Tuesday 7 September 2010


சிடி இமேஜ்களை ஹாட்டிஸ்க்கில் விர்ச்சுவல் டிரைவாக மவுண்ட் செய்வதற்கு சிறந்த டூல்.



.ISO அல்லது .BIN பைல்களை இணையத்தில் தரவிறக்கியிருப்பீர்கள். அவற்றை பயன்படுத்த சிடியில் அல்லது டிவிடியில் பதிந்து அதன் பின்னரே நிறுவ வேண்டியிருக்கும்.


இவ்வாறு செய்வதற்கு நேரம் மற்றும் சிடிக்களும் விரயமாகலாம். இவற்றிற்கு தீர்வாக கணனியில் இருக்கும் ஹாட்டிஸ்க்கின் தேவையான பகுதியை ஒரு விர்ச்சுவல் டிரைவாக மவுண்ட் செய்து பயன்படுத்தலாம்.

அதற்கு VirtualCloneDrive எனும் சிறிய இலவச டூலை நீங்கள் பயன்படுத்தலாம்.

VirtualCloneDrive என்ற டூலை முதல் தடவை பயன்படுத்தும் போது அடிப்படை செட்டிங்களை கான்விகர் செய்ய வேண்டும்.



அவை எத்தனை விர்ச்சுவர் டிரைவ்களை பயன்படுத்த போகிறீர்கள், அண்மையில் மவுண்ட் செய்யப்பட்ட டிரைவ்களின் ஹிஸ்டரி, இறுதியாக மவுண்ட் செய்யப்பட்டதை மீண்டும் தானாக மவுண்ட் செய்வதற்கு, சிஸ்டம் டிரேயில் காண்பிப்பதற்கு போன்றவையாகும்.

எல்லாவற்றையும் செட் செய்த பின்னர் .ISO பைலின் மீது வலது கிளிக் செய்து மவுண்டை தேர்வு செய்தால் குறிப்பிட்ட பைல் கீழுள்ள படத்தில் உள்ளது போல் My Computer இல் சிடி டிரைவ்வாக காட்டப்படும்.



இனி சாதரண சிடியை உபயோகிப்பது போல் இந்த விர்ச்சுவல் டிரைவை பயன்படுத்தலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட சிடி இமேஜ் பைல்களை விர்ச்சுவல் டிரைவாக மாற்றுவது இதன் சிறப்பாகும்.

இது அனைத்து விண்டோஸ் பதிப்புக்களிலும் இயங்கக் கூடியது.

டவுண்லோட் செய்வதற்கு



Post Comment

0 comments: