Monday 7 May 2012


AfterFocus - உங்கள் புகைப்படங்களை மெருகேற்ற


போன் கேமரா மூலம் நாம் எடுக்கும் படங்கள், அது உள்வாங்கும் அனைத்தையும் தெளிவாய் காட்டும். இதனால், ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் நாம் Focus செய்ய இயலாது. இந்த குறையை தவிர்க்க, நீங்கள் ஏற்கனவே எடுத்த ஒரு படத்தில் தேவையான இடத்தை/நபரை மட்டும் Focus செய்ய உதவும் application தான் AfterFocus.

இதை செய்ய உங்களுக்கு முதலில் கொஞ்சம் பொறுமை அவசியம். மேலே உள்ள படத்தை பாருங்கள், முதலாவது நபரை மட்டும் போகஸ் செய்ய சிறு கோடுகளை நீங்கள் வரைய வேண்டும். அது மிகச் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு தேவையான வேலையை நீங்கள் எளிதாக முடித்து விட இயலும். 

இதில் Background Blur Effect-களையும் நீங்கள் உருவாக்க இயலும். 



மிக அழகாக Focus செய்யப்பட்ட ஒரு படத்தை கீழே காணலாம். இது DSLR கேமரா ஸ்டைலை நீங்கள் உருவாக்கலாம், என்பதற்கு இதுவே உதாரணம்.



Post Comment

0 comments: