்றை கேட்பார்கள். நீங்கள் கொடுக்க வேண்டும். பின் இரண்டு நாட்களுக்குள் உங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டதாற்கான மெயில் அனுப்புவார்கள். உங்கள் கணக்கு ஆக்டிவ் செய்யப்பட்ட பிறகு கூக்ளிஆட்சென்ஸ் வெப்பேஜ் சென்று அவர்களின் விளம்பரங்களை வெளிப்படுத்த தேவையான புரோகிராம் கோடிங்கை தருவார்கள். அதைத்தான் தாங்கள் 'ப்ரமோசனல் கோட்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நாம் அதை அப்படியே காப்பி செய்து நம் இணையதளத்தில் இடையில் போட்டால் போதும். நம் வெப் தளத்தில் அவர்களின் விளம்பரம் அருமையாக காட்சிதரும்.

Post Comment

youtube வீடியோக்களை Download செய்ய

youtube வீடியோக்களை Download செய்ய

FTV player வைத்து இருந்தால் youtube படங்களை சேமித்து வைத்து பார்க்காலாமேfirefox உபயோகிக்கவராக இருந்தால் இந்த இணைப்பில் சென்று பிடித்த extensionயை தேரிந்து எடுத்து கொள்ளவும்..https://addons.mozilla.org/en-US/firefox/search?q=download+you+tube&status=4மேல் இருக்கும் EXTENSION வழியாக நீங்கள் விடியோக்களை உங்கள் கண்ணிக்கு தரையிரக்கம் செய்து கொள்ள்லாம்..மீண்டும் மீண்டும் வீடியோ பார்க்க you tube செல்ல வேண்டிய அவசியம் இல்லை..பின் FTV player தரையிரக்கம் செய்ய இங்கு செல்லவும்you tube வீடியோக்கள் FTV player கொண்டு மட்டும் தான் பார்க்க முடியும்http://www.martijndevisser.com/blog/article/flv-player-updated

Post Comment

மண் ஓவியம்...........

மண் ஓவியம்...........
நான் ரசித்ததை நீங்களும் ரசிக்க வேண்டாம?கீழே தந்த லிங்க்கைச் சொடுக்கிப் பாருங்கள்.மண் ஓவியம் பார்க்க, இங்கே அமுக்குக

Post Comment

youtube Download

youtube download
FTV player வைத்து இருந்தால் youtube படங்களை சேமித்து வைத்து பார்க்காலாமேfirefox உபயோகிக்கவராக இருந்தால் இந்த இணைப்பில் சென்று பிடித்த extensionயை தேரிந்து எடுத்து கொள்ளவும்..https://addons.mozilla.org/en-US/firefox/search?q=download+you+tube&status=4மேல் இருக்கும் EXTENSION வழியாக நீங்கள் விடியோக்களை உங்கள் கண்ணிக்கு தரையிரக்கம் செய்து கொள்ள்லாம்..மீண்டும் மீண்டும் வீடியோ பார்க்க you tube செல்ல வேண்டிய அவசியம் இல்லை..பின் FTV player தரையிரக்கம் செய்ய இங்கு செல்லவும்you tube வீடியோக்கள் FTV player கொண்டு மட்டும் தான் பார்க்க முடியும்http://www.martijndevisser.com/blog/article/flv-player-updated

Post Comment

தமிழ்/சிங்களம் Online Dictionary

தமிழ்/சிங்களம் Online Dictionary
தமிழ் சிங்களம் வார்த்தைகளின் பொருள் தெரிந்துகொள்ள இத்தளம் மிக உபயோகமாக இருக்கமென நினைக்கிறேன். நீங்களும் முயற்சிக்கலாமே?KAPRUKA இணையம்

Post Comment

Find your IP address

உங்கள் IP Address ஐ அறியுங்கள்
கிழே உள்ள லிங்கை மெதுவாக அமுக்கவும்.Slowly Press

Post Comment

DVD player region code

DVD player region code
நண்பர்களே... டிவிடி சார்ந்த அனைத்து உதவிகள்... மற்றும் கருவிகள் என ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய ஒரு அருமையான தளமாக இந்த வீடியோஹெல்ப் தளம் உள்ளது.உடனே சென்று பயன் பெறுங்கள்...நம்மூர் டிவிடி பிளெயர் region code அமைக்கப் பெற்றிருக்கும்... அதனை நீக்கி அனைத்து region டிவிடிக்களையும் வாசிக்கச்செய்ய இங்கே செல்லுங்கள்...

Post Comment

இலவசமென்பொருள் தளவிறக்கம் செய்ய

இலவச மென்பொருள், :தளவிறக்கம் செய்ய
எனக்கு பிடித்த திறந்த மூலங்கள்-இலவச மென்பொருட்கள்.மிகவும் உபயோகமாக இருக்கின்ற சில மென்பொருட்களின் தொகுப்பு. இவையனைத்தும் திறந்த மூலம்/இலவசம் வகை சார்ந்தவை.
1. வின்மெர்ஜ்-WinMergeஇது இரண்டு ஃபைல்களை ஒப்பிட்டு பார்க்க பயன்படுத்தும் ஒரு திறந்த மூலம். மிக வேகமாக செயல்படுகிறது. ஒப்பிட்டு பார்க்கும் போது -ஏதேனும் மாற்றங்களை நீங்கள் செய்தால் ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்கிறது.கிடைக்கும் இடம்:http://winmerge.sourceforge.net/
2. மைஜெனரேஷன்.-MyGenerationநான் பார்த்ததிலேயே ஒரு மிக சிறந்த கோட் ஜெனரேட்டர். பொதுவாக கோட் ஜெனரேஷன் வகை டூல்கள் தங்களுக்குள் முன்னதாக டிஃபைன் பண்ண பட்டிருக்கும் லாஜிக் படி மொத்தமாக கோட் ஜெனரேட் பண்ணும். சில கமெர்ஷியல் ப்ராடக்ட்கள் ஒரு சில டிஎல் எல் ஃபைல்களை ரெஃபர் பண்ணி கோட் ஜெனரேட் பண்ணும். அதாவது பேஸ் க்ளாஸ் கோட் அந்த டி எல் எல் ஃபைல்களில் இருக்கும். அந்த கோட் என்ன என்பது நமக்கு தெரியாது. அந்த பேஸ் கிளாஸ்களை இவர்கள் இன் ஹேரிட் செய்து கோட் எழுதுவார்கள். இதனால் நீங்கள் ஒரு தேர்ட்பார்ட்டி டிஎல் எல்லை பயன்படுத்த வேண்டிய கட்டயாத்திற்கு உள்ளாக்க படுவீர்கள். ஆனால் இந்த இலவச மென்பொருள் டெம்ப்ளெட் பயன்படுத்தி கோட் ஜெனேரட் செய்கிறது. உங்கள் தோதுக்கு கோட் ஜெனெரேட் பண்ணலாம். ப்ளாக்கர் டெம்ப்ளேட்கள் நிறைய கிடைப்பது போல, இங்கும் நிறைய மாடல் டெம்ப்ளேட்கள் உள்ளன. எளிதாக பயன்படுத்தி மின்னல் வேகத்தில் ஆயிரக்கணக்கான லைன்களை ஜெனெரேட் பண்ணலாம். கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய டூல்.கிடைக்கும் இடம்:http://www.mygenerationsoftware.com/portal/default.aspx
3. ஆரெஸெஸ் பாப்பர்-RSS Popperஅவுட்லுக் பயன்படுத்துபவர்களுக்கான இலவச ஆர்ஸெஸ் ரீடர்.கிடைக்கும் இடம்:http://rsspopper.blogspot.com/
4. ஸ்லிக்ரன்-SlickRunநீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்கள், ஃபைல்கள், எக்ஸிக்யூட்டபிள்கள் அனைத்தையும் கீ-வேர்ட் பயன்படுத்தி லான்ஞ் பண்ண உதவும் டூல். பலவற்றை ஒரே கீ-வேர்ட் வைத்து திறக்கலாம். உதாரணமாக நான் காலையில் அலுவலகம் வந்த உடன் இதில் ஃப்ராஜக்ட் என்று அடிப்பேன். உடனடியாக டோட் (ஆரகிள் டூல்), அவுட்லுக், டெஸ்ட் டைரக்டர் , எக்ஸ்ப்ளோரர், கம்பெனி இன்ட்ரானெட் அனைத்தும் லான்ச்சாகி விடும்.கிடைக்கும் இடம்.http://www.bayden.com/SlickRun/
5.டு-டூ லிஸ்ட்-ToDo Listநீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிட ஒரு எளிமையான டூல். திறந்த மென்பொருள் வகை சார்ந்தது.கிடைக்கும் இடம்:http://www.abstractspoon.com/

Post Comment

Voice Message to Text Message

Voice Message to Text Message

போனில் SMS அடிக்க மாய்ச்சமா, சிரமப் படுபவர்களா, இதோ உங்களுக்கு என புதிய தொழில் நுட்பம் மார்க்கெட்டில் நுழைந்து உள்ளது. BlackBerry 8700g போன் இந்த புதிய தொழில் நுட்பத்துடன் மார்க்கெட்டில் நுழைந்து உள்ளது.Just press the record button, dictate your message and send. நீங்கள் டிக்டேட் செய்த மெஸேஜ் , டெக்ஸ்ட் மெஸேஜாக மாற்றப்பட்டு அனுப்பப் படுகிறது
click here
http://www.blackberry.com/ap/products/blackberry8700/blackberry8700g.shtml

Post Comment

IE 7 FireFox 2 எதை உபயோகிக்கலாம்?


IE 7 FireFox 2 எதை உபயோகிக்கலாம்?
தற்போது ஓபன் சோர்ஸ் fire fox 2 browser மற்றும் விண்டோஸ் கண்ணி உபயொகிப்பாளர்க்கு internet explorer 7 கிடைக்கிறது.நான் இந்த இரண்டு browserகளும் சோதனை செய்து பார்த்தேன்.IE முதன் முறையாக tab browsing அறிமுகபடித்தி இருக்கிறது. இது ஏற்கன்வே firefox ல் இருக்கும் ஒரு செயல் திறன் தான். IE 6 2001 ல் வெளியானது. 5 வருடங்களாக எந்த வித மாறுதலும் இல்லாமல் சில patches மட்டும் செய்து IE இன்று வரை கோலோச்சி வந்த்தது. firefox உபயோகத்தில் வந்த சில நாட்களில் IE யின் ஆதிக்கத்தை பெரும் அளவு தகர்த்து விட்டது.1 IE 7 ல் memory management தொழில் நுட்பம் அற்புதமாக கையாளபட்டுள்ளது. 128 RAM உபயோகிப்பவரின் கண்ணியும் எந்த வித பிரச்சனை செய்யாமல் உடன் பக்கங்களை கொண்டு கொட்டுகிறது.firefox memory management இன்னமும் குழந்தை தான். குறைந்த பட்சம் 512 RAM கண்ணி என்றால் எந்த வித பிரச்சனயும் இல்லை. ஆனால் குறைந்த memory உபயோகித்தால் கண்ணி அடிக்கடி hang ஆகலாம்.இது தான் firefoxல் கண்ட ஒரே பிரச்சனை .மற்றபடி பாதுகாப்பு , வேகம், செயல் திறன் எல்லாவற்றிலும் firefox IE 7 விட பல மடங்கு உயர்ந்த இடத்தில் இருக்கிறது.IE 7 தான் அதிகமாக உபயோகபடுத்த படும் browser. அதே போல அதிக மாக spyware , trojan போன்ற விழ ஆட்கள் எளிதாக கண்ணியில் உட்கார IE எளிதாக வழி வகுக்கிறது. firefoxல் இது போல தொல்லைகள் இல்லை. பாதுகாப்பு அம்சத்தில் firefox 100க்கு 100 மதிப்பெண் கொடுக்கலாம்.மேலும் no script போன்ற extensionகளை firefoxல் சேர்த்து கொண்டால் பாதுக்காப்ப்க்கு இன்னமும் உறுதி.மேலும் நமக்கு பிடித்தவாறு நம்து பிரவொசரை மாற்றி அமைக்கும் வசதி , scriptகளை கையாளும் வசதி போன்றவை எல்லாம் இன்னமும் IEயிடம் இல்லை.firefox வளர்சி பொறுக்க முடியாமல் Microsoft வழக்கம் போல குறுக்கு வழி எல்லாம் கடை பிடிக்கிறது. நீங்கள் windows xp service pack 2 உபயோகிக்கவரனால் firefox முதன் முறை install செய்ய்யும் போது சில வழி முறைகள் அவசியம் செய்ய வேண்டும். நம் அனுமதி இல்லாமல் நமது firefox browserயை மூடும் வழி முறைகளை windows செய்கிறது.

Post Comment

தடயங்களை அழிக்கலாம்

தடயங்களை அழிக்கலாம்

கணிணியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் எங்கேயோ ஓரிடத்தில் பதிவு பண்ணப்படுகிறது என்றால் அது மிகையில்லை.நாம் சமீபத்தில் போன இணையதளமாகட்டும் அல்லது நாம் சமீபத்தில் கேட்ட பாடல், நாம் சமீபத்தில் பார்த்த வீடியோ, திறந்த கோப்புகள், படங்கள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் தடயங்களை விட்டுச் செல்கின்றன.கில்லாடி ஒருவர் (என்ன மாதிரி) கொஞ்சம் தேடினால் நமது கணிணி நம்மை பற்றிய அனைத்து விவரங்களையும் பிட்டு பிட்டு வைத்து விடும்.இதை தவிர்க்க அதாவது நாம் நமது கணிணியில் விடும் தடயங்களை அழிக்க இதோ இரு மென்பொருள்கள்.சமீபத்திய நமது அனைத்து செயல்களையும் நொடியில் அழித்து விடும். அவையாவன Temporary files Cache, URL history, cookies, Autocomplete form history, Hidden index.dat files. Recycle Bin, Recent Documents, Temporary files and Log files, Registry cleaner,Last download file location etc.
CCleaner
Product Page
http://www.ccleaner.com/
Direct Download Linkhttp://download.piriform.com/ccsetup136.exe
MRUblaster (Most Recently Used)
Product Pagehttp://www.javacoolsoftware.com/mrublaster.html
Direct Download Linkhttp://www.javacoolsoftware.net/downloads/...lastersetup.exe

Post Comment

MS paint

MS paint
எவ்வளவு தொழில்நுட்பம் வழர்ந்திருந்தாலும் சில மனிதர்கள் தான் சின்ன துரும்பொன்றை வைத்துகொண்டு பெரிய இரும்பொன்றை செய்துவிடுவார்கள்.ஓகே இனி விசயத்துக்கு வருவோம்.......தற்பொழுது சாதாரண போட்டோக்ளை "மென்பொருட்களின்" உதவியுடன் முகவும் அழகாகவும் வியக்கதகதாகவும் மாற்றி அமைக்கலாம். உதாரணம் நடிகை "அசின்" போன்றோர் போஸ்டல்கள்..Photoshop or corelsraw or any other famous software ............ தற்பொழுது முன்ணணியில் வகுத்தாலும் MS paint ஐ நாங்கள் மறந்து விட முடியாது காரணம், எனக்கு தெரிந்த வகையில் MS paint தான் மூல உதாரணம்...இந்தphotoshop போன்ட்ரெ மென்பொருட்களை உருவாக்குவதற்கு காரணம்...சரி இனி நீங்கள் click here

Post Comment

youtube வீடியோ Download

youtube வீடியோ Download
http://youtube.com/watch?v=KJVd3nPJpc0மேலுள்ள இணைபில் இருக்கும் வீடியோவை தரவிறக்க வேண்டுமெனின் இந்த இணைய முகவரிக்கு முன் அதாவதுhttp:// பிறகு kiss என்னும் சொல்லை ஒட்டுங்கள்உதாரணமாகhttp://kissyoutube.com/watch?v=KJVd3nPJpc0அது உங்களை இன்னொரு தளத்துக்கு கொண்டு செல்லும் அங்கு தரவிறக்க இணைப்பு இருக்கும் அங்கு நீங்கள் விரும்பிய வீடியோக்களை சுட்டு பாருங்கள்Remember to save your video with ".flv" extension. Use the free flv player we recommend to play the video.மறக்காமல் தரவிறக்கும் வீடியோவை .flv என போட்டு தரவிறகுங்கள் உதாரணமாக Eg. some_video_filename.flv.அதன் பின்னர் உங்களுக்கு விரும்பிய வடிவில் மாற்றி ரசிக்கலாம்.http://links.kissyoutube.com/replay-converterமேலுள்ள இணைபில் இருக்கும் மென்பொரூளை பாவித்து மாற்றலாம்

Post Comment

Windows XP தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows XP தமிழ் இடைமுக தயாரிப்பு
கீழ் உள்ள சுட்டியை சொடுக்கி விண்டோசின் சகலவிதமான பதிப்புக்கள். மென்பொருள்கள் உதவிகள் ஆகியவற்றின் தமிழ் பதிப்பை பார்வையிட்டு தேவையானவற்றி பெற்றுக்கொள்ளுங்கள்
சுட்டி

Post Comment

Flock

Flock
சமீபக்காலமாக நான் ப்லாக் என்ற உலாவியை உபயோகித்து வருகிறேன். இது 99 சதம் பயர்பாக்ஸை உல்டா செய்திருந்தாலும் பல புதிய விசயங்களும் சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு வெகுவாக பிடித்தும் இருக்கிறது.உதாரணமாக நீங்கள் ஜிமெயில் ஒரு போட்டோவை சேர்க்க நினைத்தால் வழக்கமாக நாம் அட்டாச்செண்ட் என்னும் வழியில்தானே செய்ய இயலும். ஆனால் ப்ளாக் வெறும் ட்ராக் அண்ட் ட்ராப் மூலமாகவே இழுத்து வந்து சப்ஜெக்ட் காலமில் விட்டுவிடலாம். மேலும் ப்லாக் ப்ளிக்கர், போட்டோ பக்க்கெட் போன்ற தளங்களிலிருந்து எளிதாக படங்களை இணைக்குமாறும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க்கிறது. அது மட்டுமல்ல. நமது வலைப்பூக்களில் பதிவிடவும் எளிதான முறைகளை சுட்டுக்கிறது..இது பயர்பாக்ஸின் அப்பட்டமான காப்பிதான். ஆனாலும் நல்லா நச்சுன்னு இருக்கு.. மேலும் பயர்பாக்ஸின் ஆட் ஆன்களை இணைத்தும் கொள்ளலாம். குறிப்பாக அதன் ஓவர் சீன் காட்டாத சிலவசதிகள் மற்றும் பயர்பாக்கிஸினை தொடர்ச்சியாக பார்ப்பதால் வரும் சின்ன அலுப்பு ஆகியவற்றை சற்று விட்டொழிய வரலாம் ப்லாக்கிற்கு..
டவுன்லோட் செய்ய..

Post Comment

தமிழ் படிக்கத் தெரியாதவர்களும் தமிழில் படிக்கலாம்

தமிழ் படிக்கத் தெரியாதவர்களும் தமிழில் படிக்கலாம்
தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் எப்படி தமிழில் படிக்க முடியும்னு கேட்கிறீர்களா. இந்த முகவரிக்குள்? சென்று உன்களுக்கு பிடித்த தமிழ் தளத்தின் பெயரை இட்டால் அது ஆங்கில தமிழில் மொழி பெயர்க்கும்.

Post Comment

10 GB Size File அனுப்பாலாம்!

10 GB Size File அனுப்பாலாம்!

நாம் உபயோகித்துக்கொண்டிருக்கும் மின்னஞ்சல்கள் மூலம் அதிக அளவு கொண்ட அஞ்சல்களையோ அல்லது கோப்புக்களையோ அனுப்ப முடியாது.
கீழே தரப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு கொஞ்சம் போய் பதிவு செய்து பாருங்க......ஆமா.. 10 GB Size File அனுப்பாலாம்.அதுவும் இலவசம்...

http://www.sendyourfiles.com/

Post Comment

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகட்டும் ஃபைர்ஃபாக்ஸ் ஆகட்டும் உங்கள் கடவுச்சொல்லை (Password) சேமிக்கட்டுமா? என்று கேட்டால் வேண்டவே வேண்டாம் என்று கொடுத்துவிடுங்கள். நம்மில் பலருக்கு ஒரு துள்ளுபெட்டி (Popup Dialogbox) வந்தாலே அது என்னவென்று பார்க்காமல் சரி என்று கொடுப்பதே பழக்கமாக இருக்கும். உதாரணத்துக்கு நீங்கள் அறிவில்லாதவரா என்று கேட்டால் கூட ஆமாம் என்று சொல்லிவிடுவோம். படித்து என்னவென்று புரிந்துகொண்டு பதிலளிப்பது என்பதே இல்லை.

முக்கியமாக வலைஉலவு நிலையத்துக்கு (Browsing Centre) சென்று வலை உலா வரும்போது இது கூடவே கூடாது. அது என்ன கடவுச்சொல்லை ஒவ்வொருமுறை தர ஒரு சோம்பேரித்தனமா? உதாரணத்துக்கு http://www.nirsoft.net/utils/internet_explorer_password.html என்ற தளத்தில் கிடைக்கும் மிகச்சிறிய ஒரு உதவிக்கருவி உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேமித்து வைத்திருக்கும் அனைத்து கடவுச் சொற்களையும் எடுத்துக் காட்டிவிடும். அப்புறம் அவ்வளவுதான்.

இது இப்படி என்றால் ஃபைர்ஃபாக்ஸ் இந்தக்கருவிகள் ஏதும் இல்லாமலேயே எடுத்துக் காட்டுகிறது. பின்வரும் வழியில் செல்லுங்கள், Tools>Options>Security>Show Passwords அங்கு சென்றதும் மீண்டும் Show passwords என்ற ஒரு இடத்தைச் சொடுக்கினால் அனைத்து கடவுச்சொற்களையும் தோலுரித்துக் காட்டுகிறது ஃபைர்ஃபாக்ஸ். யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கக் கூடிய இந்த இரகசிய இடங்கள் நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதில் அதிக கவனம் தேவை.

Post Comment

தமிழ் மொழிபெயர்ப்பான் விரைவில்

தமிழ் மொழிபெயர்ப்பான் விரைவில்
கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம்.தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம்.உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது “எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது?” என்று தேடித்தரும்.இந்த தளத்திற்குச் சென்று இது வரை உள்ள மொழிகளில் தேடி, எதிர்காலத்தில் தமிழ் வரும் போது தேடுவதற்கு இப்போதே பயிற்சி எடுக்கவும்

Post Comment

பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க..

பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க..

தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில் நாம் பாஸ்வேர்டு களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். சில இணைய தளங்களில் நுழைய விரும்பினால், அங்கு "உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பணம் எதுவும் கட்ட வேண்டாம், நீங்கள் உறுப்பினர் ஆகுங்கள்' என்ற அறிவிப்பு வரும். உறுப்பினராகி விடுவோம் நாம். அவற்றிற்கும் பாஸ்வேர்டுகள் தேவை. சில தளங்களில் நுழைந்து சாப்ட்வேர்களை, டிரைவர்களை டவுன்லோடு செய்ய நினைப்போம். முதலில் உறுப்பினராகுங்கள் என அறிவிப்பு வரும். பாஸ்வேர்டு கொடுத்து அங்கும் உறுப்பினர்களாக மாறி விடுவோம்.நமது கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களை மற்றவர்கள் படித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த பைல்களுக்கும் பாஸ்வேர்டுகளைக் கொடுப்போம். இப்படி கம்ப்யூட்டர் வாழ்க்கையில் நிறைய இடங்களில் பாஸ்வேர்டுகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. கொடுப்பது வரை சரி. ஆனால் இவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளதே. அங்கே தான் சிக்கலே எழுகிறது. பலர் எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஏன் என்று கேட்டால், ஒரு பாஸ்வேர்டை நினைவில் வைப்பது எளிது என்கிறார்கள்.உண்மைதான். ஆனால் அந்த பாஸ்வேர்டை உங்களுக்குத் தெரிந்தவர் கண்டுபிடித்து விட்டால் அவ்வளவுதான். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட்டை, இமெயில் அக்கவுண்ட்டுகளை அவர் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார். உங்களது எல்லா ரகசிய பைல்களையும் அவர் திறந்து விடுவார். பாதுகாப்பு கருதி, பலர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பாஸ்வேர்டுகளை வைப்பார்கள். இதுதான் சிறந்த முறை. ஆனால் அவ்வளவு பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைப்பது கடினமான காரியம்.அந்த பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பது முக்கியம். அவர்களுக்கு உதவிடும் பொருட்டு இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது. சில வழிகளை இங்கு காணலாம். எல்லாமே இலவசம்.விண் ஜிப்: உங்களது லாகின் பெயர்களை பாஸ்வேர்டுகளை எல்லாம் ஒரு டெக்ஸ்ட் பைலில் டைப் செய்து அந்த டெக்ஸ்ட் பைலை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Win Zip (www.winzip.com) சாப்ட்வேர் கொண்டு என்கிரிப்ட் செய்யலாம். 256 பிட் AES என்கிரிப்ஷனை விண்ஜிப்பில் பயன்படுத்த முடியும். இந்த டெக்ஸ்ட் பைலை பிளாப்பியிலோ அல்லது யுஎஸ்பி பென் டிரைவிலோ ((Pen drive) ) சேமியுங்கள். வெளியில் செல்லும் போதெல்லாம் பிளாப்பியை அல்லது யுஎஸ்பி பென் டிரைவை கையில் எடுத்துச் செல்லுங்கள்.பைல் 2 பைல்: www. cryplomathic.com/file2file/ தளத்தில் நுழைந்து File2File என்ற இலவச என்கிரிப்ஷன் டூலைப் பயன்படுத்தி எல்லா பாஸ்வேர்ட் விவரங்கள் அடங்கிய டெக்ஸ்ட் பைலை என்கிரிப்ஷன் செய்யுங்கள். 128 பிட் AES என்கிரிப்ஷனை நீங்கள் பயன்படுத்த முடியும்.விண்டோஸின் என்டிஎப்எஸ்: விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி ஆகியவற்றில் NTFS பைல் சிஸ்டம் உண்டு. ஹார்ட் டிஸ்க்கின் ஒரு பார்ட்டிஷனை என்டிஎப்எஸ்ஸாக மாற்றி அங்கு ஒரு என்கிரிப்டட் போல்டரை உருவாக்கி விடுங்கள். பாஸ்வேர்ட் விவரங்கள் கொண்ட டெக்ஸ்ட் பைலை அந்த போல்டரில் போட்டு விடுங்கள்.வேர்ட் அல்லது எக்செல் பைல்: லாகின் பெயர்களையும், அவற்றிற்கான பாஸ்வேர்டுகளையும் ஒரு எக்செல் பைலில் அல்லது வேர்ட் பைலில் டைப் செய்யுங்கள். இனிமேல் இவற்றை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டாம். ஆனால் இந்த எக்செல் பைலை அல்லது வேர்ட் பைலை பாஸ்வேர்ட் கொடுத்து சேமியுங்கள். இந்த பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வையுங்கள். வேறு அக்கவுண்டிற்கான லாகின் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் தேவைப்பட்டால், பாஸ்வேர்ட் கொடுத்து இந்த எக்செல் அல்லது வேர்ட் பைலைத் திறந்து தெரிந்து கொள்ளுங்கள்.விஸ்பர் 32 : www.ivory.org தளத்தில் இருந்து Whisper32 என்ற இலவச சாப்ட்வேரை டவுன்லோடு செய்யுங்கள். இதில் உங்களது எல்லா பாஸ்வேர்டுகளையும் போட்டு வையுங்கள். என்கிரிப்ஷன் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.பாஸ்வேர்ட் சேப்: லாகின் பெயர்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை போட்டு வைக்க Password safe v1.7 என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம். ஆபீஸ் மற்றும் சொந்த அக்கவுண்டுகளின் விவரங்களை வெவ்வேறு டேட்டாபேஸில் போட முடியும் என்பது இதன் சிறப்பு. இதைப் பெற http://passwordsafe.sourceforge.net/ தளத்தில் நுழையுங்கள்.பாஸ்வேர்ட் கார்டியன்: இலவச சிறிய புரோகிரமான Password Guardian சாப்ட்வேரைப் பெற www.cryplocentral.com/html/passgrd.html என்ற தளத்தில் நுழையுங்கள். இந்த சாப்ட்வேரை நிறுவாமலே பயன்படுத்த முடியும். பிளாப்பியிலே இந்த சாப்ட்வேரையும், பாஸ்வேர்ட் பைலையும் பதித்து விடலாம்.ப்ரீ பாஸ்வேர்ட் கீப்பர் : Free Password Keeper என்ற இந்த சாப்ட்வேரை (http://swiss.torry.net/apps/utilitie...y/freepass.zip) டவுன்லோடு செய்து, அதை அண்ஜிப் செய்து, exe பைலை இயக்குங்கள். பாஸ்வேர்ட் விவரங்களை அது என்கிரிப்ட் செய்து காக்கும் ஆற்றல் கொண்டது. இந்த விவரங்களைப் பார்வையிட பாஸ்வேர்ட் தேவைப்படும். இமெயில் முகவரிகள், வெப் தளங்களின் முகவரிகள் போன்வற்றையும் இது காக்கும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத பல இலவச பாஸ்வேர்ட் பாதுகாப்பு சாப்ட்வேர்கள் உள்ளன. எதையாவது ஒன்றைப் பயன்படுத்தி பாஸ்வேர்டுகளை ரகசியமாக பாதுகாத்து வையுங்கள்.

Post Comment

புதிய தமிழ் சாப்ட்வேர்

New Horizon Media நிறுவனம் ஒரு புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கியிருக்கின்றார்கள்.உண்மையிலேயே அசத்தியிருக்கிறார்கள். இருவாரங்களாக NHM Writer மூலமாகத் தான் தமிழில் தட்டச்சிடுகிறேன். சுலபமாகவே இருக்கிறது. தங்கிலீஷில் தட்டச்சினால் கூட மற்ற சாப்ட்வேர்களுக்கும், பாண்டுகளுக்கும் மிக சுலபமாக கன்வெர்ட்டு செய்யமுடிகிறது.* மொத்த மென்பொருளுமே 850 KBக்குள் இருப்பதால் தடாலடியாக டவுன்லோடு ஆகிறது. ஓரிரு நொடிகளில் கணினியில் நிறுவப்படுகிறது.* வேகம், வேகம், அதிரடி வேகம் - இதுவே இந்த மென்பொருளின் சிறப்பம்சம். ஒரு பெரிய கட்டுரையை பாண்டு கன்வெர்ட்டு செய்ய இனிமேல் தாவூ தீர்ந்துப் போய் உட்காரவேண்டியதில்லை. டவுசர் அவுக்கும் வேகத்தில் NHM Converter மூலமாக பைபிளை கூட கன்வெர்டு செய்யமுடியும்.* என்னைப் போன்ற தொழில்நுட்ப அறிவிலிகளுக்கு Regional Language Support போன்ற வார்த்தைகளை கண்டதுமே காண்டு ஆகிவிடும். யாராவது தொழில்நுட்பம் தெரிந்தவரை வரவழைத்து ஒரிஜினல் (?) சிடி கொண்டு Install செய்யவேண்டும். அதுபோன்ற தொல்லைகள் எதுவுமில்லாமல் இந்த மென்பொருளை நிறுவினால் அதுவே இந்த கச்சடா வேலைகளை கவனித்துக் கொள்ளுகிறது. நோகாமல் நோன்பு கும்பிடலாம்.* தமிழ்99, தங்கிலீஷு, டைப்ரைட்டிங் தமிழ், பாமினி என்று ஐந்துமுறைகளிலும் மிக சுலபமாக தட்டச்சலாம். அதுமட்டுமில்லாமல் Bamini, Diacritic, Shreelipi, Softview, Tab, Tam, TSCII, Vanavil and Unicode ஆகிய கும்மிகளின் எழுத்துருக்களையும் பயன்படுத்த முடியும் என்பதால் DTP தொழில் மற்றும் பதிப்பகத் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.* Key Preview வசதி இருப்பதால் செம தூளாக இருக்கிறது.* இது மிக விரைவில் ஓபன் சோர்ஸோ என்னவோ, ஏதோ ஒரு டெக்னிக்கல் டெர்ம் சொன்னார்கள். அந்த முறையில் வெளிவர இருப்பதால் உலகத்தில் இருக்கும் எந்த மொழியையும் மிக சுலபமாக உள்ளீடு செய்து தட்டச்சலாம் என்றார்கள்.* இந்தப் புத்தகக் கண்காட்சியில் இந்த மென்பொருள் சிடி வடிவில் (மிகக் குறைந்த விலையில்) உலகத் தமிழர்களை சென்றடையப் போகிறது என்றும் அறிவிக்கப்பட்டது.* எல்லாவற்றையும் விட மிகப்பெரிய விஷயம். இதை இலவசமாகவே பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்கள். New Horizon Media நிறுவனத்தின் பதிப்பக வேலைகளுக்காக துட்டு செலவு செய்து தயார் செய்யப்பட்ட இந்த மென்பொருளை இலவசமாக எல்லோருக்கும் வழங்கும் முடிவு எடுத்த திரு. பத்ரி அவர்களுக்கும், இரவு-பகலாக உழைத்து அட்டகாசமான மென்பொருளை உருவாக்கிய திரு. நாகராஜ் அவர்களுக்கு நன்றி கூற தமிழ்தட்டச்சும் நல்லுலகம் கடமைப்பட்டிருக்கிறது.For Link and Download the Software

Post Comment