Tuesday 31 August 2010

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க!

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க

cassette tapes பயன்கள் தபோது இல்லை என்றாலும் இன்னும் பொக்கிசமாக ஒருசில ஆடியோ கேசெட்களை நாம் வைதிருக்கத்தான் செய்கின்றோம்.

ஆடியோ கேசட்டில் இருக்கும் நமக்கு பிடித்த பாடல்களோ அல்லது நமக்கு பிடித்தமான வர்களின் பேச்சுக்களை பதிவுசெய்து வைத்து இருந்தாலோ அதை கணினியில் சேமித்து வைக்கலாம் CD அல்லது மெமோரி கார்டில் மாற்றி கேட்டு மகிழலாம், அதுவும் மிக சுலபமாக!

பொதுவாக அதற்கென்று விசேஷ RCA output jacks இணைப்புடன் "டெக்" (Deck) மூலமே இப்படி மாற்றமுடியும்.

ஆனால் இதற்க்கு மாற்றுவழி மூலம் மிக சுலபமாக மாற்றியும் விடலாம்.

Cassette Tape Deck இல்லாமலேயே ஏதேனும் ஒரு ஹைதர் காலத்து ஆடியோ பிளேயர் இருந்தாலே போதும் cassette இருபவைகளை மிக சுலபமாக கணினியில் சேமித்துவிடலாம். ஆனால் ஒன்று அந்த ப்ளேயரில் earphone மாட்டகூடிய jack இருக்கவேண்டு earphone jack கீழே பார்க்கவும்.

.
மற்றும் கணிணியி விசேஷ மென்பொருள் ஒன்று நிறுவிக்கொள்ளவேண்டும்

Audacity என்று சொல்லகூடிய இந்தமென்பொருளை(2.12 MB) இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

கணினியையும் ஆடியோ பிளேயரையும் இணைப்பதை பார்போம்.

முதலில் இனைபதற்கு தேவையான கேபிளை கீழே பார்க்கவும்.

Photobucket

Photobucket

கணினியில் இணைக்கப்பட்ட வேண்டிய இடம்(earphone jack)ரோஸ் கலரில் (mic படம்போட்டது) அதில் இணைக்கவேண்டும் கீழே பார்க்கவும்.
Photobucket

Photobucket

இப்போது ஆடியோ பிளேயரையும் கணினியையும் இரண்டிலும் இருக்கும் earphone jackகில் இணைத்தபின் இந்த மென்பொருளை திறக்கவும் கீழ் இருபதைபோல் இதன் விண்டோ திறக்கும்.
Photobucket

இப்போது எந்த கேசட்டில் வுள்ள பாடல்களை கணினியில் சேமிக்க வேண்டுமோ அந்த கேசட்டை ஆடியோ பிளேயரில் பொருத்தி play செய்தால் அந்த பாடல் கணினியில் பாடுவதை கேட்க முடியும் இப்போது Audacity மென்பொருளில் இருக்கும் record என்பதினை சொடுக்கினால் பதிவு தொடங்கிவிடும்.

Photobucket

பதிவுகள் முடிந்தபின் Audacity விண்டோவில் மேலே இடது பக்கம் இருக்கும் file என்பதினை சொடுக்கி அதில் இருக்கும் Export As mp3 ... சொடுக்கினால் நொடியில் நிங்கள் பதிவுசெய்தவைகளை கணினியில் mp3 யாக சேமித்துவிடும்.

இதேபோல் டெலிபோனில் இருந்தோ அல்லது ஆடியோ பிளேரில் இருந்தோ இன்னும் எதில்எல்லாம் earphone jack இருக்கின்றதோ அதி இருந்தெல்லாம் FM ரேடியோ பாடல்களே மற்ற நிகழ்ச்சிகளையோ மேற்கூறிய முறையில் இந்த மென்பொருள் மூலம் கணினியில் சேமிக்கலாம் இணையதொடர்பு இல்லாமல் கணினி வைத்து இருபவர்களுக்கு இத்தகைய வழிமுறை பயனளிக்கும்.
Photobucket
Photobucket

அதேபோல் தொலைகாட்சியில் நமக்கு பிடித்த பாடல்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ இதேமுறையை பின்பற்றி கணினியில் பதிவு செய்யலாம்.

Post Comment

அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver

நாம் கணினியில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம் முழுவதும் செய்து முடித்துவிட்டு தெரியாமல் Save செய்யாமல் மூடிவிடுவோம். அல்லது நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறால் திடீரென நம் கணினி முடங்கி நிற்கும் அந்த சமயத்தில் நாம் Endtask செய்தோ அல்லது கணினியை Restart செய்தோ திரும்பவும் கணினியை இயங்கும் நிலைக்கு கொண்டு வரும் அப்படி வரும்போது நாம் கணினியில் கடைசியாக செய்த வேலை Save செய்ய மறந்திருப்போம் இது போல சமயங்களில் இந்த மென்பொருள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பயன்கள் :
  • இந்த மென்பொருளை உபயோகிப்பதால் நாம் ஒவ்வொரு முறையும் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • நாம் எந்த ப்ரோக்ராமில் வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அது தானாகவே சேமிக்க படும்.
  • இந்த மென்பொருளை Install செய்ய தேவையில்லை, நேரடியாக இயக்கி கொள்ளலாம்.
  • சிறிய அளவே உடையது(768 kb) .தரவிறக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து பின்னர் வரும் AutoSaver என்ற பைலை நேரடியாக உபயோகிக்கலாம்(Install செய்ய வேண்டியதில்லை). அந்த பைலை இயக்கினால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

  • Save Interval: இந்த விண்டோவில் நீங்கள் உங்கள் உங்கள் பக்கங்களை Save செய்வதற்கான நேர இடைவெளியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள், இதில் குறைந்தது 15 வினாடிகள் வரை தேர்வு செய்யலாம்.
  • Run Windows Starts : இது உங்களுக்கு தேவையென்றால் தேர்வு செய்து கொள்ளலாம் இல்லையேல் விட்டு விடலாம். இதை தேர்வு செய்தால் உங்கள் கணினி துவக்கியதும் இது தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.
  • முடிவில் Hide என்பதை கிளிக் செய்தவுடன் அந்த மென்பொருள் மறைந்து விடும். இயங்க ஆரம்பிக்கும்.
அவ்வளவு தான் இனி நீங்கள் தேர்வு செய்த நேர இடைவெளிக்கு ஒருமுறை நீங்கள் எந்த ப்ரோக்ராமில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அது தானகவே Save செய்து விடும் இனி நீங்கள் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.

Important Note : நீங்கள் Browsing ஆரம்பிப்பதற்கு முன்னாள் இந்த மென்பொருளை நிறுத்தி விடுங்கள். இல்லையேல் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வலை பக்கங்களையும் சேமிக்க ஆரம்பிக்கும். அப்புறம் தேவை படும் போது இயக்கி கொள்ளுங்கள்.

Post Comment

உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள் - Free Memory Improve Master

நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.

இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும். இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.
Information Overview :
இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம்.

Memory Optimization
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும்.
  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும்.
  • அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும்.
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.

Post Comment

Sunday 29 August 2010

உங்களிடம் உள்ள கோப்புகளில் வைரஸ் உள்ளதா என அறிய ஒரு தளம்.

நம்மிடம் பல சிறந்த ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள் இருக்கும் அவற்றில் சில நம்மிடம் உள்ள கோப்புகளில் வைரஸ் உள்ளது எனவும் மற்றொன்று வைரஸ் இல்லை எனவும் கூறும். இவற்றில் எது உண்மை என, நமக்கு குழப்பம் வரலாம்.அதற்கென உள்ள தளம் தான் JOEBOX என்னும் தளம் ஆகும்.

இந்த தளத்திருக்கு சென்று உங்களுடைய -மெயில் முகவரி,
கோப்பினை தேர்ந்தெடுத்து உங்களுடைய Operating system யை
தேர்ந்தெடுத்து உள்ளிட்டால் உங்களின் -மெயில் முகவரிக்கு
தகவல்களை அனுப்பி விடுவார்கள். இது பயனுள்ளதாக இருக்கும்.

Post Comment

Youtube வீடியோக்களை பதிவிறக்க ஒரு நீட்சி

இணையத்தில் வீடியோ பார்க்க பெரும்பான்மையரனால் பயன்படுத்தப்படும் தளம் Youtube ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை பதிவிறக்க நாம் மூன்றாம் தர மென்பொருளை நாடி செல்ல வேண்டும்.

அப்படி இல்லாமல் Youtube தளத்தில் இருந்தே வீடியோக்களை நேரடியாக பதிவிறக்கி கொள்ள முடியும். அதற்கு Fast YouTube Download என்னும் நீட்சி உதவுகிறது.

இந்த நீட்சியை பதிந்து கொண்டு , பின் கணினியை ஒரு முறை Restart செய்து கொள்ளவும். பின் உளவியை திறந்து Youtube தளத்திற்க்கு சென்று வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும்.

இந்த நீட்சியில் 3GP,MP4,FLV,HD போன்ற வகைகளில் Download செய்து கொள்ள முடியும்.

Post Comment

YOUTUBE-ல் உள்ள வீடியோவை MP3 யாக பதிவிறக்க

இணையத்தில் உலவும் அனைவரும் Youtube தளத்தை அறிந்திருப்போம் இந்த தளமானது வீடியோவை பகிர்ந்து கொள்ளும் தளமாகும். இந்த தளத்தில் பல்லாயிரகோடி கணக்கான வீடியோக்கள் உள்ளன. இவற்றை நாம் முழு வீடியோவாக மட்டுமே பதிவிறக்கி பாப்போம். ஆனால் இவற்றில் உள்ள வீடியோவில் இருந்து வாய்ஸ் (SOUND) னை மற்றும் தனியாக பிரித்து கேட்க பலருக்கும் ஆசை இருக்கும்.

மேலும் பழையபாடல்கள் கிடைப்பது அரிதாகும், Youtube ல் தேடுனால் அனைத்தும் வீடியோவாகவே இருக்கும் அவற்றை நம்து விருப்பத்திற்கு எற்றது போல் MP3 மாற்றி கேட்க முடியும். இதற்கு FetchMP3 எனும் தளம் உதவுகிறது. இந்த தளத்தில் நமக்கு வேண்டிய வீடியோவை சர்ச் செய்து அதனை MP3 யாக பதிவிறக்கி கொள்ள முடியும்.

தளத்தின் முகவரி: FetchMP3

இந்த தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான பாடலை MP3 யாக பதிவிறக்க முடியும். இந்த தளத்தில் Youtube தளத்தில் Low,High,Very High போன்ற பல்வேறு Format களில் Download செய்ய முடியும்.

Post Comment

Saturday 28 August 2010

MS-OFFICE 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்

MS-ஆப்பிஸ் 2010 யை பற்றியும் windows XP SP 2வில் install செய்யும் வழியும்

தற்சமயம் வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பு, அதன் பதியப்பட்ட நிலையில் தரப்பட்டிருக்கும் சில வடிவமைப்புகளையும், வசதிகளையும், நம் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வழிகளைத் தந்துள்ளது. பற்றியும்

இந்த தொகுப்பினைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், தொடக்க நிலையில் உள்ள இதன் வண்ணம், பயன்பாட்டில் உள்ள சில வழிகள் ஆகியவை தங்கள் ரசனைக்கும் பயன்படுத்தும் முறைக்கும் இணைந்து செல்வதில்லை என்றே கருதுகிறார்கள். எனவே இவற்றை மாற்றும் வழிகளையும் இந்த தொகுப்பு தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.

1.வண்ணக் கட்டமைப்பை மாற்றுக:
இது ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்து வதிலான மாற்றம் அல்ல. அதனைப் பயன்படுத்தும் சூழ்நிலை சம்பந்தப்பட்டது. இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ள மென்மையான ஊதா வண்ணத்துடன் தரப்பட்டுள்ள அனைத்து வண்ணங்களும், வேலை பார்க்கையில் சற்று எரிச்சலைத் தந்து, வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகப் பலரும் எண்ணுகின்றனர்.

குறிப்பாக கருப்பு வண்ணப் பின்னணியில் கிடைக்கும் வெள்ளை வண்ணத்திலான எழுத்துக்களை யாரும் விரும்புவதில்லை. இந்த வண்ணக் கட்டமைப்பினையே மாற்றிவிடலாம். இந்த வழிகள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களுக்கும் பொருந்தும். முதலில் பைல் டேப்பினத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் உள்ள ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடுக. மீண்டும் கிடைக்கும் பிரிவுகளில், இடது புறம், ஜெனரல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது கிடைக்கும் கலர் ஸ்கீமில் ஒரு கீழ்விரி கட்டம் தரப்படும். இங்கு உங்களுக்குத் தேவையான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு வண்ணத்தையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

2. ரிப்பனை மாற்றி அமைக்க:
ஆபீஸ் 2007 தொகுப்பில், முதல் முதலாக ரிப்பன் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போது பலரும் இதனை விரும்பவில்லை. புதியதாக ஒன்றைத் தந்து பயன்படுத்து என்று சொன்னால், பொதுவாக யாருக்குமே ஒரு வெறுப்பு வரும். ஆனாலும் வேண்டா வெறுப்பாக இதனை அனைவரும் பயன்படுத்தினார்கள்.

இப்போது ஆபீஸ் 2010 தொகுப்பிலும் இது தரப்பட்டுள்ளது. இதனை ஏன் நமக்கேற்றபடி வைத்துக் கொள்ளக் கூடாது? என்ற நம் கேள்விகளுக்கேற்ப, மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த ரிப்பனை வளைக்க சில வழிகளைத் தந்துள்ளது. இந்த வழிகள் மூலம், ஆபீஸ் 2003 தொகுப்பிலிருந்து, புதிய தொகுப்பிற்கு மாறுபவர்களுக்கு ஏற்படும் சில தொல்லைகளைத் தீர்க்கலாம்.

இதில் ஒருவர் அடிக்கடி பயன்படுத்தாத சில கட்டளைகளை இதிலிருந்து நீக்கலாம். அல்லது அவற்றைத் தனியே பிரித்து, டேப் ஒன்றில், இன்னொரு இடத்தில் வைக்கலாம். கட்டளைகளின் பெயர்களைக் கூட மாற்றலாம். இதில் இன்னொரு சிறப்பான அம்சமும் உள்ளது. இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட ரிப்பனை, சேவ் செய்து இன்னொரு கம்ப்யூட்டரில் உள்ள ஆபீஸ் 2010 தொகுப்பிலும் அமல் படுத்தலாம். உங்கள் வீட்டு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் ஆபீஸ் தொகுப்பில் மாற்றப்பட்டதனை, அலுவலகக் கம்ப்யூட்டருக்கும், லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் கொண்டு செல்லலாம். மாற்றும் வழிகள் அனைத்தும்http://news.officewatch.com/t/n.aspx?a=968 என்ற முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ளது.

3. குயிக் அக்செஸ் டூல்பார்:
ரிப்பனை நம் வழிக்குக் கொண்டு வந்தது போல, அடிக்கடி நாம் பயன்படுத்தும் சில கட்டளைகளை, அவை எந்த ரிப்பன் டேப்பில் இருந்தாலும், விரைவாகப் பெற வேண்டும் என விரும்புவோம். இங்கு தான் குயிக் அக்செஸ் டூல் பார் நம் உதவிக்கு வருகிறது. ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துபவர்கள் பலர் இந்த வசதியினை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை.
இந்த டூல்பாரில் Save, Save As, Undo, Redo, Email, New Comment மற்றும் New Document போன்ற அனைத்து கட்டளைகளையும் போட்டு வைத்துப் பயன்படுத்தலாம். அதே போல இந்த டூல்பாரையும், ரிப்பனுக்கு மேலாக இல்லாமல், அதன் கீழாக வைப்பது, இவற்றை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.

4. லைவ் பிரிவியூ இயக்கலாமே!:
வேர்ட் டாகுமெண்ட்களில் ஏதேனும் ஒன்றை பேஸ்ட் செய்கையில், அது எந்த வடிவமைப்பில், டாகுமெண்ட்டில் ஒட்டிக் கொள்ளும் என்பது தெரியவராது. ஒட்டிய பின்னரே, இதனை வேறு முறையில் வைத்திருக்கலாமே என்று எண்ணுவோம். இந்த குழப்பத்தினைத் தவிர்க்க, வேர்ட் தொகுப்பில் லைவ் பிரிவியூ என ஒரு வசதி தரப்பட்டுள்ளது. பிரிண்ட் கொடுக்கும் முன், டாகுமெண்ட் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனைப் பிரிண்ட் பிரிவியூ மூலம் அறிந்து கொள்வது போல, ஒட்டும் முன் எப்படி ஒட்டப்படும் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். எந்த பார்மட்டில் ஒட்டப்பட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்து, அந்த வகையில் ஒட்டலாம். ஆனால், இந்த வசதி, ஆபீஸ் 2010 தொகுப்பினைப் பதிகையில், இயக்கப்படாமல் உள்ளது. இதனை இயக்க நிலையில் வைத்திட, File | Options சென்று Generalபிரிவில் Enable Live Preview செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

5. ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் சரி செய்க:
டாகுமெண்ட் தட்டச்சு செய்கையில் ஏற்படும் பொதுவான பிழைகள் தானாகச் சரி செய்யப் படுவதற்காகத் தரப்பட்டுள்ள ஒரு அருமையான வசதி ஆட்டோ கரெக்ட் ஆகும். இதனால் நமக்கு நேரம் மிச்சமாகும். ஆனால் சில வேளைகளில் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என சில சொற்களை டைப் செய்தாலும், ஆட்டோ கரெக்ட் வசதி, அதனைத் திருத்தி மாற்றி அமைக்கும்.

எடுத்துக்காட்டாக, சொல் ஒன்றின் முதல் இரு எழுத்துக்களைப் பெரிய எழுத்துக்களாக அமைத்து எழுத வேண்டிய சூழ்நிலையில், அப்படி அமைத்திடும்போது, ஆட்டோ கரெக்ட் அதனைத் தவறென்று கருதி, மாற்றிவிடும். நாம் என்ன செய்தாலும் இரண்டு எழுத்துக்களைத் தொடர்ந்து பெரிய எழுத்துக்களாக அமைத்து சொல்லை அமைக்க முடியாது.

எடுத்துக்காட்டாக, Thomas Rick என்பவர் அமைத்த ஒரு நிறுவனம் TRick என்றே எழுதப்படும். இதனை TRick என தட்டச்சு செய்கையில் ஆட்டோ கரெக்ட் TRick என மாற்றிவிடும். இதற்காக ஆட்டோ கரெக்ட் பட்டியல் சென்று TWo INitial Caps என்ற பதிவையே எடுத்துவிட்டால், பின் மற்ற தவறுகள் திருத்தப்படாமல் அமைக்கப்படும். எனவே சில விதிவிலக்குகளை இங்கு அமைத்திட வேர்டில் வழி தரப்பட்டுள்ளது. இந்த வழியைக் கீழ்க்காணும் முறையில் பெறலாம்.

1. BackStage மெனுவில் இடது பக்கம் உள்ள பிரிவில் Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Proofing என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2. அடுத்து AutoCorrect என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

3. AutoCorrect டேப்பில், Exceptions என்னும் பட்டனில் கிளிக் செய்திடுக.

4. பின்னர் INitial CAps என்ற டேப்பில் கிளிக் செய்து, Don’t Correct என்பதின் கீழ் குறிப்பிட்ட சொல்லை நீங்கள் விரும்பும் வகையில் டைப் செய்து, அதன்பின் Add என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே அழுத்தி வெளியேறவும்.
இவ்வாறு விதிவிலக்கான சொற்கள் அனைத்தையும் இதில் இணைத்து வைத்துவிட்டால், ஆட்டோ கரெக்ட் உங்கள் விருப்பத்திற்கு மாறாகத் திருத்தாது.
மேலே தரப்பட்டுள்ள மாற்றங்களைப் போல, வேர்ட் தொகுப்பில் இன்னும் சில மாற்றங்களையும் மேற்கொண்டு, அதனை நம் வசதிக்கேற்ப அமைத்து வேகமாகப் பணியை மேற்கொள்ளலாம்.

புதிதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆப்பிஸ்-2010 தொகுப்பை விண்டோஸ்-XP சர்விஸ்பேக் 2 வில் இண்ஸ்டால் செய்ய இயலாது. இந்த ஆப்பிஸ் 2010 யை XP-SP3,Vista,Windows 7 போன்றவற்றில் மட்டுமே இன்ஸ்டால் செய்ய இயலும். நாம் XP-SP2 வில் இன்ஸ்டால் செய்ய முயன்றால்

“Setup is unable to proceed due to the following error(s): The installation of Microsoft Office 2010 requires that MSXML version 6.10.1129.0 be installed on your computer Install this component and re-run the setup. Correct the issue(s) listed above and re-run the setup.”

இது போன்ற பிழை செய்தி வரும். இதற்கு காரணம் MSXML version 3.10.1129.0 விண்டோஸ்-XP சர்விஸ் பேக்2 வில் இல்லாமல் இருபதே காரணம் ஆகும்.

இந்த MSXML யை தரவிறக்கி நிறுவிவிட்டால் OFFICE-2010 யை கணினியில் நிறுவிவிட முடியும்.
Download MSXML 6.0 SP1
இந்த MSXML பதிவிறக்கி இன்ஸ்டால் செய்த பிறகு OFFICE-2010 யை தாராளமாக XP-சர்விஸ் பேக் 2 விலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.

4. பின்னர் INitial CAps என்ற டேப்பில் கிளிக் செய்து, Don’t Correct என்பதின் கீழ் குறிப்பிட்ட சொல்லை நீங்கள் விரும்பும் வகையில் டைப் செய்து, அதன்பின் Add என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே அழுத்தி வெளியேறவும். இவ்வாறு விதிவிலக்கான சொற்கள் அனைத்தையும் இதில் இணைத்து வைத்துவிட்டால், ஆட்டோ கரெக்ட் உங்கள் விருப்பத்திற்கு மாறாகத் திருத்தாது.