Thursday 31 May 2012

கணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்தில்



நாம் எந்த ஒரு வன்பொருள் ( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver Cd அல்லது Dvd தருவார்கள்.

சில சமயங்களில் நம் Driver Cd (or) Dvd அடிபட்டு விடும் அல்லது தொலைந்து போகக்கூடிய வாய்பு நிறைய உள்ளது.அந்த சமயங்களில் நாம் நமக்கு தேவைப்படும் Driver Cd (or) Dvd-யை எங்கு சென்று வாங்குவது?யாரிடம் கேட்பது?

இந்த கவலையை விட்டு விடுங்கள் இந்த இணையத்தளம் நமக்கு தேவையான அணைத்து Driver Cd (or) Dvd-களையும் தருகிறார்கள்,இங்கு சென்று நாம் நமக்கு தேவையான Driver Cd (or) Dvd-களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Post Comment

கணினியின் TASK MANAGER ல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய


கணினியின் TASK MANAGER ல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய



 கணிணியில் பலமுறை வைரசால் பாதிக்கப்பட்ட போது  Task Manager Disabled  என்னும் பிழைச்செய்தி வந்தது. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் .


Task Manager has been disabled by your administrator

Methode 1:


Group Policy Editor வழியாக சரி செய்யலாம்..

Start, Run , அதில் gpedit.msc என்று டைப் செய்யவும்.

அதில் User Configurationல் Administrative Template ஐ Expand(+) செய்யவும்

அதில் System ஐ Expand செய்து Ctrl+Alt+Del ஐ க்ளிக் செய்யவும்

அதில் Remove Task Manager என்பதனை Click செய்து அந்த Optionல் Not Configured என்பதனை தேர்வு செய்யவும்.


Methode 2: 


Start, Run ல் கீழே உள்ள Command ஐ கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.


REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f 

  

Methode 3:


Notepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்


[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System] 
“DisableTaskMgr”=dword:00000000

பின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை OPEN பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம்.



Methode 4:


Start, run ல் regedit என்று Type செய்யவும்


அதில் HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies\ System என்ற இடத்தில் Disable Task manager என்ற Value ஐ அழித்துவிடவும்.


Methode 5:


anbuthil.com

Task Manager Fix என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும் அதனை Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும்.


Read more: http://www.anbuthil.com/2012/05/task-manager.html#ixzz1wSzDgc16

Post Comment


Yahoo, Hotmail, Rediff க்கு Official ஆன்டிராய்ட்Application


மின்னஞ்சல் படிக்காமல் இருக்கவே முடியாது என்ற நிலையில் இருக்கிறோம் நாம். கிட்டத்தட்ட நம் அனைத்து தகவல் தொடர்புகளும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே என்ற நிலைக்கு வந்து விட்டோம். அவசர நேரத்தில் உடனடியாக கணினியில் மின்னஞ்சல் படிக்க இயலாது. இதுவே நீங்கள் ஆன்டிராய்ட் போன் வைத்து இருந்தால், வேலை எளிதாகும். 

முக்கியமான ஈமெயில் சர்வீஸ்களுக்கு ஆன்டிராய்டில் Official Application இருக்கிறது. இதனால் நம்பிக்கையாக பயன்படுத்தலாம். அவற்றை பற்றி பார்ப்போம் 

Post Comment

Tuesday 22 May 2012


பிளாக்கர் பதிவுகளை பேஸ்புக்கில் தானாக அப்டேட் செய்யும் செயலி RSS Graffiti.


நமது வலைத்தளத்திற்கு பேஸ்புக் வழியாக நண்பர்களை இணைப்பதற்கும் நமது பதிவுகளை பேஸ்புக்கின் வழியாக உடனடியாகத் தெரிந்து கொள்வதற்கும் Facebook Fan Page பயன்படுகிறது. இதற்குபேஸ்புக்கில் தானியங்கியாக நமது வலைப்பதிவை திரட்டும் வழியில்லை என்பதால் நாம் தான் ஒவ்வொரு பதிவு எழுதிய பின்னரும் பேஸ்புக்கில் சென்று அப்டேட் செய்ய வேண்டும். பதிவெழுதுவதே பெரிய வேலை, இதில் எங்கே எல்லாவற்றிலும் சென்று அப்டேட் செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு பேஸ்புக்கில் RSS Graffiti என்ற செயலி ஒன்று இருக்கிறது. 

RSS Graffiti என்ற் இந்த செயலி உங்களின் வலைப்பதிவின் RSS செய்தியோடை வழியாக உங்கள் பதிவுகளை பேஸ்புக்கில் தானாகத் திரட்டி விடும். இதன் மூலம் உங்கள் Facebook Profile மற்றும் Facebook Fan Page இரண்டிலும் உடனடியாக அப்டேட் செய்து கொள்ள முடியும். Facebook பக்கம் இல்லாதவர்கள் தங்களது புரோபைலில் வெளியிடுமாறு செய்யலாம். இந்த செயலியானது நமது வலைப்பதிவின் RSS செய்தியோடையை அவ்வப்போது கவனித்து புதிய செய்திகளைத் தானாக அப்டேட் செய்து விடும். இதனால் உங்கள் வேலையும் மிச்சமாகும்; நேரமும் மிச்சமாகும்.

Post Comment


விண்டோஸ் அட்மின் பாஸ்வேர்ட் உடைக்கும் மர்ம ரகசியம்

அடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள், மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேறு எவரும் தங்கள் அனுமதியில்லாமல் கணினியைப் பயன்படுத்தாத வாறும் பயனர் கணக்குக்குப் பாஸ்வர்ட் வழங்கியிருப்பர் பலர். அவ்வாறு வழங்கிய பாஸ்வர்டை மறந்து விட்டு கணினியை உபயோக்க்க முடியாமல் தவிப்பார்கள் இன்னும் பலர். இந்தப் “பலர்”களுக்கு உபயோகமன ஒரு விண்டோஸ் டிப்ஸ்...

Post Comment


Hard Disk ஐ பாதுகாக்க Check Disk செய்யுங்கள்





நம் கம்ப்யூட்டர்க்கு முதுகெலும்பு என்றால் அது hard Disk தான்.இது இல்லாமல் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. இப்படிப்பட்ட இது OS ஐ இயங்க வைக்கிறது. இதில் ஏதாவது பிரச்சினை என்றால் அவ்வளவுதான். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற உதவுவது தான் Check Disk வசதி.  


உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது  ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால்  hard disk இல் குப்பை உருவாகும்.  இது போல பல காரணங்களினால் உங்கள் hard  Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும். 

Post Comment


விரிவான பார்வை – Dropbox Google Drive SkyDrive

Cloud war விரிவான பார்வை   Dropbox Google Drive SkyDriveற்போது Cloud Computing சக்கைப் போடு போட்டு வருகிறது. ஏற்கனவே இதில் Dropbox போன்ற தளங்கள் பிரபலமாக இருந்தாலும் தற்போது கூகுள் தனது Google Drive ஐ வெளியிட்ட பிறகு எங்கு பார்த்தாலும் இதே பேச்சாக உள்ளது icon smile விரிவான பார்வை   Dropbox Google Drive SkyDrive இனி வரும் காலங்களில் Cloud computing தவிர்க்க முடியாதது என்பதும் உண்மை.
Cloud Computing ல் தற்போது பிரபலமாக இருப்பது Dropbox , Google Drive , SkyDrive மற்றும் iCloud. இதில் iCloud iOS பயனாளர்களுக்கு மட்டுமே என்பதால் இதைத் தவிர்த்து மற்றவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

Post Comment


Format செய்ய முடியாத Transcend Pen drive/Memory Card-களை Format செய்வது எப்படி?


Transcend பென் டிரைவ்களை பயன்படுத்தும் நண்பர்கள் நிறைய பேருக்கு Format செய்யும் போது அடிக்கடி வரும் பிரச்சினை "Write Protected". பென் டிரைவ் மட்டும் இன்றி மெமரி கார்டுக்கும் இந்த பிரச்சினை வரும். இவற்றை சரி செய்ய அவர்களே வழி தந்து உள்ளனர். என்ன என்று பார்ப்போம். 

இங்கே கூறப்பட்டுள்ள அனைத்தும் Transcend நிறுவனத் தயாரிப்புகளுக்கு மட்டுமே.

மற்ற ஏதேனும் பிரச்சினைகள் என்றாலும் கீழ் உள்ளவற்றை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். 

Post Comment


கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்



ஐபோனுக்கு அடுத்த படியாக சக்கை போடு போடும் ஃபோன்கள் android OS உள்ளவை. இதை பயன்படுத்துவது ஒரு குட்டி கம்ப்யூட்டர் என்ற அளவுக்கு மிக அதிகமான வசதிகள் உள்ளன. அந்த வசதிகள் முழுவதும் நமக்கு Applications என்ற பெயரில் Android Market என்ற தளத்தில் கிடைக்கிறது. ஆனால் கிட்டதட்ட 2 லட்சத்துக்கும் மேலான வசதிகளில் நமக்கு தேவையானவற்றை மட்டும் எப்படி தேடி எடுப்பது. எனவே சில எல்லோரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டி வரும். அவை எவை என்று அறிவோமா?



கூகிள் தனது Product களை Default ஆகவே தந்து உள்ளது. gmail, google search, maps, voice search, Android Market,Youtube,Gtalk போன்றவை நீங்கள் எந்த மாடல் ஃபோன் வாங்கினாலும் இருக்கும். 

Android என்றால் என்ன என்று அறிய விரும்புபவர்கள் நம்ம பிளாக்கர் நண்பன்  அப்துல் பாஸித் தளத்தின் இந்தப் பதிவை படிக்கலாம், ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?  (இந்தப் பதிவுக்கு பின் இவர் ஆன்ட்ராய்ட் நண்பன் ஆகிவிட்டார்.)


இங்கே சொல்லி உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் இலவசமானவை. 

1. Barcode Scanner 

பார்கோட் என்பது நாம் கேள்வி பட்டு இருப்போம். iPhone & Android வந்த பிறகு பிரபலம் ஆன ஒன்று QR Code. இதன் பலன்கள் பல உண்டு.இது பற்றி ஒரு பதிவே எழுதலாம்.  இப்போதைக்கு நான் சொல்லும் பலன், இதை வைத்து இருந்தால் நீங்கள் மற்ற அப்ளிகேஷன்களை Android Market சென்று தேடாமல், இதை பயன்படுத்தி குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றின் QR Code தனை Scan செய்தால் நேரடியாக அப்ளிகேஷன் பக்கத்துக்கு செல்லலாம்.  இந்த அப்ளிகேஷன் மூலம் இரண்டு வகையான கோட்களையும் Scan செய்யலாம். 

ஒரு sample கோட் கீழே உள்ளது. 


2. Android Lost 

ஆன்ட்ராய்ட் போன்  தொலைந்து போனால் எளிதாக கண்டுபிடிக்கவே இந்த அப்ளிகேஷன். இதை இன்ஸ்டால் செய்து விட்டு, அவர்கள் தளத்தில் நமது தகவல்களை ரிஜிஸ்டர் செய்து விட்டால் போதும்.
அந்தத் தளத்தில் கேட்கப்படும் SMS notification number என்ற எண்ணுக்கு உங்கள் என்னை தராமல், மொபைல் தொலைந்து போனால் அதற்கு SMS வரும்படியாக உங்கள் நண்பர், வீட்டில் உள்ளோரின் எண் தரலாம். 


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். 

3.APP 2 SD FREE

சில சமயங்களில் ஃபோன் மெமரி குறைவாக உள்ள Android மொபைல் வாங்கும் போது நிறைய அப்ளிகேஷன்களை உங்களால் இயக்க முடியாது. அதை தவிர்க்க, சில அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு மாற்ற வேண்டும். அதற்கு இது உதவுகிறது.

இதை தரவிறக்கம் செய்ய. இங்கே கிளிக் செய்யவும்

அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.


4. App Backup & Restore



நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் Android அப்ளிகேஷன்களை Backup எடுத்து வைக்க இது பயன்படுகிறது.



அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.


5. Android System Cleaner

Android போனும் உங்கள் கணினி போலவே, தேவை இல்லாத அப்ளிகேஷன்கள் ரன் ஆகிக் கொண்டு இருந்தாலோ அல்லது, நாம் எதையும் குளோஸ் செய்யா விட்டாலோ மெதுவாக இயங்கும். இதை தவிர்த்து தேவை இல்லாமல் இயங்கும் வசதிகளை நிறுத்த இது பயன்படுகிறது.



அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.

6. Opera Mini Browser

எத்தனையோ உலவிகள் இருந்தாலும் opera வுக்கு இன்னும் மவுசு போகவில்லை. சிற்சில குறைபாடுகள் இருந்தாலும். Android மூலம் இணையத்தை பயன்படுத்த சிறந்த உலவி இதுதான்.




அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.

7. TeamViewer for Remote Control

அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும். இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி கண்ட்ரோல் செய்யலாம். Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது.



அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.


மற்றபடி இணையத்தில் தான் நீங்கள் விழிப்பவர் என்றால் உங்களுக்காகவே

1. Facebook
2. Twitter
3. Blogger

போன்றவையும் இலவசமாகவே கிடைக்கிறது. மேலும் பல வசதிகளை வரும் பதிவுகளில் அறிமுகம் செய்கிறேன்.

கற்போமில் இது தான்  ஆன்ட்ராய்ட் பற்றிய முதல் பதிவு. என் குறைகளை சுட்டிக் காட்டுங்கள். அத்தோடு உங்களுக்கு தெரிந்து கட்டாயம் பயன்படும் அப்ளிகேஷன்களை கீழே சொல்லலாம்.

மேலும் பல Android Application கள் பற்றி அறிய இந்த தளத்தை பின் தொடரவும் அல்லது இமெயில் மூலம் Subscribe செய்து கொள்ளவும்.

Post Comment


Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய


தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இப்போது ஆன்டிராய்ட் அலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு முக்கிய தேவையாக இருப்பது எப்படி என்பது. நிறைய பயன்பாடுகள் இருந்தாலும், Unicode வகை தான் நிறைய பேர் விரும்புவார்கள்.(ஆங்கிலத்தில் டைப் செய்தால் அப்படியே தமிழுக்கு மாறுவது). அப்படிப் பட்ட ஒரு Keyboard பயன்பாடு பற்றி இன்று காண்போம். 


Post Comment

Monday 21 May 2012


Chrome உலவியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

Chrome Browser பயன்படுத்தும் நண்பர்கள் அவர்கள் Task Manager பகுதியை ஓபன் செய்து பார்த்தால் அது மிக அதிகமான Memory-ஐ பயன்படுத்துவது தெரிய வரும். இதனால் உங்கள் கணினி இயங்கும் வேகம் குறையும், சில நேரங்களில் Chrome கூட மெதுவாக இயங்க ஆரம்பிக்கும். இதற்கான தீர்வை இந்தப் பதிவில் காண்போம்.
speed up your chrome browser
இதற்கு மிக முக்கியமான காரணம் Chrome-இல் நீங்கள் சேர்த்துள்ள Extensions தான். தேவை இல்லாதவற்றை நீக்குவது மற்றும் தேவை இல்லாத நேரத்தில் சிலவற்றை ஸ்டாப் செய்ய வேண்டும்.

1. Extension-களை கட்டுபடுத்தவும் 

Shift+ESC அழுத்துவதன் மூலம் நீங்கள் Chrome-இன் Task Manager ஐ ஓபன் செய்யலாம். அதில் இயங்கும் உங்கள் தேவைப்படாத Extension-களை தெரிவு செய்து End Process தந்து விடவும். 


2. Fastest Chrome Extension பயன்படுத்தவும். 

அடுத்து இந்த இணைப்பில் சென்று FastestChrome என்ற Extension-ஐ Add செய்து கொள்ளவும். இது உங்கள் Chrome உலவியின் தேடுதல் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் சில சிறப்பம்சம்கள் 

quick definitions 
auto-load next pages
search faster

3. History, Cookies ஆகியவற்றை நீக்கவும்

அடுத்து History, Cookies போன்றவற்றை தொடர்ந்து நீக்கி வரவும். இதனை Chrome Settings பகுதியில் Under The Hood/Bonnet பகுதியில் காணலாம். 


4. Speed Dial பகுதியை பயன்படுத்தவும்

அடிக்கடி செல்லும் பக்கங்களை Speed Dial என்ற பக்கத்தில் Add செய்து கொள்ளுங்கள் இதன் மூலம் கொஞ்சம் வேகப் படுத்தலாம். 

5. தேவை இல்லாத விளம்பரங்களை நிறுத்தவும். 

சில தளங்களில் உள்ள விளம்பரங்கள் அந்த தளம் லோடு ஆகும் வேகத்தை குறைக்கும் வாய்ப்பு அதிகம். எனவே அவற்றை லோட் ஆகாமல் நீங்கள் தடுக்கலாம். 

இதற்கு AdBlock Extension பயன்படுகிறது. இது முழுவதுமாக விளம்பரங்களை நீக்கி விடுகிறது. படத்தில் காணவும். 


ADBLOCK பயன்படுத்துவது எப்படி? என்பதை இந்தப் பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



Read more: http://www.thangampalani.com/2012/05/chrome.html#ixzz1vXKzErkf

Post Comment

Sunday 20 May 2012


பென்டிரைவை வேகமாக Remove செய்ய Quickly Remove வசதி


USB Device களை பயன்படுத்தும் போது நமக்கு இருக்கும் அவசரத்தில் நம்மால் Safely Remove என்பதை செய்ய முடிவதில்லை. பலர் அதனை மறந்தும் விடுகிறோம். இதனால் உங்கள் பென் டிரைவ் போன்ற USB Device-கள் பழுதடைய வாய்ப்புகள் அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே சமயம் உங்கள் பென் டிரைவ்க்கு எந்த பிரச்சினையும் வராமல் எப்படி உடனடியாக Remove செய்வது என்று பார்ப்போம். 


1. முதலில் உங்கள் பென் டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை உங்கள் கணினியில் செருகவும். 

2. இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய விண்டோ ஒன்று வரும், அதில் இடது புறத்தில் Device Manager என்பதை தெரிவு செய்யவும். 

3. இப்போது உங்கள் கணினியில் உள்ள Device கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும். அதில் Disk Drives -இல் உங்கள் Pen Drive/ USB Device பெயரை கண்டுபிடிக்கவும். (பெரும்பாலும் நிறுவனத்தின் பெயரோடு இருக்கும்.) கீழே உள்ளது போல. 

Post Comment


இணையதளங்களில் தோன்றும் விளம்பரங்கள் மற்றும் பாப்அப் விண்டோக்களை தடுக்க

Block ads on Websites
வணக்கம் நண்பர்களே..! நாம் தொடர்ந்து ஒரு இணையதளத்தைப் பார்க்கும்போது பாப் அப் விண்டோக்கள் வந்து நம்மை இம்சைப்படுத்தும். குறிப்பாக நாம் படிக்கும் கட்டுரைகள், பதிவுகள், கவிதைகள் என நாம் விரும்பிப் படித்துக்கொண்டிருக்கும்போது , அவற்றை முழுமையாக படிக்க முடியாத படி பாப் அப் விண்டோக்கள் அவ்வப்போது தோன்றும். இதனால் படிக்கும் நமக்கு ஒரு வித எரிச்சல் உண்டாகும். தோன்றும் Popup window க்களை Close செய்ய முயற்சித்தால் தவறி அந்த விளம்பரங்களின் மீது கிளிக் செய்துவிடுவோம். இதனால் நாம் படிக்கும் பக்கத்திலிருந்து வேறொரு பக்கத்திற்கு சென்றுவிடும். இத்தகைய தொல்லைகளை தவிர்க்க AdBlock என்ற ஆட்ஆன் தொகுப்பு(Plugin) பயன்படுகிறது. 

Post Comment



Way2SMS - இலவசமாக SMS அனுப்ப உதவும் Application


Way2SMS தளம் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். இலவசமாக SMS அனுப்ப உதவும் இந்த தளத்தின் வசதி இப்போது ஆன்ட்ராய்ட் அலைபேசிகளிலும் வந்து விட்டது. 

ஏற்கனவே Way2SMS அக்கௌன்ட் உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த இயலும்.அக்கௌன்ட் இல்லாதவர்கள் முதலில் http://www.way2sms.com சென்று புதிய அக்கௌன்ட் உருவாக்கி கொள்ளவும். 

Post Comment

Monday 7 May 2012


பென்டிரைவை வேகமாக Remove செய்ய Quickly Remove வசதி


USB Device களை பயன்படுத்தும் போது நமக்கு இருக்கும் அவசரத்தில் நம்மால் Safely Remove என்பதை செய்ய முடிவதில்லை. பலர் அதனை மறந்தும் விடுகிறோம். இதனால் உங்கள் பென் டிரைவ் போன்ற USB Device-கள் பழுதடைய வாய்ப்புகள் அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே சமயம் உங்கள் பென் டிரைவ்க்கு எந்த பிரச்சினையும் வராமல் எப்படி உடனடியாக Remove செய்வது என்று பார்ப்போம். 


1. முதலில் உங்கள் பென் டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை உங்கள் கணினியில் செருகவும். 

Post Comment