Tuesday 22 May 2012


விரிவான பார்வை – Dropbox Google Drive SkyDrive

Cloud war விரிவான பார்வை   Dropbox Google Drive SkyDriveற்போது Cloud Computing சக்கைப் போடு போட்டு வருகிறது. ஏற்கனவே இதில் Dropbox போன்ற தளங்கள் பிரபலமாக இருந்தாலும் தற்போது கூகுள் தனது Google Drive ஐ வெளியிட்ட பிறகு எங்கு பார்த்தாலும் இதே பேச்சாக உள்ளது icon smile விரிவான பார்வை   Dropbox Google Drive SkyDrive இனி வரும் காலங்களில் Cloud computing தவிர்க்க முடியாதது என்பதும் உண்மை.
Cloud Computing ல் தற்போது பிரபலமாக இருப்பது Dropbox , Google Drive , SkyDrive மற்றும் iCloud. இதில் iCloud iOS பயனாளர்களுக்கு மட்டுமே என்பதால் இதைத் தவிர்த்து மற்றவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
எழுத்தில் ஒரு விஷயத்தை விளக்குவதை விட ஒரு படம் / அட்டவணை ஒரு விஷயத்தை மிக மிக எளிதாக அனைவருக்கும் விளக்கி விடும். அதைத் தான் பின் வரும் அட்டவணை எனக்கு எளிதாக புரிய வைத்து இருக்கிறது. இந்தப்பதிவு மிகப்பெரியதாக இருக்கும் எனவே நேரம் இருக்கும் போது அவசரமில்லாமல் பொறுமையாக (கண்டிப்பாக) படியுங்கள். நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை.
Cloud Computing விரிவான பார்வை   Dropbox Google Drive SkyDrive
Dropbox
Google Drive வருகையால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது / பாதிக்கப்படப் போவது Dropbox தளம் ஆகும். இது வரை தனிக்காட்டு ராஜாவாக இருந்தது தற்போது போட்டிகள் அதிகரித்து விட்டது. சோலோவாக இருந்தாலும் சிறப்பான சேவையை இது வரை தந்தது என்று நிச்சயம் கூறலாம். நான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன் என்கிற முறையில் உறுதியாகக் கூறுவேன்.
என்னுடைய தளம் படிப்பவர்களுக்கு தெரிந்து இருக்கும் நான் தீவிர கூகுள் ரசிகன் என்பது. Google Drive வந்த பிறகு இன்னமும் Google Drive போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு Dropbox தரும் அருமையான வசதிகளே காரணம். இதனுடைய அமைப்புகள் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி இருக்கிறது. பயன்படுத்த மிக எளிதானது. தற்போது 2 GB அளவே இலவசமாகவும் சில முயற்சிகளின் மூலம் 16 GB வரை இலவசமாக பெறும் வசதியையும் கொடுத்து இருக்கிறது. பின்னாளில் இதில் இருந்து நான் Google Drive க்கு மாறி விடுவேன் என்று நினைக்கிறேன் காரணம் பல்வேறு கணக்குகளை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை அதோடு கூகுளில் பணம் கட்டி முன்பே கூடுதல் இடம் பெற்றுள்ளேன்.
SkyDrive
இலவசமா ஸ்பெஷல் பிரியாணி தரேன் வாங்க வாங்க! என்று மைக்ரோசாஃப்ட் அழைக்கிறது ஆனால் எவனும் கண்டுக்க மாட்டேங்குறான் icon smile விரிவான பார்வை   Dropbox Google Drive SkyDrive காரணம் மிக எளிது பயன்படுத்த முன்பு அவ்வளவு எளிதாக இல்லை. 25 GB இலவசமாக தந்தும் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்பதே இதன் தோல்வியைக் கூறும். தற்போது Cloud Computing சூடு பிடித்துள்ளதால் பல மாற்றங்களை செய்து அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இது வரை 25 GB இலவசமாக கொடுத்து வந்ததை 7 GB யாக குறைத்து விட்டது. நீங்கள் அதே 25 GB யை வைத்துக்கொள்ள விரும்பினால் உடனடியாக உங்களுடைய Hotmail / MSN / Live தள முகவரியில் நுழைந்து ஏக்டிவேட் செய்து கொள்ளுங்கள். கொஞ்ச நாட்களுக்கு மட்டும் இந்தச் சலுகை இதன் பிறகு அதுவே 7 GB யாக மாறி விடும் இதன் பிறகு உங்களால் 25 GB இலவச இடம் பெற முடியாது. எனவே உடனடியாக உங்களது கணக்கை ஏக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இது பற்றி என்னுடைய தள facebook ல் கடந்த மாதமே கூறி இருந்தேன் தற்போது இன்னமும் இந்தச் சலுகை உள்ளதா என்று தெரியவில்லை. முயற்சித்துப்பாருங்கள் இருக்கலாம்.
நீங்கள் கேட்கலாம்… கிரி! நான் ஹாட்மெயில் பயன்படுத்துவதே இல்லையே! அப்புறம் எதற்கு 25 GB எனக்கு 7 GB யே அதிகம் தான் என்று! இங்கே தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். மைக்ரோசாஃப்ட் தனது அடுத்த வெளியீடான Windows 8 ல் இந்த SkyDrive வசதியை இணைத்து விடும் என்பது என் எதிர்பார்ப்பு அப்படி செய்தால் நமக்கு 25 GB மிகப் பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் இதிலேயே சேமித்து வைத்து விடலாம் ஒருவேளை உங்களது ஹார்ட் டிஸ்க் செயலிழந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
மைக்ரோசாஃப்ட் ஒரு கிறுக்குத்தனமான வசதி தந்து இருக்கிறது அதாவது நீங்கள் அதிக பட்சமாக 2 GB அளவுள்ள (Total single file size) கோப்பை மட்டுமே இதில் காபி செய்ய முடியும். IT துறையில் பணிபுரிகிறவர்கள் தங்களுடைய Outlook மின்னஞ்சலை Archive செய்து வைத்து இருப்பார்கள் அது 3 GB 5 GB என்று இருக்கும் இதை எப்படி நம்மால் இதில் சேமிக்க முடியும் (இது ஒரு உதாரணம் தான் இது போல பல விசயங்கள் உள்ளது). பிறகு 25 GB கொடுப்பதன் பயன் என்ன?
மைக்ரோசாஃப்ட் 100 GB க்கு பணம் கட்டி பெறலாம் என்று கூறுகிறது. ஜன்னலுக்கு வெளியே சாப்பாட்டை வைத்து விட்டு சாப்பிடு என்று சொல்வது போல இருக்கிறது! 100 GB இடம் வாங்கி வைத்து விட்டு 4 GB (Single file) கோப்பை காபி செய்ய முடியவில்லை என்றால் அப்புறம் நாம் எதற்கு பணம் கட்டி இடம் அதிக வாங்க வேண்டும்? வாங்கி என்ன பயன்? Word Excel Pdf கோப்புகள் எல்லாம் நாம் இது வரை நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்தியது அனைத்தையும் சேர்த்தால் கூட 10 GB வராதே!
இது போல பணம் கட்டி அதிக இடம் வாங்குபவர்கள் சேமிக்க அதிகம் பயன்படுத்துவது முக்கிய திரைப்படங்களை (AVI, MKV, MPG), Zip, ISO image, Outlook Archive களை சேமிக்கவே ஆகும். எனவே மைக்ரோசாஃப்ட் தனது (Single File) அளவை உயர்த்த வேண்டும் இல்லை என்றால் தோல்வி தான் அடையும். கூகுள் (Single file size) 10 GB வரை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கூகுள் அனைவராலும் பாராட்டைப் பெறுகிறது.
எது எப்படியோ மைக்ரோசாஃப்ட் விரைவில் இதன் அளவை உயர்த்தும் எனவே நீங்கள் இதை ஏக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இதில் இன்னொரு குறை நமக்கு தேவையான ஃபோல்டரை மட்டும் இதில் SYNC செய்ய முடியாது அனைத்துமே SYNC ஆகும். செம மொக்கை. இதை விட கொடுமை SkyDrive Desktop application ஐ கண்டுபிடிக்கவே நாக்கு தள்ளியது. இந்த லட்சணத்தில் இருந்தால் யார் பயன்படுத்துவர்? தற்போது தான் எளிதாக மாற்றி இருக்கிறார்கள். Google Drive நுழைந்தாலே இடது புறம் தரவிறக்கம் செய்ய வசதி இருக்கும், இந்த வசதி Google Drive வந்த முதல் நாளில் இருந்து உள்ளது. சத்தியமா மைக்ரோசாஃப்ட் கூகுளை தொடவே முடியாது. இந்த ஃபோல்டரை தேர்வு செய்யும் வசதி Dropbox லும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது என்னங்க கிரி ஃபோல்டர் [folder] மேட்டர் சரியா புரியவில்லையே என்று கேட்பவர்களுக்கு…
இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லைங்க. எடுத்துக்காட்டாக இவர்கள் தரும் 7 / 25 GB இடத்தில் நாம் பல ஃபோல்டரை வைத்து இருப்போம் ஆனால் நாம அனைத்து ஃபோல்டரையும் அனைத்து இடங்களிலும் (அலுவலகம் வீடு மொபைல்) SYNC செய்ய வேண்டிய தேவை இருக்காது (இது புரிய என்னுடைய முந்தைய பதிவை படியுங்கள் எளிதாக இருக்கும்) அதனால் பெரிய அளவுள்ள ஃபோல்டர் தவிர்த்து நமக்கு தேவையான ஃபோல்டர் மட்டும் SYNC செய்யலாம் தற்போது மைக்ரோசாஃப்ட் SkyDrive ல் இது போல தேர்வு செய்ய முடியாதால் நமக்கு SYNC செய்யத் தேவையில்லாத ஃபோல்டர் கூட அனாவசியமாக SYNC செய்ய வேண்டியதாக இருக்கும். இப்பவும் புரியவில்லை என்றால் இன்னும் இரண்டு முறை படியுங்கள் ஓகே ஆகி விடும் icon smile விரிவான பார்வை   Dropbox Google Drive SkyDrive அப்பவும் புரியவில்லையே என்றால்.. நான் “ங்கே”!! icon smile விரிவான பார்வை   Dropbox Google Drive SkyDrive
Google Drive
Google Drive பிரம்மாண்டமாக வந்தாலும் Dropbox தரும் வசதியையே இதுவும் தருகிறது எந்த புதுமையையும் இல்லை. நான் Google Docs பயன்படுத்தி வருகிறேன் அதில் உள்ள ஃபோல்டரை Google Drive ல் இணைக்கும் என்று எதிர்பார்த்தேன் அதே போல செய்து இருக்கிறது அதோடு தற்போது docs.google.com சென்றால் அது drive.google.com க்கு redirect ஆகிறது.
Google Drive பற்றி புதிதாகக் கூற எதுவுமில்லை Dropbox ல் என்ன வசதி உள்ளதோ அது தான் உள்ளது. இதில் உள்ள ஒரு குறை SkyDrive மற்றும் Dropbox Dekstop application activity icon ல் SYNC process நடக்கும் போது activity காட்டும் Google Drive icon லும் காட்டுகிறது ஆனால் தெளிவாக இல்லை ஆகுதா இல்லையான்னு குழப்பமாக இருக்கும். இந்த விசயத்தில் Dropbox தான் சிறப்பாக செயல்படுகிறது.
Google Drive வரும் முன்பு இதே சேவையை கிட்டத்தட்ட Dekstop Application இல்லாமல் Google Docs தளத்தின் மூலம் கூகுள் செய்து வந்தது அப்போது நமக்கு அதிக இடம் தேவை என்றால் பணம் கட்டி பெற்றுக்கொள்ளலாம். இது வருடத்திற்கு ஒரு முறையான கட்டணமாக இருந்தது தற்போது அந்த வசதியை நிறுத்தி விட்டு மாதாமாதம் கட்டும் படி மாற்றி விட்டது. இந்த முறையின் மூலம் நாம அதிக பணம் கட்ட வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம். ஒரு நல்ல விஷயம் முன்னரே இதைப் பயன்படுத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு அதே வருடக் கட்டண முறையே தொடரும் என்று அறிவித்து விட்டது ஆனால் நாம பணம் கட்ட மறந்தாலோ அல்லது renew செய்யாமல் விட்டாலோ இந்த வசதியை இழக்க நேரிடும்.
கூகுள் க்கு புதிய முறை தான் லாபம் பழைய முறை நட்டம் தற்போதைய நிலவரப்படி. இதனால் ஒரு கேடி வேலை செய்து இருக்கிறது என்னவென்றால் முதலில் நம்மால் Manual ஆக renew செய்ய முடியும் அதாவது நமது காலம் முடியும் முன்பே (மறந்து விடுவோம் என்று நான் முன்னரே செய்து விடுவேன்) தற்போது அப்படி செய்ய முடியவில்லை Automatic renewal ஆக மாற்றி விட்டது. இதன் மூலம் உங்கள் Credit Card கணக்கு தவறாக இருந்தாலோ Expire ஆகி இருந்ததாலோ உங்கள் கணக்கை Automatic ஆக renew செய்ய கூகுளால் முடியவில்லை என்றால் உங்கள் Storage கணக்கு காலாவதியாகி விடும். இதன் பிறகு உங்களால் பழைய முறையில் தொடர முடியாது புதிய முறைக்கு அதாவது அதிக பணம் கட்ட வேண்டிய முறைக்கு வந்தாக வேண்டிய நிலை வரும்.
உண்மையிலே கூகுள் கிரிமினலாக யோசித்துள்ளது. இது போல செக் பாயிண்ட் வைத்து எப்படியாவது புதிய முறைக்கு கொண்டு வரப்பார்க்கிறது பழைய முறையில் இருப்பவர்களை. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!
நீங்களே பாருங்கள் பின்வரும் அட்டவணையை. இதில் பழைய முறையில் 20 GB க்கு வருடத்திற்கு 5 USD கட்டினால் போதும் ஆனால் புதிய முறைப்படி 25 GB க்கு (இது தான் குறைந்த பட்சம்) மாதம் $ 2.49 கட்ட வேண்டியதாக இருக்கிறது. பழைய முறையில் 25 GB க்கு 7 USD என்று உத்தேசமாக வைத்துக்கொண்டால் கூட புதிய முறையில் வருடத்திற்கு (12 * 2.49) 29.88 USD வருகிறது 7 USD எங்கே இருக்கிறது 30 USD எங்கே இருக்கிறது? கிட்டத்தட்ட மூன்று மடங்கு மேல் அதிகம். புதிய முறையில் 25 + கூடுதல் GB கொடுத்தாலும் 20 GB போதும் என்று நினைத்தால் இது அவசியமற்றது தானே.
Google Storage price விரிவான பார்வை   Dropbox Google Drive SkyDrive

Post Comment

0 comments: