Tuesday 29 January 2008

கூகுள் அட்சென்ஸ்

கூகுள் அட்சென்ஸ்

உங்களிடம் சொந்தமாக இணையத்தளம் அல்லது ஒரு வலைப்பதிவாவது இருக்கின்றதா??? அப்போ நீங்கள் அட்சென்ஸ் பாவிக்கலாம்.இது கூகிளின் உடைய ஒரு சேவை. இவர்கள் மற்றவர்களிடம் விளம்பரங்களை வாங்கி உங்கள் தளத்தில் காட்டுவார்கள். விளம்பரங்களை உங்கள் தளத்திற்கு வருபவர்கள் சொடுக்கும போது அதற்குப் பணம் அறவிடுவார்கள். அறவிடும் பணத்தை உங்களுடன் பங்கிடுவார்கள்.பணத்தை செக்காக அனுப்புவார்கள். இலவச தளமானாலும் வேலைசெய்யும். அவர்கள் தரும் ஸ்கிரிப்ட் (Code) உங்கள் தளத்தின் டாக்குகளுக்கிடையில் போடவேண்டும். அவ்வாறு போடுவதன் மூலம் உங்கள் தளத்தில் அவர்கள் விளம்பரங்களைக் காணலாம்.நாம் ஏற்கெனவே இணையத்தளமோ அல்லது ப்ளாக்கோ வைத்திருந்தால் அதன் மூலம் உபரியாக பணம் சம்பாதிக்க எளிய வழிதான் இந்த 'ஆட்சென்ஸ்'. 'கூக்கிள் ஆட்வேர்ட்ஸ்' மூலமும் வேறு சில வகைகளிலும் இவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து விளம்பரங்களைப் பெறுகிறார்கள். அந்த விளம்பரங்களை நம் வெப்சைட் மூலம் நுகர்வோருக்கு விளம்பரப்படுத்த வேண்டும். அதற்காக நமக்கு பணம் தருவார்கள். உங்களிடம் ஒரு வெப்சைட் இருந்தால், அதில் நீங்கள் 'ஆட்சென்ஸ்'சை உபயோகப்படுத்தி பணம் சம்பாதிக்கலாம். உங்கள் வெப்சைட்டில் இடம் பெற செய்த 'ஆட்சென்ஸ்சின்' விளம்பரங்கள் கிளிக் செய்யப்படும் எண்ணிக்கையை வைத்து உங்கள் கணக்கில் பணம் ஏற்றப்படும். அது மாதம் ஒரு முறை உங்களுக்கு காசோலையாக அனுப்பி வைக்கப்படும். அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வைத்துள்ளார்கள். 'கூகிள்' மிகவும் நம்பிக்கையான நிறுவனம். மற்ற நிறுவனங்களைப் போல் ஏமாற்றுவதில்லை. பணத்தை தவறாமல் அனுப்பி வைத்துவிடுகிறார்கள். இது பற்றி மேலும் விபரமறிய http://www.google.co.in/intl/en/ads/ என்பதை சுட்டுங்கள். பொறுமையாக படியுங்கள் அனைத்துவிபரமும் இருக்கிறது.ஒரு வெப்சைட் அல்லது ப்ளாக் உருவாக்கிக்கொள்ளுங்கள். பின் மேலே நான் என் சுட்டியில் சென்று பதிவு செய்யுங்கள். நீங்கள் பதிவு செய்யும் போது உங்கள் பெயர், மற்றும் காசோலை அனுப்புவதற்கான வேண்டிய முகவரி மற்றும் உங்களின் இணையதள சுட்டி ஆகியவற்றை கேட்பார்கள். நீங்கள் கொடுக்க வேண்டும். பின் இரண்டு நாட்களுக்குள் உங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டதாற்கான மெயில் அனுப்புவார்கள். உங்கள் கணக்கு ஆக்டிவ் செய்யப்பட்ட பிறகு கூக்ளிஆட்சென்ஸ் வெப்பேஜ் சென்று அவர்களின் விளம்பரங்களை வெளிப்படுத்த தேவையான புரோகிராம் கோடிங்கை தருவார்கள். அதைத்தான் தாங்கள் 'ப்ரமோசனல் கோட்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நாம் அதை அப்படியே காப்பி செய்து நம் இணையதளத்தில் இடையில் போட்டால் போதும். நம் வெப் தளத்தில் அவர்களின் விளம்பரம் அருமையாக காட்சிதரும்.

Post Comment

0 comments: