Tuesday 29 January 2008

Flock

Flock
சமீபக்காலமாக நான் ப்லாக் என்ற உலாவியை உபயோகித்து வருகிறேன். இது 99 சதம் பயர்பாக்ஸை உல்டா செய்திருந்தாலும் பல புதிய விசயங்களும் சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு வெகுவாக பிடித்தும் இருக்கிறது.உதாரணமாக நீங்கள் ஜிமெயில் ஒரு போட்டோவை சேர்க்க நினைத்தால் வழக்கமாக நாம் அட்டாச்செண்ட் என்னும் வழியில்தானே செய்ய இயலும். ஆனால் ப்ளாக் வெறும் ட்ராக் அண்ட் ட்ராப் மூலமாகவே இழுத்து வந்து சப்ஜெக்ட் காலமில் விட்டுவிடலாம். மேலும் ப்லாக் ப்ளிக்கர், போட்டோ பக்க்கெட் போன்ற தளங்களிலிருந்து எளிதாக படங்களை இணைக்குமாறும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க்கிறது. அது மட்டுமல்ல. நமது வலைப்பூக்களில் பதிவிடவும் எளிதான முறைகளை சுட்டுக்கிறது..இது பயர்பாக்ஸின் அப்பட்டமான காப்பிதான். ஆனாலும் நல்லா நச்சுன்னு இருக்கு.. மேலும் பயர்பாக்ஸின் ஆட் ஆன்களை இணைத்தும் கொள்ளலாம். குறிப்பாக அதன் ஓவர் சீன் காட்டாத சிலவசதிகள் மற்றும் பயர்பாக்கிஸினை தொடர்ச்சியாக பார்ப்பதால் வரும் சின்ன அலுப்பு ஆகியவற்றை சற்று விட்டொழிய வரலாம் ப்லாக்கிற்கு..
டவுன்லோட் செய்ய..

Post Comment

0 comments: