Tuesday 21 September 2010

உங்கள் கணினியை வேகமாகவும் சிறப்பாகவும் Defragment செய்ய

நாம் கணினியில் பல வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது நமக்கு தேவையானதை நம் கணினியில் சேமித்து வைத்து கொள்வோம். அப்படி நாம் கணினியில் சேமிக்கும் போது நம் கணினி ஒரு பைலை சிறு சிறு பகுதிகளாக பிரித்து நம் கணினியின் வெவ்வேறான பகுதிகளில் சேமித்து விடுகிறது. திரும்பவும் நாம் அந்த பைலை ஓபன் செய்யும் போது நம் கணினி சேமித்து வைத்த இடங்களில் இருந்து அலைந்து திரிந்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நமக்கு கொடுக்கிறது. நாம் பைலை ஓபன் செய்யும் நேரம் ஆவதற்கு இது தான் காரணம்.


அதற்கு நாம் இந்த Defragmented செய்யும் போது வெவேறான பகுதிகளில் உள்ள சிறு சிறு பகுதிகளை ஒன்றாக ஒரே இடத்தில் சேர்த்து வைக்கும். நாம் ஒவ்வொரு பைலை திறக்கும் போதும் நம் கணினி அலைந்து திரிய வேண்டியதில்லை ஒரே இடத்தில் இருந்த நமக்கு தகவலை தரும். நமக்கும் விரைவாக நமக்கு வேண்டிய பைலை ஓபன் செய்து கொள்ளலாம்.
Photobucket
நம் கணினியிலேயே Defragment செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஆமை வேகத்திலும் சிறப்பாகவும் செயல் படுவதில்லை. அதற்கு தான் இந்த மென்பொருளின் உதவி நமக்கு தேவை படுதிறது.
பயன் படுத்தும் முறை:
  • இந்த மென்பொருளை தரவிறக்கி வரும் .rar பைலை extract செய்து கொள்ளுங்கள்.
  • வரும் .exe பைலை இரண்டு க்ளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
  • இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் நீங்கள் Defragment செய்யவேண்டிய டிரைவ் செலக்ட் செய்து கொண்டு கீழே உள்ள Alalyze என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்கள் டிரைவ் ஸ்கேன் ஆகி உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதற்கு அடுத்து அருகில் உள்ள Defrag என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த டிரைவ் Defragment ஆகிவரும்.
  • இதில் ஒவ்வொரு முறையும் நீங்கள் Degfrag செய்யவேண்டிய அவசியமில்லை. அதில் உள்ள Auto Defragmentation என்ற வசதியை தேர்ந்தெடுத்து உங்களுக்கு தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்துகொள்ளவும்.
  • இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் சென்று Defrag செய்ய வேண்டிய அவசியமில்லை நீங்கள் தேர்ந்தெடுத்த வசதிகேற்ப அது தானகவே Defrag செய்து விடும். உங்கள் கணினியும் வேகமாக செயல் படும்.

Post Comment

0 comments: