Tuesday 1 February 2011

Youtube -லிருந்து வேண்டிய பார்மெட்டுக்கு பதிவிறக்கம் செய்ய

இணையம் பயன்படுத்தினாலே அதில் youtube தவிர்க்க முடியாது. ஏதாவது ஒரு சமயத்தி்ல் நாம் youtube லிருந்து வீடியோவை தரவிறக்கம் செய்வோம். youtube லிருநது டவுண்லோடு செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் இருந்தாலும் சற்று வித்தியசமாக இந்த சாப்ட்வேர் உள்ளது. 4 எம்.பி .கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு இன்ஸ்டால் செய்தததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து Youtube URL ஐ காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.

தரவிறக்கம் செய்யப்படும் பைல் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு இதில் எளிதில மாற்றிக்கொள்ளலாம். இது ஆதரிக்கும் பார்மெட்டாக
1)None (No converting, FLV file type)
(2)AVI (Microsoft Windows Media File Type)
(3)WMV (Zune/PocketPC File Type)
(4)MOV (QuickTime File Type)
(5)MP4 (iPod/PSP/MP4 Player File Type)
(6)3GP (Mobile Phone Video File Type)

உள்ளன. 3 GP ஐ இது ஆதரிப்பதால் செல்போன் மற்றும் ஐ-பாட்டுக்கு இதிலிருந்து நேரடியாக பதிவேற்றிக்கொள்ளலாம்.அதுபோல சில ஆடியோ பைல்கள் பாடல்களை நாம் கேட்கமட்டுமே முடியும். அதை பதிவிறக்கம் செய்ய முடியாது. அந்த மாதிரியான பாடல்களை இதன் மூலம் எளிதில பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடோப் பிரிமியர் உபயோகிப்பவர்கள் யு டியுப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யும் பாடல்களை பிரிமியரில் நேரடியாக பயன்படுத்தமுடியாது. அந்த சமயங்களில் இந்த சாப்ட்வேர் மூலம் MOV பைலாக பதிவிறக்கம் செய்து எளிதில்பயன்படுததிக்கொள்ளலாம்.

Post Comment

0 comments: