Wednesday 9 February 2011

இணையத்தில் பைல்களை வேகமாக பதிவிறக்க/ Download Files Faster




ஹாய்! ஹாய்! ஹாய்......எப்படி இருக்கிங்க....நலமா?ம்ம்ம்ம்.
நான் இந்த பதிவில் தங்களுக்கு கூற இருப்பது, இணையத்தில் இருந்து எப்படி பைல்களை வேகவாக பதிவிறக்கம் பண்றது பற்றி தான்....நாம்மில் அனைவரும் இணையத்தில் பல வேலைகளை மேற்கொள்றோம்...அவற்றில் ஓன்று பைல்களை பதிவிறக்கம் செய்யறது....அதிகமா நம்ம இத தான் பண்றோம்...சிலர் மென்பொருட்களை, சிலர் மீடியா சார்ந்த பைல்களை, சிலர் தகவல்களை பரிமாற என பைல்கள் இறக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.....




இங்க இருக்கிறது சில பிரச்சனைகள் சிலரின் இணையம் வேகம் குறைவாகவே இருக்கும்....நாம் ஓரே நேரத்தில் பல வேலைகளில் இணையத்தில் ஈடுபட வேண்டி இருக்கும் அச்சமயத்தில் நாம் பைல்களை பதிவுயிறக்குவதால் இணையம் வேகம் குறையும்.....மற்றும் அதிக நேரமும் எடுத்துக்கொள்ளும் இதைதடுப்பது எப்படி.....? கவலை வேண்டாம் இதற்கு தான் மிக அருமையான ஓர் மென்பொருள் உள்ளது.

இதை தங்கள் கணினியில் நிறுவிட்டால் போதும்...இதன் மூலம் எந்த பைலையும் வேகமாக பதிவிறக்கலாம். இங்க முன்பை காட்டிலும் இருபது மடங்கு வேகமாக பதிவிறக்கலாம்....இந்த மென்பொருளின் பெயர் ORBIT மிக சிறிய இடத்தை கொண்டுள்ளது...ஆனால் இதன் பணி அருமை...சந்தையில் பல மென்பொருட்கள் கிடைத்தாலும் இதுவே சிறந்ததாக உள்ளது....




இதை பயன்படுத்துவது ஓன்றும் பெரிய கடினமான காரியம் இல்லை மிகவும் எளிமை....முதலில் இணையத்தில் தாங்கள் பதிவிறக்க இருக்கும் பைலின் லிங்க் முகவரியை தெறிந்து கொள்ளவேணும், பின்னர் இந்த மென்பொருளை இயக்கி அதில் New என்பதில் கிளிக் செய்யவும்...பின்னர் அங்கு URL என்பதில் அந்த பைலின் முகவரியை அளிக்கவும்....கடைசியாக Download என்பதை கிளிக் செய்யவும் அவ்வளவு தான்....இனி அதுவே அந்த பைல் வேகமாக பதிவிறக்கம் செய்துவிடும். பதிவிறக்கம் முடிந்தவுடன் தங்களுக்கு தெறிவிக்கப்படும்....



தற்போது எப்படி பைலின் URL கண்டுபிடிப்பது என பார்ப்போம். முதலில் நீங்கள் பதிவிறக்க நினைக்கும் பைலின் மீது Right Click செய்யவும், வரும் விண்டோவில் Copy Link address என்பது கிளிக் செய்யவும்..தற்போது அந்த பைலுக்கான URL காப்பி செஞ்சாச்சு இனி இதை இந்த மென்பொருளில் இடவும்

Post Comment

0 comments: