Monday 21 May 2012


Chrome உலவியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

Chrome Browser பயன்படுத்தும் நண்பர்கள் அவர்கள் Task Manager பகுதியை ஓபன் செய்து பார்த்தால் அது மிக அதிகமான Memory-ஐ பயன்படுத்துவது தெரிய வரும். இதனால் உங்கள் கணினி இயங்கும் வேகம் குறையும், சில நேரங்களில் Chrome கூட மெதுவாக இயங்க ஆரம்பிக்கும். இதற்கான தீர்வை இந்தப் பதிவில் காண்போம்.
speed up your chrome browser
இதற்கு மிக முக்கியமான காரணம் Chrome-இல் நீங்கள் சேர்த்துள்ள Extensions தான். தேவை இல்லாதவற்றை நீக்குவது மற்றும் தேவை இல்லாத நேரத்தில் சிலவற்றை ஸ்டாப் செய்ய வேண்டும்.

1. Extension-களை கட்டுபடுத்தவும் 

Shift+ESC அழுத்துவதன் மூலம் நீங்கள் Chrome-இன் Task Manager ஐ ஓபன் செய்யலாம். அதில் இயங்கும் உங்கள் தேவைப்படாத Extension-களை தெரிவு செய்து End Process தந்து விடவும். 


2. Fastest Chrome Extension பயன்படுத்தவும். 

அடுத்து இந்த இணைப்பில் சென்று FastestChrome என்ற Extension-ஐ Add செய்து கொள்ளவும். இது உங்கள் Chrome உலவியின் தேடுதல் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் சில சிறப்பம்சம்கள் 

quick definitions 
auto-load next pages
search faster

3. History, Cookies ஆகியவற்றை நீக்கவும்

அடுத்து History, Cookies போன்றவற்றை தொடர்ந்து நீக்கி வரவும். இதனை Chrome Settings பகுதியில் Under The Hood/Bonnet பகுதியில் காணலாம். 


4. Speed Dial பகுதியை பயன்படுத்தவும்

அடிக்கடி செல்லும் பக்கங்களை Speed Dial என்ற பக்கத்தில் Add செய்து கொள்ளுங்கள் இதன் மூலம் கொஞ்சம் வேகப் படுத்தலாம். 

5. தேவை இல்லாத விளம்பரங்களை நிறுத்தவும். 

சில தளங்களில் உள்ள விளம்பரங்கள் அந்த தளம் லோடு ஆகும் வேகத்தை குறைக்கும் வாய்ப்பு அதிகம். எனவே அவற்றை லோட் ஆகாமல் நீங்கள் தடுக்கலாம். 

இதற்கு AdBlock Extension பயன்படுகிறது. இது முழுவதுமாக விளம்பரங்களை நீக்கி விடுகிறது. படத்தில் காணவும். 


ADBLOCK பயன்படுத்துவது எப்படி? என்பதை இந்தப் பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



Read more: http://www.thangampalani.com/2012/05/chrome.html#ixzz1vXKzErkf

Post Comment

0 comments: