Wednesday 30 January 2008

இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள்


இன்று இணையத்தில் பல செயலிகளை (programs) இலவசமாக அல்லது ஒரு குறிக்கப்பட்ட கால எல்லை வரைக்கும் பாவிக்கக் கூடியவகையில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது.
ஒருமென்பொருளைத் தயாரித்து வெளியில் விடுவதற்கு ஒரு கணிசமான அளவில் செலவு ஏற்படும். ஆனால் அந்த மென்பொருளை இலவசமாக பாவனையாளர்களுக்கு வழங்குவதனால் அங்கு எந்தவிதத்திலும் உற்பத்திச்செலவை திரும்ப பெற்றுக்கொள்ளக்க கூடிய வாய்ப்பில்லை.
எனவே இவ்வாறான இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அந்த மென்பொருட்களுடன் சில கட்டளைத்தொகுப்புகளையும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இனி நாங்கள் இவ்வாறான இலவச செயலிகளை பாவிக்கின்ற போது இடையிடையே தான்தோன்றி சாளரங்கள் (pop-up windows) மூலமும் பட்டைகள் (banners) மூலமும் விளம்பரங்கள் மாறிமாறி அடிக்கடி எமது திரையில் தென்படும். இவ்விளம்பரங்கள் மூலம் இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அவற்றிற்கான உற்பத்திச்செலவை திரும்ப பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு ஒரு செயலி இயங்கிக்கொண்டு இருக்கின்ற பொழுது, தான்தோன்றி சாளரங்கள் மூலமும் பட்டைகள் மூலமும் விளம்பரங்கள் மாறிமாறி அடிக்கடி எமது திரையில் விழுவதுபோல் செய்யப்பட்ட மென்பொருள் ADWARE என அழைக்கப்படும்.
ஆனால் இவ்வாறான செயலிகள் உங்களைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் நீங்கள் கணணியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் அவதானித்து அவற்றை உங்களுக்குத்தெரியாமல் அல்லது உங்கள் அனுமதி இல்லாமல் மூன்றாம் நபர்களுக்கு அனுப்பக்கூடிய கட்டளைத்தொகுப்புகளையும் தன்னுள் உள்ளடக்கி இருக்கின்றன.
இனி SPYWARE என்றால் என்னவென்று பார்ப்போம். நாங்கள் இணையத்தில் தொடுத்து இருக்கின்ற வேளையில் எமக்குத் தெரியாமல் எமது அனுமதி இன்றி எம்மைப்பற்றிய தகவல்களை சேகரித்து பின்வழியால் (back channel)வேறுபட்ட நிறுவனங்களுக்கும் விளம்பரதாரருக்கும் அனுப்பிவைக்கும் தொழில்நுட்ப மென்பொருள் SPYWARE எனப்படும்.
இவ்வாறான உளவுபார்க்கும் கட்டளைக்கோப்பகளை முற்றாக எமது கணணியிலிந்து நீக்கி எமது கணணியை சுத்தப்படத்த பின்வரும் SPYBOT SEARCH AND DESTROY மென்பொருளை நீங்கள் பாவிக்கலாம்.

Post Comment

0 comments: