Tuesday 21 September 2010

அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver

நாம் கணினியில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம் முழுவதும் செய்து முடித்துவிட்டு தெரியாமல் Save செய்யாமல் மூடிவிடுவோம். அல்லது நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறால் திடீரென நம் கணினி முடங்கி நிற்கும் அந்த சமயத்தில் நாம் Endtask செய்தோ அல்லது கணினியை Restart செய்தோ திரும்பவும் கணினியை இயங்கும் நிலைக்கு கொண்டு வரும் அப்படி வரும்போது நாம் கணினியில் கடைசியாக செய்த வேலை Save செய்ய மறந்திருப்போம் இது போல சமயங்களில் இந்த மென்பொருள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.


பயன்கள் :
  • இந்த மென்பொருளை உபயோகிப்பதால் நாம் ஒவ்வொரு முறையும் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • நாம் எந்த ப்ரோக்ராமில் வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அது தானாகவே சேமிக்க படும்.
  • இந்த மென்பொருளை Install செய்ய தேவையில்லை, நேரடியாக இயக்கி கொள்ளலாம்.
  • சிறிய அளவே உடையது(768 kb) .தரவிறக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து பின்னர் வரும் AutoSaver என்ற பைலை நேரடியாக உபயோகிக்கலாம்(Install செய்ய வேண்டியதில்லை). அந்த பைலை இயக்கினால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

  • Save Interval: இந்த விண்டோவில் நீங்கள் உங்கள் உங்கள் பக்கங்களை Save செய்வதற்கான நேர இடைவெளியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள், இதில் குறைந்தது 15 வினாடிகள் வரை தேர்வு செய்யலாம்.
  • Run Windows Starts : இது உங்களுக்கு தேவையென்றால் தேர்வு செய்து கொள்ளலாம் இல்லையேல் விட்டு விடலாம். இதை தேர்வு செய்தால் உங்கள் கணினி துவக்கியதும் இது தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.
  • முடிவில் Hide என்பதை கிளிக் செய்தவுடன் அந்த மென்பொருள் மறைந்து விடும். இயங்க ஆரம்பிக்கும்.
அவ்வளவு தான் இனி நீங்கள் தேர்வு செய்த நேர இடைவெளிக்கு ஒருமுறை நீங்கள் எந்த ப்ரோக்ராமில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அது தானகவே Save செய்து விடும் இனி நீங்கள் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.

Important Note : நீங்கள் Browsing ஆரம்பிப்பதற்கு முன்னாள் இந்த மென்பொருளை நிறுத்தி விடுங்கள். இல்லையேல் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வலை பக்கங்களையும் சேமிக்க ஆரம்பிக்கும். அப்புறம் தேவை படும் போது இயக்கி கொள்ளுங்கள்.

Post Comment

உங்கள் கணினியை வேகமாகவும் சிறப்பாகவும் Defragment செய்ய

நாம் கணினியில் பல வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது நமக்கு தேவையானதை நம் கணினியில் சேமித்து வைத்து கொள்வோம். அப்படி நாம் கணினியில் சேமிக்கும் போது நம் கணினி ஒரு பைலை சிறு சிறு பகுதிகளாக பிரித்து நம் கணினியின் வெவ்வேறான பகுதிகளில் சேமித்து விடுகிறது. திரும்பவும் நாம் அந்த பைலை ஓபன் செய்யும் போது நம் கணினி சேமித்து வைத்த இடங்களில் இருந்து அலைந்து திரிந்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நமக்கு கொடுக்கிறது. நாம் பைலை ஓபன் செய்யும் நேரம் ஆவதற்கு இது தான் காரணம்.


அதற்கு நாம் இந்த Defragmented செய்யும் போது வெவேறான பகுதிகளில் உள்ள சிறு சிறு பகுதிகளை ஒன்றாக ஒரே இடத்தில் சேர்த்து வைக்கும். நாம் ஒவ்வொரு பைலை திறக்கும் போதும் நம் கணினி அலைந்து திரிய வேண்டியதில்லை ஒரே இடத்தில் இருந்த நமக்கு தகவலை தரும். நமக்கும் விரைவாக நமக்கு வேண்டிய பைலை ஓபன் செய்து கொள்ளலாம்.
Photobucket
நம் கணினியிலேயே Defragment செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஆமை வேகத்திலும் சிறப்பாகவும் செயல் படுவதில்லை. அதற்கு தான் இந்த மென்பொருளின் உதவி நமக்கு தேவை படுதிறது.
பயன் படுத்தும் முறை:
  • இந்த மென்பொருளை தரவிறக்கி வரும் .rar பைலை extract செய்து கொள்ளுங்கள்.
  • வரும் .exe பைலை இரண்டு க்ளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
  • இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் நீங்கள் Defragment செய்யவேண்டிய டிரைவ் செலக்ட் செய்து கொண்டு கீழே உள்ள Alalyze என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்கள் டிரைவ் ஸ்கேன் ஆகி உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதற்கு அடுத்து அருகில் உள்ள Defrag என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த டிரைவ் Defragment ஆகிவரும்.
  • இதில் ஒவ்வொரு முறையும் நீங்கள் Degfrag செய்யவேண்டிய அவசியமில்லை. அதில் உள்ள Auto Defragmentation என்ற வசதியை தேர்ந்தெடுத்து உங்களுக்கு தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்துகொள்ளவும்.
  • இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் சென்று Defrag செய்ய வேண்டிய அவசியமில்லை நீங்கள் தேர்ந்தெடுத்த வசதிகேற்ப அது தானகவே Defrag செய்து விடும். உங்கள் கணினியும் வேகமாக செயல் படும்.

Post Comment

உங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய மென்பொருள்

இந்த கணினி உலகில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள Desktop கணினிகள் திருடப்படுவதை விட லேப்டாப் தான் அதிக அல்வாவு திருடப்படுகிறது ஏனென்றால் பாக்கெட்டில் வைத்து செல்லும் அளவிற்கு கூட தற்போது லேப்டாப்கள் வந்துவிட்டன. இதனால் திருடப்படுவதும் நாளுக்கு நாள் வசதியாகி விட்டது. இந்த பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு உதவுகிறது.
மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருள் நம் கணினி திருடப்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது.
  • இந்த மென்பொருள் மிகச்சிறிய அளவே உடையது (968kb).
  • இதில் Theft alarm மட்டுமின்றி Battery Alarm உள்ளது. இது நம் லேப்டாப்பின் பேட்டரி குறைந்தால் நமக்கு தெரிய படுத்துகிறது.
  • இதில் உள்ள மற்றொரு சேவையானது health Alarm. இந்த வசதி நாம் கொடுக்கப்படும் நேர இடைவெளிக்கு ஏற்ப நமக்கு உடலிற்கு ஒய்வு தேவை போன்ற செய்திகளை தரும்.
  • Disk Alarm, Permitter Alarm, Intention Alarm, Panic alarm போன்றவை இதர பிற வசதிகளாகும்.
  • இவைகள் தேவைபட்டாலும் நீங்கள் Activate செய்து கொள்ளுங்கள்.
இன்ஸ்டால் செய்யும் முறை :
  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களக்கு L Alarm57.exe என்ற பைல் வரும் அந்த பைலை இரண்டு முறை கிளிக் செய்யுங்கள்.
  • வரும் விண்டோவில் Run பட்டனை அழுத்துங்கள்.
  • அதற்கு அடுத்து வரும் விண்டோவில் Read Manual என்ற பட்டனை அழுத்தவும்.
  • அதில் இந்த மென்பொருளின் அனைத்து விளக்கங்களும் சிறப்பம்சங்களும் செயல் படுத்தும் முறைகளும் விளக்கமாக கொடுத்து இருப்பார்கள் அதை கண்டிப்பாக பார்த்துகொள்ளவும்.
  • அடுத்து Install என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Read Licence Agreement என்பதில் Agree என்று கொடுக்கவும்.
  • அடுத்து உங்களுக்கு Authorization Code கேட்கும். அதில் நீங்கள் எதுவும் கொடுக்காமல் Ok மட்டும் கொடுங்கள்.
  • அவ்வளவு தான் உங்கள் கணினியில் L Alarm இன்ஸ்டால் ஆகி விடும்.
  • உங்கள் கணினியை ஒருமுறை Restart செய்து விடவும்.
பயன் படுத்தும் முறை:
  • உங்கள் கணினியில் Start - Programs - L Alarm - Options செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.(இதில் நிறைய வசதிகள் உள்ளது அனைத்தையும் விளக்க நேரமில்லாததால் முக்கியமானதை மட்டும் தெரிவிக்கிறேன். முன்பு கூறியது போல் Read manual பகுதிக்கு சென்று அனைத்தையும் பார்த்து கொள்ளவும்).
  • இதில் Sound என்பதை கிளிக் செய்யவும்.
  • அதற்கு பிறகு Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள .Mp3 (or) .Wav பைலை செலக்ட் செய்யவும்.
  • உங்களுக்கு அது போல பைல்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். Need Sound Files என்ற வசதியை அவர்களே கொடுத்து உள்ளார்கள். அதில் சென்று தரவிறக்கி இங்கு பொருத்துங்கள்.
  • உங்களுக்கு எந்தெந்த எந்தெந்த Alarm தேவை படுகிறதோ அதை பொருத்துங்கள்.
  • கடைசியில் உள்ள Armed என்ற இடத்தில் கண்டிப்பாக ஏதேனும் சவுண்ட் கொடுக்க வேண்டும்.
  • முடிவில் Ok கொடுத்து வெளியில் வந்து விடுங்கள்.
  • இப்பொழுது நீங்கள் கணினியில் இருந்து விலக நேரிட்டால் Windows+L கீயை ஒன்றாக அழுத்திவிட்டு செல்லவும்.
  • இப்பொழுது யாராவது வந்து இந்த கணினியின் Power கேபிளை பிடுங்கினால் போதும் உடனே உங்கள் கணினி நீங்கள் theft Alarm செலக்ட் செய்த சவுண்டில் அடிக்க துவங்கி விடும்.

Post Comment

உங்கள் கணினிக்கு இலவசமாக பராமரிக்கும் சேவை



……………………………………….

நம் கணினியின் செயல்பாடு நன்றாக இருக்கவேண்டும் எனில் அதன் பராமரிப்பு முக்கியம். கணினியை தொடர்ந்து உபயோகிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல்பாடு குறைய தொடங்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.முக்கியமாக registry errors, fragmented disk, உல் நுழையும்போது செயல்படும் தேவையற்ற செயல்பாடுகள்( unwanted startup processes ), unoptimized RAM மற்றும் இன்னும் பல.

இந்த குறைப்பாடை தனி தனியாக சரி செய்ய பல இலவச மென்பொருட்கள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் சரிசெய்ய சில இலவச மென்பொருட்கள் மட்டுமே உள்ளன.

அதில் விண்டோஸ் இலவச செயலி Brother System care உங்கள் கணினியை நன்றாக பராமரிக்கும். இது பலவகை செயல்பாடுகளை செய்யவல்லது.

கணினி செயல்பாட்டை பார்க்க வல்லது, (scanning)வருடுதல், registry தவறுகளை நீக்ககூடியது , பலவித கணினி பொருட்கலின் செயல்பாட்டை கவனிக்க வல்லது , கணினி கட்டமைப்பு வசதி, (Hard Disk)கணினி வன்வட்டு, RAM ஆகியவற்றின் செயல்பாடுகளை அதிகரிக்க வல்லது, மேலும் பலவற்றை செய்யக் கூடியது.

இதை இணையத்தில் இருந்து எடுக்க இங்கு அழுத்தவும்

__________________________________________

Post Comment

உங்கள் CD மற்றும் DVD ரெக்கார்டிங் செய்ய மேலும் ஒரு இலவச மென்பொருள் INSCRIPTIO

___________________

பெரும்பாலனோர் கணினியில் DATA , AUDIO மற்றும் VIDEO டிஸ்குகளை ரெக்கார்டிங் செய்ய உபயோகிக்கும் மென்பொருள் Nero. இதற்கு மாற்று பல மென்பொருட்கள் உள்ளன அவற்றுள் ஒன்று இந்த INSCRIPTIO இலவச மென்பொருள். விண்டோஸ் தடத்தில் வேலை செய்யும் இந்த Inscriptio இலவச மென்பொருள் வேகமானதும் மற்றும் நம்பகமானதும் ஆகும்.

இதில் DATA , AUDIO மற்றும் VIDEO டிஸ்குகளை எளிதாக ரெக்கார்டிங் செய்யலாம். எளிய வகையில் புரியும் Interface (இடைமுகம்). தகவல்களை உங்கள் கணினியில் இருந்து இழுத்து மென்பொருளில் போட்டு ரெக்கார்டிங் செய்யலாம்

Dual-Layer DVD மற்றும் Reweitable Discs எழுத துணை நிற்கும். Inscriptio விண்டோசின் பிரபல ஆப்பெரடிங் சிஸ்டம் விண்டோஸ் XP, Vista ,மற்றும் 7 ஆகியவற்றில் வேலை செய்யும்.

இணையத்தில் இருந்து நேரடியாக எடுக்க இங்கு செல்லவும்
Inscriptio இணையதளம்

Inscriptio Installer (2.16 MB)

____

Post Comment

Hard Disk கின் அழிந்த தகவல்களை மீட்டு எடுக்கும் எளிய மென்பொருட்கள்..

_______________

கணினி ஒரு திறமைவாய்ந்த கண்டுபிடிப்புதான். இருந்தாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் தகவல்களை இழக்க கூடியது. இன்றைய காலத்தில் கணினி இல்லாமல் மனிதன் வாழ்கை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பயன்பாடு அதிகம் ஆகிவிட்டது.

மனிதனுடைய வாழ்நாள் தகவல்கள் அனைத்தையும் கணினியில் சேமிக்கும் காலம் வெகுதூரம் இல்லை. இன்னிலையில் Hard Drive வில் சேமித்து வைக்கும் தகவல்கள், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இழக்க நேரிட்டால் என்னவாகும். கணினி உபயோகிக்கும் பலர் இந்த அனுபவத்தை அடைந்து இருப்பீர்கள்.

கணினி அனுபவம் உள்ளவர்கள் சிலர் பாதிக்க பட்ட அந்த Hard disk கை தகவல்களை மீட்டு எடுத்து கொடுக்கும் நிறுவனங்களில் கொடுத்து மீட்டு இருப்பீர்கள். தகவல்களை மீட்டு எடுக்கும் சில மென்பொருட்கள் உள்ளன. இவற்றை கொண்டு நீங்களே தகவல்களை எளிதாக மீட்டு எடுக்கலாம்.

கணினியில் இருந்து தகவல்கள் அழிந்து போவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எந்த வகையிலேனும் நீங்கள் இழந்து இருந்தால் பரவாயில்லை. இந்த மென்பொருட்களை கொண்டு 90 -100 % வரை மீட்டு எடுக்கலாம். மீட்டு எடுக்கும் தகவல்களை வேறு இடத்தில சேமிப்பது நல்லது தகவல்களை மீட்டு எடுக்கும் சில முன்னணி மென்பொருட்களை இங்கு உங்களுக்கு தெரிவிக்கிறேன்

Digital Rescue Premium 3.1 —————->Digital Rescue Premium 3.1 box shot

Advanced Disk Recovery—————->Advanced Disk Recovery box shot

Recover My Files—————->Recover My Files 4.6 box shot

Data Recovery Wizard-—————>Data Recovery Wizard 5.0.1 box shot

Total Recall 1.1-—————>Total Recall 1.1 box shot

Handy Recovery 4-—————>Handy Recovery 4 box shot

Disk Doctors Windows Data Recovery-—————>Disk Doctors Windows Data Recovery 2.0.1 box shot

R-Studio 5.2—————->R-Studio 5.2 box shot

Quick Recovery—————->Quick Recovery box shot

GetDataBack 4.01-—————>GetDataBack 4.01 box shot


மேலே உள்ள எதுவும் இலவச மென்பொருட்கள் இல்லை. எனினும் இதனுடைய crack version நீங்கள் இணையத்தில் தேடினால் கிடைக்கும்.
இவற்றில் எனக்கு பிடித்தது Recover My Files மென்பொருள். இனி Hard Disk கின் தகவல்களை இழந்தால் கவலை வேண்டாம்.

Post Comment


உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

1.Eraser


தரவிறக்கச்சுட்டி :
http://sourceforge.net/projects/eraser/files/Eraser/Eraser-5.8.7_setup.exe/download

2.Kill Disk

தரவிறக்கச்சுட்டி : http://www.killdisk.com/
நன்றி வணக்கம் !

தொடர்புடைய பதிவு :
அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்


Post Comment


டிசைனராக பணிபுரியும் தோழி ஒருவர் Coreldraw மென்பொருள் வேலை செய்யவில்லை என்றும் அவசரமாக அதை பயன்படுத்த வழி இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார். நான் உடனடியாக Coreldraw வின் கையடக்க பதிப்பை (Portable Edition ) தரவிறக்கி கொடுத்தவுடன்
மகிழ்ந்தார். மேலும் நிற்காமல் DTP ( Desktop Publishing ) துறையில் பயன்படும் மூன்று மென்பொருள்களான Coreldraw, Photoshop, Pagemaker போன்றவற்றை கையடக்கமான வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப சுட்டிகளை தேடிப்பிடித்து விட்டேன். உங்களுக்கும் உபயோகப்படுமல்லவா?

இவற்றில் ஒரு வசதி உள்ளது. கையடக்க மென்பொருளை விரித்து
( Extract ) கணினியில் நிறுவத்தேவையில்லை. அப்படியே அதன் .Exe கோப்பை இயக்கி பயன்படுத்தலாம். எங்கு வேண்டுமானாலும் கொண்டு
சென்று பயன்படுத்தலாம். அவசரத்திற்கு கண்டிப்பாக பயன்படும். உங்கள் நண்பரின் கணினியில் photoshop இல்லாவிட்டாலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இயக்கி படங்களை பார்வை இடலாம். மாற்றங்கள் செய்யலாம்.

Corel Draw X3 ( 34 MB )


தரவிறக்கசுட்டி:
http://www.4shared.com/file/25523572/dedbf292/PORTABLE_CorelDRAW_X3_with_SP2.html


Adobe Photoshop CS4 ( 68 MB )

தரவிறக்கசுட்டி:
http://ezuploads.info/dll/jd39ky
Password : www.fullandfree.info

Adobe Pagemaker 7.02 (50 MB)



தரவிறக்கசுட்டி:
http://www.megaupload.com/?d=CGQWJ6YX

Post Comment


நண்பர்கள் சிலர் ஒரு முழு mp3 பாடலில் இருந்து குறிப்பிட்ட வரிகளை மட்டும் வெட்டி எடுத்து பயன்படுத்த விரும்புவார்கள். சில நேரம் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சிறுபாடல்களை இணைத்து முழு பாடலாக மாற்ற விரும்புவார்கள். கல்லூரி நிகழ்ச்சிகளில் ஆடல்பாடல்களில் பல பாடல்களை கோர்வையாக ஒளிபரப்பி நாடகம் போடுவார்கள். இந்த நேரத்தில் நமக்கு உதவும் மென்பொருள் தான் Mp3 Split and Joiner.

இந்த மென்பொருளை வைத்து விரும்பிய இடத்தில வெட்டிக்கொள்ளலாம். வெட்டிய சிறிய பாட்டை செல்போன்களில் ரிங்க்டோனாக ( mobile ringtone ) வைத்துக்கொள்ளலாம். விரும்பிய இசைக்கோர்வைகளை ஒன்றாக இணைத்துக்கொள்ளலாம்.

இதில் எளிதான வகையில் விரைவான நேரத்தில் கட் செய்யலாம். கோப்புகளை இழுத்து ( drog and drop )அதன் விண்டோவில் விட்டு விடலாம். மேலும் ஒரே நேரத்தில் பல கோப்புகளை மாற்றும் Batch Splitting வசதியும் உள்ளது.

இது விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களிலும் வேலை செய்யும்.

தரவிறக்கச்சுட்டி: http://www.mp3-joiner.net/Files/MJSSetup.exe


Post Comment

அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.


கணினிகளில் பெரும்பாலும் யுஎஸ்பி மூலம் வைரஸ் தாக்கம்
அதிகமாக இருந்து வருகிறது. கணினியில் நம் அனுமதி இல்லாமல்
யுஎஸ்பி பயன்படுத்துவதைத் தடுக்க ஒரு இலவச மென்பொருள்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.


பள்ளி முதல் கல்லூரி வரை அனைவரின் கணினியிலும் அனுமதி
இல்லாமல் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க ஒரு இலவச
மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் நம் கணினியில்
யாரவது யுஎஸ்பி டிரைவ் மாட்டினால் உடனடியாக கடவுச்சொல்
கேட்கும் 10 நொடிகளுக்குள் கடவுச்சொல் ஏதும் கொடுக்கவில்லை
என்றால் அலாரம் மூலம் நமக்கு உணர்த்தும். இப்போதைய
சூழ்நிலையில் கண்டிப்பாக நம் அனைவருக்கும் தேவையான
மென்பொருள். இந்த சுட்டியை சொடுக்கி இந்த மென்பொருளை
தரவிரக்கிக்கொள்ளலாம்.

Download


இந்த மென்பொருளைப் பயன்படுத்தி யுஎஸ்பி டிரைவ் – ஐ கணினியில்
நம் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாத வண்ணம் செய்யலாம்.




Post Comment

எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட்


நம் நாட்டில் இருந்து எந்த நாட்டின் அலைபேசிக்கு பேசினாலும்
நிமிடத்திற்கு 1C என்று அறிவித்துள்ளது ஃபிரிங் இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.

இணையத்தில் இருந்து தொலைபேசிக்கு பேச வேண்டும் என்றால்
அதிகமான மக்கள் நாடுவது ஸ்கைப் மட்டும் தான் ஆனால்
இப்போது ஸ்கைப் -க்கு நேரடியாக சவால் விடும் வகையில் ஃபிரிங்
என்ற நிறுவனம் உலகத்தின் எந்த நாட்டு அலைபேசியில் இருந்து
எந்த நாட்டு அலைபேசிக்கு பேசினாலும் நிமிடத்திற்கு 1C சென்ட்
அளவில் தான் கட்டணம் வசூலிக்கின்றனர். ஏற்கனவே கூகுள்
வாய்ஸ் -ல் இருந்து எப்படி நாம் முன்னுக்கு வரலாம் என்று
நினைத்துக்கொண்டிருந்த ஸ்கைப்-க்கு அடுத்தக்கட்ட போட்டியாக
ஃபிரிங் வந்துள்ளது. ஃபிரிங் சேவையில் இருந்து இரண்டு நாட்களுக்கு
முன் அனைவரும் எதிர்பார்த்தது போலவே எந்த நாட்டிற்கு
பேசினாலும் நிமிடத்திற்கு 1C சற்றே ஆச்சர்யம் கொடுக்கும்
சேவையை அறிமுகப்படுத்தியுள்ள்னர். இதைத்தவிர இன்னும் பல
சேவைகளையும் கொடுக்கின்றனர். இதைப்பற்றிய முழுவிபரங்கள்
அறிய ஃபிரிங் தளத்தின் இந்த முகவரியைச் சொடுக்கவும்.

முகவரி : http://www.fring.com/blogs/

Post Comment




இது ஒரு Messenger மென்பொருளாகும். இந்த மென்பொருளானது AOL, Yahoo, MSN, ICQ, GoogleChat ஆகியவற்றை சப்போர்ட் செய்யகூடியது ஆகும்.

Post Comment

MS-ஆப்பிஸ் 2010 யை விண்டோஸ் XP சர்விஸ்பேக் 2வில் இன்ஸ்டால் செய்ய

புதிதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆப்பிஸ்-2010 தொகுப்பை விண்டோஸ்-XP சர்விஸ்பேக் 2 வில் இண்ஸ்டால் செய்ய இயலாது. இந்த ஆப்பிஸ் 2010 யை XP-SP3,Vista,Windows 7 போன்றவற்றில் மட்டுமே இன்ஸ்டால் செய்ய இயலும். நாம் XP-SP2 வில் இன்ஸ்டால் செய்ய முயன்றால்


Setup is unable to proceed due to the following error(s): The installation of Microsoft Office 2010 requires that MSXML version 6.10.1129.0 be installed on your computer Install this component and re-run the setup. Correct the issue(s) listed above and re-run the setup.


இது போன்ற பிழை செய்தி வரும். இதற்கு காரணம் MSXML version 3.10.1129.0 விண்டோஸ்-XP சர்விஸ் பேக்2 வில் இல்லாமல் இருபதே காரணம் ஆகும்.

இந்த MSXML யை தரவிறக்கி நிறுவிவிட்டால் OFFICE-2010 யை கணினியில் நிறுவிவிட முடியும்.


இந்த MSXML பதிவிறக்கி இன்ஸ்டால் செய்த பிறகு OFFICE-2010 யை தாராளமாக XP-சர்விஸ் பேக் 2 விலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.

Post Comment

விண்டோஸ்க்கு ட்ரைவர் இல்லையா!

பெரும்பாலோரால் பயன்படுத்தபட்டுவரும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒஎஸ்கள் ஆகும். அதுவும் எக்ஸ்பி இன்றவும் அதிகமாக பயன்படுத்தபட்டு வருகின்றன. இந்த ஆப்ரேட்ங் சிஸ்ட்டங்கள் ஒரு சில நேரத்தில் ஹேக்கர்களுக்கு பலிகெடாய் ஆகிவிடும். வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி முடங்கிவிடும். சரி நேராக விஷயத்திற்கு வந்து விடுகிறேன். என்னத்தான் சிஸ்டத்தை பார்மெட் செய்தாலோ புதிதாக ஒஎஸ் போட்டாலோ சிஸ்ட்டத்தில் உள்ள Data வினை பேக்அப் செய்து கொள்வோம். அதே போல நமது கணினியில் நிறுவப்பட்டிருக்கும் டிரைவர்களையும் பேக்அப் செய்து கொள்ள கூடிய மென்பொருள்கள் சந்தையில் இலவசமாக கிடைக்கிறன. இவைகள் நாம் டிரைவர்களை தனியே பேக்அப் செய்து மீண்டும் அதனை நிறுவிகொள்ள முடியும். இதன் மூலம் யாராவது புதிதாக பழைய கண்னி வாங்கியிருந்தால் அதற்கு தனியே டிரைவர்களை தேடி அழைய வேண்டிய அவசியமில்லை உங்கள் கணிப்பொறியில் இருந்து டிரைவர்களை பேக்அப் செய்து பிறகு மற்றொரு கண்னியில் நிறுவி கொள்ள முடியும்.


சிறந்த ஐந்து Driver Backup மென்பொருள்கள்:
1. Double Driver:



இது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா,7 (32பிட்,64பிட்) ஆகியவற்றில் இயங்க கூடியது ஆகும். இந்த மென்பொருளானது டிரைவர்களை ஸ்கேன் செய்து காட்ட கூடியது ஆகும். இதிலிருந்து வேண்டிய மென்பொருளினை மட்டும் தேர்வு செய்து பேக்அப் செய்து கொள்ள முடியும். மேலும் இது ஒரு Freeware அப்ளிகேஷன் ஆகும்.

Download Double Driver

2. Driver Backup! 2:


Driver Backup 2 மெபொருளானது ஒரு ஒப்பன்சோர்ஸ் மென்பொருளாகும், இதில் மூன்று வகையான டிரைவர் பேக்அப் வகைகள் உள்ளன. இந்த மென்பொருளானது போர்ட்டபுல் மென்பொருளாகவும் கிடைக்கிறன. இந்த மென்பொருளானது விஸ்டா மற்றும் எக்ஸ்பி ஆகியவற்றில் இயங்க கூடியதாகும்.


3. Driver Magician Lite:


இந்த மென்பொருளும் ஒரு Freeware அப்ளிகேஷன் ஆகும், இது போர்ட்டபுல் மென்பொருளாகவும் கிடைக்கிறது. இந்த அப்ளிகேசன் மூலம் விரைவாக டிரைவர்களை பேக்அப் செய்ய இயலும்.

Download DriverMagicianLite

4. DriverGuide Toolkit:


DriverGuide Toolkit மென்பொருளானது கண்னியில் இருக்கும் டிரைவர்களை வரிசைபடுத்தி காட்டும் மேலும் இந்த மென்பொருளானது இணைய உதவியுடன் டிரைவர்களை அப்டேட் செய்ய கூடியது ஆகும்.

Download DriverGuideToolkit

5. DriverMax:



இந்த மெபொருளானது இணைய உதவியுடன் அப்டேட் மட்டும் அல்லாமல் புதிதாகவே டிரைவர்களை டவுண்லோட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் எக்ஸ்பி,விஸ்டா,7 (32பிட்,64பிட்),2003 போன்ற இயங்குதளத்தில் செயல்பட கூடியது ஆகும். இந்த மென்பொருளின் மூலம் விண்டோஸ் எக்ஸ்பி,விஸ்டா,7 ஆகியவற்றுக்கான டிரைவர்களை இணைய உதவியுடன் டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

Post Comment