Tuesday 22 May 2012


பிளாக்கர் பதிவுகளை பேஸ்புக்கில் தானாக அப்டேட் செய்யும் செயலி RSS Graffiti.


நமது வலைத்தளத்திற்கு பேஸ்புக் வழியாக நண்பர்களை இணைப்பதற்கும் நமது பதிவுகளை பேஸ்புக்கின் வழியாக உடனடியாகத் தெரிந்து கொள்வதற்கும் Facebook Fan Page பயன்படுகிறது. இதற்குபேஸ்புக்கில் தானியங்கியாக நமது வலைப்பதிவை திரட்டும் வழியில்லை என்பதால் நாம் தான் ஒவ்வொரு பதிவு எழுதிய பின்னரும் பேஸ்புக்கில் சென்று அப்டேட் செய்ய வேண்டும். பதிவெழுதுவதே பெரிய வேலை, இதில் எங்கே எல்லாவற்றிலும் சென்று அப்டேட் செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு பேஸ்புக்கில் RSS Graffiti என்ற செயலி ஒன்று இருக்கிறது. 

RSS Graffiti என்ற் இந்த செயலி உங்களின் வலைப்பதிவின் RSS செய்தியோடை வழியாக உங்கள் பதிவுகளை பேஸ்புக்கில் தானாகத் திரட்டி விடும். இதன் மூலம் உங்கள் Facebook Profile மற்றும் Facebook Fan Page இரண்டிலும் உடனடியாக அப்டேட் செய்து கொள்ள முடியும். Facebook பக்கம் இல்லாதவர்கள் தங்களது புரோபைலில் வெளியிடுமாறு செய்யலாம். இந்த செயலியானது நமது வலைப்பதிவின் RSS செய்தியோடையை அவ்வப்போது கவனித்து புதிய செய்திகளைத் தானாக அப்டேட் செய்து விடும். இதனால் உங்கள் வேலையும் மிச்சமாகும்; நேரமும் மிச்சமாகும்.

RSS Graffiti செயலியை எப்படி பயன்படுத்துவது?

1. முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து விட்டு கீழ் உள்ள சுட்டிக்குச் செல்லவும்.http://www.facebook.com/RSS.Graffiti
2. உங்கள் பேஸ்புக் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக Authorization Required என்று கேட்கும். அதில் Click Here to Authorize என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.
3. அடுத்து உங்கள் Facebook புரோபைல் மற்றும் பக்கங்களை Rss Graffiti பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்குமாறு கேட்கும். அதில் Allow என்பதைக் கொடுங்கள்.
4. பின்னர் இடதுபக்கத்தில் நீங்கள் வைத்திருக்கும் Facebook Personal கணக்கு மற்றும் Facebook ரசிகர் பக்கங்களையும் காட்டும். நான் இப்போது என்னுடைய பொன்மலர் பக்கம் வலைப்பூவிற்கான ஃபேஸ்புக் ரசிகர் பக்கத்தைத் தேர்வு செய்கிறேன். அதில் Add a New Feed என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
5. Feed URL என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவிற்கான RSS செய்தியோடையின் முகவரியைக் கொடுத்து Preview எனபதைக் கிளிக் செய்யவும். RSS முகவரியானது உங்கள் வலைப்பூவின் முகவரிக்குப் பின் /rss.xml என்று முடியும் அல்லது வலைப்பூவிற்கு Feedburner கொடுத்தால் பீட்பர்னர் முகவரியைக் கொடுக்கலாம். (எ.கா)http://anycomputer.blogspot.com/rss.xml
6. அடுத்து உங்களின் செய்தியோடையில் பதிவுகள் எடுக்கப்பட்டு புதிய பதிவொன்று முன்னோட்டமாக காட்டப்படும். சரியாக இருப்பின் அடுத்து மேலும் சில அமைப்புகளைப் பார்ப்போம்.
7. Filter – இனிமேல் நீங்கள் பதிவிடும் பதிவுகள் தானாக பேஸ்புக்கில் பகிரப்படும். அதுவரை பழைய பதிவுகள் சிலவற்றைப் போட்டு வைத்தால் நன்றாக இருக்குமல்லவா?Cut Off Date என்பதில் Select Next Item to Publish என்பதில் சென்றால் உங்களுடைய கடைசி 25 பதிவுகள் தொகுக்கப்பட்டிருக்கும். அதில் கடைசி பதிவைத் தேர்ந்தெடுத்து விட்டால் அதிலிருந்து உங்கள் பேஸ்புக் பக்கத்தில் அப்டேட் செய்து விடும்.
8. Schedule - இதன் மூலம் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை அப்டேட் செய்வது என அமைக்கலாம். நீங்கள் தினம் ஒரு பதிவு எழுதி வந்தால் As soon as Possible என்பதைக் கொடுத்தால் பதிவிட்ட உடனே அப்டேட் ஆகும். நிறைய பதிவுகள் எழுதுபவர்கள் அரை மணி, ஒரு மணி நேரம் இடைவெளி விட்டு பதியுமாறு செய்யலாம். இதில் Posts Per Cycle என்பது குறிப்பிட்ட இடைவெளியில் எத்தனை பதிவுகளைப் பகிரலாம் என்று அமைக்கலாம்.
9. இறுதியில் Save பட்டனைக் கிளிக் செய்தால் உங்கள் அமைப்புகள் சேமிக்கப்படும்.

மேலும் சில குறிப்புகள் :

இதை என்னுடைய பேஸ்புக் ரசிகர் பக்கத்திற்கு நான் அமைத்தேன். பேஸ்புக் ரசிகர் பக்கம் இல்லாதவர்கள் தங்களது பேஸ்புக் புரோபைலிலெயே அப்டேட் செய்து கொள்ள முடியும். இடப்புறம் இருக்கும் தங்களது பேஸ்புக் பயனர் பெயரைக் கிளிக் செய்து மேல் சொன்னபடி செய்து கொள்ளவும்.

சிலர் இரண்டு மூன்று வலைப்பதிவுகள் கூட வைத்திருக்கலாம். அனைத்தையும் கூட சேர்த்து உங்கள் புரோபைலில்/பக்கத்தில் அப்டேட் செய்யுமாறு செய்ய முடியும். இதற்கு மறுபடி Add Feed கிளிக் செய்து புதிய வலைப்பூவின் RSS முகவரியைக் கொடுத்து இதே போல் செய்து கொள்ளலாம்.

Post Comment

0 comments: