Monday 20 September 2010

ப்ளாஷ் டிரைவில் பூட் பைல்

வைரஸ்களை நீக்கும் மற்றும் எதிர்த்து அழிக்கும் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், பல இலவச ஆபத்துக் கால சிஸ்டம் பூட் சிடிக்களைத் தருகின்றன.

ஏதேனும் வைரஸ் பாதிப்பால், சிஸ்டம் இயங்குவது முடங்கிப் போனால், உடனே இந்த ஆபத்துக்கால மீட்பு சிடிக்கள் மூலம் கம்ப்யூட்டரை இயக்கி, உள்ளே இருக்கும் வைரஸ் மற்றும் சார்ந்த கோப்புகளை அழித்து, நம் செயல்பாட்டினைத் தொடரலாம்.

இப்போது முதல் முறையாக, ஒரு பிளாஷ் ட்ரைவ் மூலம் இதே போன்ற ஆபத்துக்கால பாதுகாப்பு பயன்பாட்டினை ஒரு ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் தந்துள்ளது. இந்த வகையில் பிரபலமான காஸ்பெர்ஸ்கி (Kaspersky) நிறுவனம், அண்மையில் Kaspersky USB Rescue Disk Maker என்ற புரோகிராமினை வழங்குகிறது. இந்த புரோகிராம் மூலம், வைரஸால் சிஸ்டம் முடங்குகையில், கம்ப்யூட்டரை இயக்க, ஒரு பிளாஷ் ட்ரைவினை உருவாக்கி வைக்கலாம்.

Kaspersky Rescue Disk 10
என அழைக்கப்படும் இந்த சாதனம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் புரோகிராம்களை அழித்து, கம்ப்யூட்டரை பழைய இயங்கு நிலைக்குக் கொண்டு வருகிறது.

கம்ப்யூட்டரில் ஏற்கனவே பதியப்பட்டு இயங்கி வரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களால், பாதிப்பை உருவாக்கிய வைரஸ் புரோகிராம்களை ஒன்றும் செய்திட முடியவில்லை என்ற நிலைக்கு வந்த பின்னரே, இதனைப் பயன்படுத்த வேண்டும்.

இதன் கூடுதல் சிறப்பு இதனை ஒரு பிளாஷ் ட்ரைவில் உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்பதே. இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.

காஸ்பெர்ஸ்கி யு.எஸ்.பி. ரெஸ்க்யூ டிஸ்க்கினைத் தயார் செய்திட இரண்டு புரோகிராம்களை டவுண்லோட் செய்திட வேண்டும்.

1. அண்மையில் வெளிவந்த காஸ்பெர்ஸ்கி ரெஸ்க்யூ டிஸ்க் 10 க்கான ஐ.எஸ்.ஓ. இமேஜ். இதனை http://rescuedisk.kaspersky-labs.com/rescuedisk/updatable

2. இரண்டாவதாக, காஸ்பெர்ஸ்கி யு.எஸ்.பி. ரெஸ்க்யூ டிஸ்க் மேக்கர். இதனை http://rescuedisk. kaspersky-labs.com/rescuedisk/updatable/rescue2usb. exe

இவற்றைக் கொண்டு நாம் பாதுகாப்பினை அமைக்க இருக்கும் யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ் FAT16 அல்லது FAT32 பைல் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். என்.டி.எப்.எஸ். பைல் வகையினைக் கொண்டிருக்கக் கூடாது.

இந்த இரண்டு பைல்களையும் டவுண்லோட் செய்து, மேலே கூறியபடி பார்மட் செய்யப்பட்ட, எதுவும் எழுதப்படாத பிளாஷ் ட்ரைவ் ஒன்றையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி எப்படி இந்த ஆபத்துக் கால பாதுகாப்பு யு.எஸ்.பி. டிஸ்க்கினைத் தயார் செய்வது எனப் பார்ப்போம்.

1. முதலில் Kaspersky USB Rescue Disk Maker என்ற பைலை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

2.புரோகிராம் இன்டர்பேஸில், காஸ்பெர்ஸ்கி ரெஸ்க்யூ டிஸ்க் இமேஜைத் தேடிப் பெறுங்கள். பின்னர், இணைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி. ட்ரைவினை யும் தேர்ந்தெடுங்கள்.

3.இந்த ட்ரைவில் உள்ள பிளாஷ் ட்ரைவினைத்தான், ரெஸ்க்யூ ட்ரைவாக உருவாக்கிப் பயன்படுத்த இருக்கிறோம்.

4. ஸ்டார்ட் என்பதில் கிளிக் செய்தவுடன், ஐ.எஸ்.ஓ. இமேஜிலிருந்து தேவையான பைல்கள், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் காப்பி ஆகும். காப்பி செய்து முடித்தவுடன், பிளாஷ் ட்ரைவ் உங்கள் ஆபத்துக் கால நண்பனாக இருக்கும்.

இதனை ஒருமுறை இயக்கி சோதனை செய்து பார்த்து வைத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் சிஸ்டம் இயங்கும்படி செய்து, இது நோக்கத்திற்கேற்ற முறையில் செயல்படுகிறதா என்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதனை சிடி அல்லது டிவிடி யிலும் காப்பி செய்து வைத்துக் கொள்ளலாம் என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். என்ற முகவரியிலிருந்து பெறலாம்.


Post Comment

0 comments: