Sunday 22 January 2012

Bootable விண்டோஸ் யு.எஸ்.பி(USB)-ஐ உருவாக்குவ​தற்கு



கணணிகள் இயங்குவதற்கு இயங்குதளம்(Operating System) அவசியமாகும். Hard Disk-ல் நிறுவப்படும் இவ்இயங்குதளம் சில சந்தர்ப்பங்களில் கோளாறுகள் காரணமாக இயங்க மறுக்கும்.
முக்கியமான தருணங்களில் ஏதாவது கோப்புக்களை குறித்த கணணியிலிருந்து பெறவேண்டுமெனில் திண்டாட வேண்டியிருக்கும்.
இதனைத் தவிர்ப்பதற்கு Bootable விண்டோஸ் யு.எஸ்.பி-யை உருவாக்கி வைப்பதன் மூலம் அதனை பயன்படுத்தி கணணியை இயக்கி அத்தகைய தருணங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளலாம். சரி இப்பொழுது Bootable விண்டோஸ் யு.எஸ்.பி-யை உருவாக்குவது எப்படி என பார்ப்போம்.
தேவையானவை
1. Windows 7 or Vista ISO.
2. 4GB கொள்ளளவையுடைய Pen drive(4GB கொள்ளளவையுடைய Pen drive எனின் Windows XP பயன்படுத்த முடியும்).
செயன்முறை
1. Pen drive-ஐ கணணியுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
2. Pen driveல் ஏதாவது முக்கியமான தரவுகள் காணப்படின் அவற்றை Backup எடுத்துக் கொள்ளவும். (காரணம் - இச்செயன்முறையின்போது பென்டிரைவ் ஆனது போர்மேட் ஆகிவிடும்).
3. தற்பொழுது கூகுள் தேடுபொறியை பயன்படுத்தி WinToFlash tool எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.
4. பின் அம்மென்பொருளை இயக்கி Windows 7, Vista, அல்லது XP DVD கோப்புக்களை தேர்ந்தெடுக்கவும்.
5. இப்பொழுது Click Create button -ஐ அழுத்தினால் சில நிமிடங்களில் Bootable விண்டோஸ் யு.எஸ்.பி உருவாக்கப்பட்டு விடும்.

Post Comment

Saturday 21 January 2012

மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு


தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடாவண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம்.
சிலசந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச்சொல்லை மிக இலகுவாக இல்லாமற்செய்யமுடியும்.
1.கடவுச்சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் வன்றட்டை (Hard Disk) வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும்.

Post Comment

Monday 9 January 2012

மறந்துபோன WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி?


அலுவலகம்,கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச் சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த WirelessKeyView என்ற மென்பொருள். 



Post Comment

Tuesday 3 January 2012

கணினியை வேகமாகவும், பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்




நாங்கள் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு சிலநாட்களில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. அதுமட்டும் அல்லாமல் நம்முடைய கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்கின்றது . இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று பார்போம்.

Post Comment