Tuesday 31 August 2010

ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க!


ஆடியோ கேசட்டில் இருக்கும் பாடல்களை கணினியில் சேமிக்க












cassette tapes பயன்கள் தபோது இல்லை என்றாலும் இன்னும் பொக்கிசமாக ஒருசில ஆடியோ கேசெட்களை நாம் வைதிருக்கத்தான் செய்கின்றோம்.




ஆடியோ கேசட்டில் இருக்கும் நமக்கு பிடித்த பாடல்களோ அல்லது நமக்கு பிடித்தமான வர்களின் பேச்சுக்களை பதிவுசெய்து வைத்து இருந்தாலோ அதை கணினியில் சேமித்து வைக்கலாம் CD அல்லது மெமோரி கார்டில் மாற்றி கேட்டு மகிழலாம், அதுவும் மிக சுலபமாக!







பொதுவாக அதற்கென்று விசேஷ RCA output jacks இணைப்புடன் "டெக்" (Deck) மூலமே இப்படி மாற்றமுடியும்.





ஆனால் இதற்க்கு மாற்றுவழி மூலம் மிக சுலபமாக மாற்றியும் விடலாம்.


Cassette Tape Deck இல்லாமலேயே ஏதேனும் ஒரு ஹைதர் காலத்து ஆடியோ பிளேயர் இருந்தாலே போதும் cassette இருபவைகளை மிக சுலபமாக கணினியில் சேமித்துவிடலாம். ஆனால் ஒன்று அந்த ப்ளேயரில் earphone மாட்டகூடிய jack இருக்கவேண்டு earphone jack கீழே பார்க்கவும்.







.
மற்றும் கணிணியி விசேஷ மென்பொருள் ஒன்று நிறுவிக்கொள்ளவேண்டும்






Audacity என்று சொல்லகூடிய இந்தமென்பொருளை(2.12 MB) இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

கணினியையும் ஆடியோ பிளேயரையும் இணைப்பதை பார்போம்.

முதலில் இனைபதற்கு தேவையான கேபிளை கீழே பார்க்கவும்.


Photobucket

Photobucket


கணினியில் இணைக்கப்பட்ட வேண்டிய இடம்(earphone jack)ரோஸ் கலரில் (mic படம்போட்டது) அதில் இணைக்கவேண்டும் கீழே பார்க்கவும்.
Photobucket

Photobucket



இப்போது ஆடியோ பிளேயரையும் கணினியையும் இரண்டிலும் இருக்கும் earphone jackகில் இணைத்தபின் இந்த மென்பொருளை திறக்கவும் கீழ் இருபதைபோல் இதன் விண்டோ திறக்கும்.
Photobucket


இப்போது எந்த கேசட்டில் வுள்ள பாடல்களை கணினியில் சேமிக்க வேண்டுமோ அந்த கேசட்டை ஆடியோ பிளேயரில் பொருத்தி play செய்தால் அந்த பாடல் கணினியில் பாடுவதை கேட்க முடியும் இப்போது Audacity மென்பொருளில் இருக்கும் record என்பதினை சொடுக்கினால் பதிவு தொடங்கிவிடும்.


Photobucket

பதிவுகள் முடிந்தபின் Audacity விண்டோவில் மேலே இடது பக்கம் இருக்கும் file என்பதினை சொடுக்கி அதில் இருக்கும் Export As mp3 ... சொடுக்கினால் நொடியில் நிங்கள் பதிவுசெய்தவைகளை கணினியில் mp3 யாக சேமித்துவிடும்.

இதேபோல் டெலிபோனில் இருந்தோ அல்லது ஆடியோ பிளேரில் இருந்தோ இன்னும் எதில்எல்லாம் earphone jack இருக்கின்றதோ அதி இருந்தெல்லாம் FM ரேடியோ பாடல்களே மற்ற நிகழ்ச்சிகளையோ மேற்கூறிய முறையில் இந்த மென்பொருள் மூலம் கணினியில் சேமிக்கலாம் இணையதொடர்பு இல்லாமல் கணினி வைத்து இருபவர்களுக்கு இத்தகைய வழிமுறை பயனளிக்கும்.
Photobucket
Photobucket


அதேபோல் தொலைகாட்சியில் நமக்கு பிடித்த பாடல்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ இதேமுறையை பின்பற்றி கணினியில் பதிவு செய்யலாம்.

Post Comment

0 comments: