Tuesday, 21 August 2012


உங்கள் Mobilephoneஐ பாதுகாக்க சில இலவச antivirus



இன்றைய  இளம்வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus மென்பொருட்களை இங்கு பதிவாக கொடுத்து உள்ளேன். இதை பயன் படுத்தி உங்கள் மொபைல் போனை பாதுகாப்பானதாக வைத்து கொள்ளுங்கள்.

                                                           NetQin Mobile Anti Virus


                                      

இந்த தளம் ஆன்டி வைரசின் செயல்பாடு மிகவும் சிறந்ததாக உள்ளது. இந்த தளத்தில் சென்று உங்கள் மொபைலின் மாடல் எண், மொழி மற்றும் மொபைல் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி உங்கள் மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.

இந்த மென்பொருளை தரவிறக்க NetQin Mobile Anti Virus


                                                        Look out antivirus

                                        
இந்த ஆன்டி வைரசும் நன்றாக செயல் படுகிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனின் அனைத்து தகவல்களையும் நகல் எடுத்து வைத்து கொள்ளலாம். தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம். இதில் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இதை தரவ்றக்க இந்த லிங்கில் சென்று உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் மொபைல் போனின் ரகத்தை குறிப்பிட்டு GO க்ளிக் செய்து உடன் மேலே Download என்ற மஞ்சள் நிற பட்டன் வரும் இதை க்ளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம்.

இதை தரவிறக்க - Mylook Out Mobile Anti Virus


                                                          Get Avg mobilation

                                            

Android மொபைல் போன்கலுக்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது வைரஸ், மால்வேர் அவற்றிடம் இருந்து போன்களை பத்திரமாக பாதுகாக்கிறது. 

இந்த மென்பொருளை தரவிறக்க_ AVG Security


Post Comment

Monday, 20 August 2012

வன்தட்டில் உள்ள பிழைகளை நீக்குவதற்கு


வன்தட்டில் உள்ள பிழைகளை
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டில் பலவிதமான கோளாறுகள் ஏற்பட்டு, அதனால் பிழை செய்தி காணப்படும்.
விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணணியில் தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.
வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை கணணியில் இருந்து நீக்கி விடுவோம்.
நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நீங்காமல் சில கோப்புகள் கணணியிலேயே தங்கிவிடும். அந்த கோப்புகளால் கணணியில் அடிக்கடி பிழைச்செய்தி தோன்றலாம். இதுபோன்ற பிழைச் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது.
இதனை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறந்து சோதனை செய்ய வேண்டிய டிரைவை தெரிவு செய்து, Read Only பொத்தானை அழுத்தி சோதனை செய்து கொண்டு பிழை செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.
பிழை செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த பிழை செய்திகளை மீட்டுக் கொள்ள முடியும். பின் கணணியை மறு தொடக்கம்(Restart) செய்துகொள்ள வேண்டும்.
இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமாகும். விண்டோஸ் 7க்கு இது மிக சிறந்த மென்பொருளாகும்.

Post Comment

இணையத்தளம் மூலம் கணனிகளில் பாதிப்பை ஏற்படுத்து​ம் மல்வேர்களை நீக்குவதற்​கு


இணையத்தளம் மூலம் கணனிகளில்
தற்போது அதிகரித்து வரும் இணையத்தள பாவனையால் ஒன்லைன் மூலமாக கணனிகளுக்கு வைரஸ்கள், மல்வேர்களை அனுப்பி கோப்புக்களுக்கு சேதத்தை விளைவித்தல், தகவல்களை திருடுதல் போன்ற சட்ட விரோத செயற்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறாக ஒன்லைன் மூலம் கணனிகளுக்கு அனுப்பப்படும் adware, spyware, worms, trojans, dialers அவசியமற்ற அல்லது ஒவ்வாத மல்வேர்களை நீக்குவதற்கு Network Malware Cleaner எனும் மென்பொருள் பெரிதும் உதவியாகக் காணப்படுகின்றது.
50.9 MB கோப்பு அளவுகொண்ட இம்மென்பொருளை வேர்க் ஸ்டேசன், சேவர்களிலும் நிறுவி அவற்றின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Comment

அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய ஒரே மென்பொருள்

அனைத்து வீடியோக்களையும்
தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தியையும் தெளிவாக பார்க்க வேண்டுமெனில் அது வீடியோவாக இருப்பின் சிறப்பாக இருக்கும். அவ்வாறு உள்ள வீடியோக்களை இணையத்தின் உதவியுடன் காண
முடியும். அவ்வாறு காணும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்பது கடினமான செயல் ஆகும்.

வீடியோக்களை காண நாம் அனைவரும் அதிகமாக அனுகுவது யூடியூப் தளம் ஆகும். இதுபோன்று இன்னும் பல்வேறு தளங்கள் உள்ளன. இதுபோன்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய ஒருசில மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன. அவற்றில் முக்கியமான மென்பொருள் vDownloader ஆகும்.


மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து வீடியோவின் முகவரியை (URL) உள்ளிடவும். பின் நீங்கள் குறிப்பிட்ட வீடியோவானது தரவிறக்கம் ஆகும். சில மணி நேரங்களில் வீடியோவானது தரவிறக்கம் செய்யப்பட்டு விடும். இந்த மென்பொருள் அதரிக்க கூடிய தளங்களில் சில குறிப்பிடதக்க தளங்கள்.

Post Comment

Sunday, 19 August 2012


விண்டோஸ் 7 இல் அடிக்கடி ஏற்படும் Restart / Shutdown பிரச்சினையை தீர்ப்பது எப்படி?



Windows 7 இல் வேலை செய்யும்போது அடிக்கடி  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படி அடிக்கடி கணினி Shutdown/Restart ஆவதால் பல வேளைகளில் பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. எனெனில் இவ்வாறு  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகள் எழுவதால் எம் வேலைகளை செய்து முடிப்பதில் நேர விரயம் ஏற்படுகிறது. ஆனால் இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. கணனி வன்பொருட்களில் ஏதேனும் பழுது ஏற்படப்போவதாயின் அல்லது ஏற்கனவே சில பழுதுகள் ஏற்பட்டிருந்தாலோ அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது காணப்படுகிறது.

அதனால் அந் நேரத்தில் System செயலிழந்து போவதை காணலாம் அல்லது BSOD  (“Blue Screen Of Death”) எனும் செயற்பாடு நடைபெறும். அதாவது கணினித்திரை முழுவதுமாக நீல நிறத்திலான ஒரு திரை தோன்றி அதில் உங்கள் கணினியில் ஏற்பட்டிருக்கும் பழுது பற்றிய எச்சரிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான காரணம் பற்றியும் அதை தீர்ப்பதற்கான வழி பற்றியும் முன்னர் ஒரு பதிவில் பார்த்திருந்தோம்.

அதனை படிக்க 

Windows இல் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையும் அதற்கான தீர்வு


அந்த பதிவில் பிரச்சினை வந்தால் எப்படி தீர்ப்பது என்று பார்த்தோம். இப்படியான பிரச்சினை வரும்போது கணினி Automatic ஆக Shutdown/Restart ஆகும். இதனால் செய்துகொண்டிருக்கும் வேலைகள் தடைப்படும், நேரம் விரயம் ஆகும். ஆகவே இப்படியான பிரச்சினைகளின்போது கணினி  Shutdown/Restart ஆகாமல் தடுப்பது எப்படிஎன்று பார்ப்போம்

இங்கு படிமுறை படிமுறையாக குறிப்பிடப்படிடிருக்கும் செயற்பாட்டை அவதானிப்பதன் முலம் இதனை இலகுவாக அறிந்து கொள்ளலாம்

படிமுறை 1: முதலில் உங்கள் Desktop திரையில் காணப்படும் My Computer எனும் Icon ஐ Right click செய்து அதில் Propertiesஎன்பதை கிளிக் செய்யவும்.


படிமுறை 2: அடுத்து வரும் விண்டோவில் இடது பக்க பட்டியலில் உள்ள System protection எனும் பகுதியை கிளிக் செய்யவும். இவ்வாறு கிளிக் செய்தவுடன் புதிதான ஒரு பக்கம் திரையில் தோன்றும்.



படிமுறை3: அவ்வாறு தோன்றும் புதிய சாளரத்தில் System properties எனும் பக்கம் தோன்றும் அதில் Advanced எனும் பகுதியை கிளிக் செய்யவும்.


படிமுறை4: அவ்வாறு தோன்றும் திரையில் கீழ் பகுதியில் Startup and Recovery section  எனும் பகுதி காணப்படும் அதில்Settings button ஐ கிளிக் செய்யவும்

படிமுறை 5: அவ்வாறு தோன்றும் திரையில் System failure எனும் தலைப்பிட்டதன் கீழ் இரண்டு பிரிவுகள் காணப்படும்
  • Write an event to the System log
  • Automatically Restart
எனும் இரண்டு தரவுகள் காட்டப்பட்டிருக்கும் இரண்டின் முன்பும் சரி அடையாளம் இடக்கூடிய பெட்டி காணப்படும். அதில் இரண்டாவதாக காட்டப்பட்டிருக்கும் Automatically Restart எனும் தரவின் முன்னால் உள்ள சரி அடையாளத்தை எடுத்து விடவும்.

பின் OK எனும் Button ஐ கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான் வேலை இனி ஒரு போதும் அடிக்கடி  Restart மற்றும் Shutdown  பிரச்சினைகள் வந்து உங்களை எரிச்சலுக்குள்ளாக்காது

Post Comment