Tuesday 29 January 2008

இலவசமென்பொருள் தளவிறக்கம் செய்ய

இலவச மென்பொருள், :தளவிறக்கம் செய்ய
எனக்கு பிடித்த திறந்த மூலங்கள்-இலவச மென்பொருட்கள்.மிகவும் உபயோகமாக இருக்கின்ற சில மென்பொருட்களின் தொகுப்பு. இவையனைத்தும் திறந்த மூலம்/இலவசம் வகை சார்ந்தவை.
1. வின்மெர்ஜ்-WinMergeஇது இரண்டு ஃபைல்களை ஒப்பிட்டு பார்க்க பயன்படுத்தும் ஒரு திறந்த மூலம். மிக வேகமாக செயல்படுகிறது. ஒப்பிட்டு பார்க்கும் போது -ஏதேனும் மாற்றங்களை நீங்கள் செய்தால் ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்கிறது.கிடைக்கும் இடம்:http://winmerge.sourceforge.net/
2. மைஜெனரேஷன்.-MyGenerationநான் பார்த்ததிலேயே ஒரு மிக சிறந்த கோட் ஜெனரேட்டர். பொதுவாக கோட் ஜெனரேஷன் வகை டூல்கள் தங்களுக்குள் முன்னதாக டிஃபைன் பண்ண பட்டிருக்கும் லாஜிக் படி மொத்தமாக கோட் ஜெனரேட் பண்ணும். சில கமெர்ஷியல் ப்ராடக்ட்கள் ஒரு சில டிஎல் எல் ஃபைல்களை ரெஃபர் பண்ணி கோட் ஜெனரேட் பண்ணும். அதாவது பேஸ் க்ளாஸ் கோட் அந்த டி எல் எல் ஃபைல்களில் இருக்கும். அந்த கோட் என்ன என்பது நமக்கு தெரியாது. அந்த பேஸ் கிளாஸ்களை இவர்கள் இன் ஹேரிட் செய்து கோட் எழுதுவார்கள். இதனால் நீங்கள் ஒரு தேர்ட்பார்ட்டி டிஎல் எல்லை பயன்படுத்த வேண்டிய கட்டயாத்திற்கு உள்ளாக்க படுவீர்கள். ஆனால் இந்த இலவச மென்பொருள் டெம்ப்ளெட் பயன்படுத்தி கோட் ஜெனேரட் செய்கிறது. உங்கள் தோதுக்கு கோட் ஜெனெரேட் பண்ணலாம். ப்ளாக்கர் டெம்ப்ளேட்கள் நிறைய கிடைப்பது போல, இங்கும் நிறைய மாடல் டெம்ப்ளேட்கள் உள்ளன. எளிதாக பயன்படுத்தி மின்னல் வேகத்தில் ஆயிரக்கணக்கான லைன்களை ஜெனெரேட் பண்ணலாம். கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய டூல்.கிடைக்கும் இடம்:http://www.mygenerationsoftware.com/portal/default.aspx
3. ஆரெஸெஸ் பாப்பர்-RSS Popperஅவுட்லுக் பயன்படுத்துபவர்களுக்கான இலவச ஆர்ஸெஸ் ரீடர்.கிடைக்கும் இடம்:http://rsspopper.blogspot.com/
4. ஸ்லிக்ரன்-SlickRunநீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்கள், ஃபைல்கள், எக்ஸிக்யூட்டபிள்கள் அனைத்தையும் கீ-வேர்ட் பயன்படுத்தி லான்ஞ் பண்ண உதவும் டூல். பலவற்றை ஒரே கீ-வேர்ட் வைத்து திறக்கலாம். உதாரணமாக நான் காலையில் அலுவலகம் வந்த உடன் இதில் ஃப்ராஜக்ட் என்று அடிப்பேன். உடனடியாக டோட் (ஆரகிள் டூல்), அவுட்லுக், டெஸ்ட் டைரக்டர் , எக்ஸ்ப்ளோரர், கம்பெனி இன்ட்ரானெட் அனைத்தும் லான்ச்சாகி விடும்.கிடைக்கும் இடம்.http://www.bayden.com/SlickRun/
5.டு-டூ லிஸ்ட்-ToDo Listநீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிட ஒரு எளிமையான டூல். திறந்த மென்பொருள் வகை சார்ந்தது.கிடைக்கும் இடம்:http://www.abstractspoon.com/

Post Comment

0 comments: