Tuesday 7 September 2010

கணனி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அல்டிமேட் பூட் சிடி (UBCD4WIN)



கணனியை ஸ்டார்ட் செய்ய முடியாத நேரத்தில் அவற்றை பழுது பார்ப்பதற்காக பூட் சிடி மூலம் எம்.எஸ் டாஸ் வடிவில் ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் டாஸ் வடிவமைப்பு மற்றும் அதன் கமாண்ட்களை பயன்படுத்துவதற்கு பலருக்கும் விருப்பம் இருக்காது. அதற்கு பதிலாக விண்டோஸ் எக்ஸ்பி போன்ற வடிவமைப்புடன் கணனியை சிடி கொண்டு பூட் செய்தால் இலகுவல்லவா? அதற்கு உதவியாக இருக்கிறது இந்த விண்டோஸ் அல்டிமேட் பூட் சிடி.

இலவசமாக இந்த பூட் சிடியின் ISO வினை டவுண்லோட் செய்து பின்னர் பூட் சிடியாக சேமித்து வைத்துக் கொண்டால் கணனி பிரச்சனைகள் வரும்போது அவற்றை இலகுவாக இதன் மூலம் தீர்க்க முடிகிறது.

இந்த பூட் சிடியில் கணனியை ரிப்பேர் செய்வதற்குதவும் ஏராளமான மென்பொருட்களும் இயங்கக் கூடிய வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

இணையத்தள முகவரி
http://www.ubcd4win.com/index.htm

டவுண்லோட் செய்வதற்கு
http://www.ubcd4win.com/downloads.htm

ஸ்கீரீன் சாட்ஸ்

Post Comment

0 comments: