Thursday 6 March 2014

altகம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை

Post Comment

Wednesday 29 August 2012


தனிப்பட்ட கிளவுட் சேமிப்பகத்தை இலவசமாக உருவாக்கிட Syncbox மென்பொருள்

Dropbox, SkyDrive, Amazon Cloud Drive ,Google Drive  போன்ற கிளவுட் சேவையை இலவசமாக தருகின்ற பல இணையத்தளங்கள் இருக்கின்ற போதும்
அவற்றில் கிடைக்கின்ற 2GB முதல் 25 GB என்ற சேமிப்பிடம் பெரிய கோப்புக்களை கிளவுட்டில் சேமித்து வைக்க விரும்புகின்றவர்களுக்கு போதாததாக இருக்கலாம்.

Syncbox  Server என்பது உங்களுக்கென்ற தனிப்பட்ட கிளவுட் சேவையை உங்களிடமிருக்கும் ஹாட்டிஸ்க்கில் உருவாக்கிட உதவுகின்றது.

அலுவலகத்தில் அல்லது வீடுகளில் இருக்கும் கணினியிடையே மற்றும் ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் டிவைஸ்களிடையே இணையத்தின் மூலம் பெரிய கோப்புக்களை பகிர முடிகின்றது.

கீழுள்ள இணைப்பிற்கு சென்று தரவிறக்கம் செய்து நிறுவிய பின்னர் (சேர்வர் மென்பொருள் விண்டோஸில் மட்டும் இயங்கும்) ,
Syncbox ID , பாஸ்வேர்ட் , DDNS key and Data location  என்பவற்றை தரவேண்டும்.

எனினும் Quick Install ஐ தெரிவு செய்தால் இவை அனைத்தும் தானாகவே உருவாக்கப்படும்.

மேலும் Taskbar இல் தெரியும் Synbox ஐகானை அழுத்தி தேவையான செட்டிங்கை மாற்றிவிட முடிகின்றது.

client  மென்பொருளை Syncbox ID and password  மட்டும் கொடுத்து இலகுவாக நிறுவிடலாம்.

மேலும் கோப்புக்களை server to client   synchronization  செய்தல் இதன் கூடுதல் வசதியாகும்.



தரவிறக்கம் செய்வதற்கு - http://www.isyncbox.com/download

Post Comment

Tuesday 21 August 2012




கணினியை காக்கும் காவலன் Deep Freeze software...


வணக்கம் நண்பர்களே.. நேற்றி நிறைய வேலைப்பளு.. அதனால் பதிவெதுவும் எழுத இயலவில்லை. நண்பர்களே உங்கள் கணினியை பாதுகாக்க நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டிருப்பீர்கள். 
Anti virus நிறுவுதல், C Cleaner போன்ற மென்பொருள்களை நிறுவிப் பாதுகாத்து வந்திருப்பீர்கள். இருப்பினும் ஏதேனும் ஒரு சமயத்தில் உங்கள் கணினி இயங்காமல் போய்விடும். அல்லது வைரஸ் தாக்கம் வந்துவிடும். பாதுகாப்பாக இருந்தும் கூட உங்கள் கணினியை நீங்கள் ஒரு சில சமயம் வைரஸ் தாக்கத்திலிருந்து தடுப்பது கடினம்.
இணையம் பயன்படுத்துபவர்களுக்கு சொல்லவே வேண்டம். நொடிக்கொரு முறை வைரஸ்கள் ஆயிரக்கணக்கில் வந்து உங்கள் கணினியைப் பதம் பார்க்க வரிசையில் நிற்கும். இதுபோல் அல்லாமல் வைரசே இல்லாமல் செய்து, உங்கள் கணினி எந்நிலையில் தற்போது இருக்கிறதோ, அதே நிலையில் காலம் முழுவதும் வைத்திருக்க உதவுகிறது இம்மென்பொருள். மென்பொருளின் பெயர் Deep Freeze 

இம்மென்பொருளை இங்கு சென்று நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவும்போது மறக்காமல் C:/ வைத் தேர்ந்தெடுத்து நிறுவிக்கொண்டு இம்மென்பொருளுக்கு நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்துவிட்டால் போதும். இனி நீங்கள் நினைத்தால் தவிர, மற்ற எவரும்  உங்கள் C:/டிரைவில் கை வைக்க முடியாது. 

கணினியில் பாதிக்கும் வைரஸ்கள் ஏதும் அண்டாது. 
ஒரு வேளை வைரஸ் வந்தால் கூட மீண்டும் உங்கள் கணினியை Restart செய்யும்போது உங்கள் கணினியின் பழையை நிலையை திரும்ப몮 பெற்றுவிடும். புதிதாக தாக்கிய வைரஸ் எதுவும் கணினியில் இருக்காது. இதுதான் இம்மென்பொருளின் சிறப்பம்சம். அதாவது கணினியில் மென்பொருளை நிறுவும்போது உங்கள் கணினி எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு மீண்டும் கொண்டுவந்துவிடும். 

ஒரு வேளை நீங்கள் C:/ Drive-ல் மாற்றம் செய்ய வேண்டியிருப்பின் System Tray உள்ள Deep Freeze Icon மீது ஷிப்ட் பட்டனை அழுத்தியவாறே டபுள் கிளிக் செய்யுங்கள். இப்போது தோன்றும் விண்டோவில் Status on next boot என்பதில் Boot Thawed என்பதை கிளிக் செய்து Ok கொடுங்கள். 

இப்போது நீங்கள் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள். கணினி தொடங்கிய பிறகு உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை C:/ டிரைவில் மேற்கொள்ளலாம். ஏதாவது புதிய மென்பொருள்கள் நிறுவ வேண்டி இருப்பின் இந்த முறையைக் கையாளலாம். 

தேவையான மென்பொருளை நிறுவிவிட்டு மீண்டும் உங்கள் கணினியை பழைய நிலைக்கே கொண்டு வர Status on next boot என்னுமிடத்தில் Boot Frozen என்பதை கொடுத்து ok சேமித்துவிடுங்கள். இப்போது நீங்கள் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்துகொள்ளுங்கள். இனி மீண்டும் Deep Freeze செயல்படத் துவங்கிவிடும். தேவையில்லாமல் உங்கள் கணினியில் மாற்றம் செய்ய நினைப்பவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் C:/ டிரைவை ஒரு சக்தி மிக்க பாதுகாவலான இருந்து Deep Freeze Software செயல்படும். 

இத்தகைய மென்பொருகள் Browsing center, Net Cafe, Educational Center, மற்றும் பொது இடங்களில் அமைந்துள்ள கணினிகளில் பயன்படுத்துகின்றனர். உங்கள் Personal Computer-களில் பயன்படுத்துவது உங்கள் கணினியின் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யும்.

மென்பொருளைத் தரவிறக்க:


தளத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பு (English summary about this software): Deep Freeze by Faronics helps your computer run like new by memorizing your computer’sconfiguration and performing a full system recovery with every restart. 

Post Comment


512MB RAMயை விட குறைந்த கணனிகளில் Windows 7ஐ நிறுவுவது எப்படி?




உங்கள் கணனிகள் சில வருட காலங்களுக்கு முன் கொள்வனவு செய்யப்பட்ட சிறப்பியல்புகள் குறைவான கணனிகளாக இருக்கலாம் அல்லது RAMஇன் அளவானது 512MB யை விட குறைவாக காணப்படலாம். இவ்வாறான நிலையில்  Windowsபதிப்புகளில் Windows XP போன்றஇயங்குத்தளத்தையே உங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவீர்கள். 

சிலருக்கு Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி பயன்படுத்த ஆசையாக இருப்பீர்கள், இதற்கு RAM ஒரு தடையாக அமைந்துள்ளதா? கவலையை விடுங்கள்... இங்கு அவ்வாறான 512MBயை விடவும் குறைவான கணனிகளில் Windows 7 பதிப்பை நிறுவுவதற்கான இலகுவான வழியை பகிர்கின்றேன்.

முக்கியாக இச்செயற்பாடினை மேற்கொள்ள Windows 7 இன்  32bit பதிப்பை மட்டுமே பயன்படுத்தலாம்  64bit இயங்குத்தளத்தை 512MB RAMயை விட குறைவான கணனிகளில் இயக்குவது சிரமமானதே.

மேலும் இதற்கு Windows 7 Ultimate பதிப்பை பயன்படுத்த முடியும், ஆனாலும் Home Premium, Home Basicஅல்லது Starter பதிப்புகள் மிகச்சிறந்தது.

கவனிக்க
இதற்கு தேவைப்படுவது
1) Windows 7 32bit ISO பதிப்பு.
2) HEX editor ஒன்று Free Hex Editor Neo(மிகச்சிறந்தது).
3) UltraISO அல்லது powerISO.

இப்போது  படிமுறைகளை பார்ப்போம்.
  1. முதலில் UltraISO அல்லது powerISO வினை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.
  2. Windows 7 32bit ISO வினை mount செய்து  "winsetup.dll" கோப்பை  sources folder இலிருந்து copy செய்து உங்கள் கணனியில் உள்ள் எதாவது ஒரு local drive வில் Paste செய்து கொள்ளுங்கள்.
  3.  இப்பொழுது Paste செய்து கொண்ட "winsetup.dll" இனை Free Hex Editor Neoஇன் உதவியுடன் open செய்து கொள்ளுங்கள் .
    Ctrl + Click on the image to View Full Image
  4.  அதில் 77 07 3D 78 01 சரக்கோவையை (string) தேடிக் கண்டுப்பிடியுங்கள். 
  5. அதனை  E9 04 00 00 00 சரக்கோவையை  கொண்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Replace செய்து save செய்து கொள்ளுங்கள்.
    Ctrl + Click on the image to View Full Image
  6. பின்னர் UltraISO அல்லது powerISO வின் உதவியுடன் Windows 7 32bit ISOவினை open செய்து கொள்ளுங்கள்.  sources folder யை Open செய்து அதிலுள்ள "winsetup.dll"ஐ நீங்கள் திறுத்தியமைத்த "winsetup.dll" இனை கொண்டு replace செய்யுங்கள். பின்  ei.cfg கோப்பை delete செய்வதன் மூலம்  அனைத்து windows 7 SKU களையும் unlock செய்து கொள்ளுங்கள் .பின் அதனைISO வாக save செய்யுங்கள்.
  7. அதனை Burn செய்து Install செய்யுங்கள்.
நீங்களும்  Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி அதன் புதிய வசதிகளை அனுபவியுங்கள்.


Post Comment


மொபைலுக்கு வரும் அழைப்புக்களை சிறந்த முறையில் பதிவுசெய்யும் மென்பொருள்




மொபைலுக்கு வரும் அழைப்புக்களை சிறந்த முறையில் பதிவுசெய்யும் மென்பொருள் (Best CallRecorder S60v5 SymbianOS9.4)உங்களுக்கு வரும் அழைப்புக்களை அல்லது நீங்கள் அழைக்கும் அழைப்புக்களை பதிவு செய்து மறுபடியும் கேட்பதற்கு Best callrecorder  என்னும் மென்பொருளை பயன்படுத்தலாம்
இணையதள முகவரி சுட்டி
இந்த மென்பொருளை உங்கள் மொபைலில் பயன்படுத்துவது முலமாக உங்கள் மொபைலுக்கு வரும் அழைப்புகளை நீங்கள் பதிவு செய்யும் வசதியை இந்த மென்பொருள் கொண்டு உள்ளது. 

Post Comment