Monday 20 August 2012

வன்தட்டில் உள்ள பிழைகளை நீக்குவதற்கு


வன்தட்டில் உள்ள பிழைகளை
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டில் பலவிதமான கோளாறுகள் ஏற்பட்டு, அதனால் பிழை செய்தி காணப்படும்.
விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணணியில் தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.
வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை கணணியில் இருந்து நீக்கி விடுவோம்.
நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நீங்காமல் சில கோப்புகள் கணணியிலேயே தங்கிவிடும். அந்த கோப்புகளால் கணணியில் அடிக்கடி பிழைச்செய்தி தோன்றலாம். இதுபோன்ற பிழைச் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது.
இதனை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறந்து சோதனை செய்ய வேண்டிய டிரைவை தெரிவு செய்து, Read Only பொத்தானை அழுத்தி சோதனை செய்து கொண்டு பிழை செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.
பிழை செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த பிழை செய்திகளை மீட்டுக் கொள்ள முடியும். பின் கணணியை மறு தொடக்கம்(Restart) செய்துகொள்ள வேண்டும்.
இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமாகும். விண்டோஸ் 7க்கு இது மிக சிறந்த மென்பொருளாகும்.

Post Comment

0 comments: