Monday, 1 November 2010

INK புதிய Burning டூல்

CD/DVD க்களை காப்பி செய்ய அனைவராலும் பயன்படுத்தும் மென்பொருள் NERO ஆகும். இது அனைவரும் அறிந்ததே இருப்பினும் சிலர் இணையத்தில் தேடி எதாவது ஒரு CD/DVD மென்பொருளை தரவிறக்கி பயன்படுத்தி வருவோம். அவ்வாறு இணையத்தில் இருந்து பதிவிறக்கி பயன்படுத்தும் மென்பொருள் நம்பக தன்மையானதாக இருக்குமா என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை. இப்படி இருக்க சிலர் CD/DVD யை ரைட் செய்வது என்றாலே NERO மட்டும்தான் என்று உள்ளனர். இப்படி ஒரு பக்கம் இருக்க தினம் ஒரு மென்பொருள்கள் சந்தைக்கு வந்தவண்ணமே உள்ளது. அவற்றுள் எவை சிறப்பானதாக இருக்கும், நமது தேவைகளை பூர்த்தி செய்யும் என்று பல கேள்விகள் எழக்கூடும். இது போன்ற பல்வேறு விதமான தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக உள்ள மென்பொருள் இன்ங் ஆகும்.


மென்பொருளை பதிவிறக்க: Download
மெனபொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்வதற்கு .NET தேவைப்படும்.

சிறப்பு வசதிகள்:
  • இந்த மென்பொருளானது Dual-layer DVD சப்போர்ட் செய்ய கூடியது ஆகும்.
  • சாதாரண Data வுடன் ஆடியோவையும் சேர்த்து ரைட் செய்ய முடியும்.
  • இந்த மென்பொருளானது (ISO and BIN/CUE) ஆகிய இமேஜ் பைல்களை சப்போர்ட் செய்ய கூடியது ஆகும்.
  • Drag-n-drop செய்து கொள்ளும் வசதியும், இந்த இன்ங் ரைட்டரில் உள்ளது.

என பல்வேறு விதமான வசதிகள் இந்த இன்ங் ரைட்டரில் உள்ளது, நீங்களும் ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள், சில சமயங்களில் உங்களுக்கு கைகொடுக்கும்.

Post Comment

கூகுளில் புதுவசதி - Google Music India

கூகுளில் தினம் தினம் புதிய வசதிகள் வந்துகொண்டே உள்ள நிலையில் இப்பொழுது வந்துள்ள வசதி இசைப்ரியர்களுக்காக. நம்மில் பெரும்பாலானோர் பாடல்களை விரும்பி கேட்க்கிறோம். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் நாம் பாடல்களை கேட்டு மகிழ்வோம். நீங்கள் பாலிவுட் பாடல்களை கேட்டு ரசிப்பவரா உங்களுக்காக வந்துள்ளது தான் இந்த கூகுள் மியூசிக் இந்தியா. இதில் எண்ணற்ற பாடல்கள் குவிந்து கிடக்கின்றன.

இனி ஒவ்வொரு பாடலையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்து பாலிவுட் பாடல்களும் ஒரே இடத்தில் கொட்டி கிடக்கின்றன.


இதில் நமக்கு தேவையான பாலிவுட் பாடல் வரிகளையோ அல்லது படத்தின் பெயரையோ கொடுத்தால் அடுத்த வினாடியே அந்த பாடல்கள் உங்களுக்கு கிடைக்கும்.


மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் இருக்கும் பட்டன்களை க்ளிக் செய்தால் உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி உங்களுடைய பாடல்கள் எந்த தங்கு தடையின்றி ஒலிக்கும். அது மட்டுமில்லாமல் இதில் இந்த பாடலை பாடியவரின் விவரங்களையும் மற்றும் பாடலில் கால அளவையும் நடிகர் நடிகைகள் விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தளத்திற்கு செல்ல Google Music இந்த லிங்கில் செல்லவும்.

Post Comment

Youtube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை மட்டும் தேட

இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது ஆன்லைனில் வீடியோக்கள் பகிரும் தளமாகும். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும்.
நாம் ஏதேனும் வீடியோவை ஆவலுடன் தேடினால் இதில் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். ஒரு சில வீடியோக்கள் ஆரம்பத்தில் சரியாக போகும் நடுவில் பிரச்சினையை ஏற்ப்படுத்தும். ஆகையால் நாம் தேடும் போதே தரம் மிகுந்த வீடியோக்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என்று இங்கே பார்ப்போம்.
  • இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்க தேவையில்லை.
  • முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும்.
  • இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும்.
  • இதில் தரம் மிகுந்த(High Quality) வீடிக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் '&fmt=18' (Stereo, 480 x 270 resolution) இந்த வரியை கொடுக்கவும்.
  • அல்லது '&fmt=22' (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.

(OR)

  • உங்கள் வார்த்தைக்கும் இந்த வரிகளுக்கும் இடைவெளி விடவேண்டாம். தொடர்ந்து டைப் செய்யவும்.
  • நீங்கள் தேடும் வீடியோக்களில் இந்த தரங்களில் வீடியோ இருந்தால் மட்டுமே உங்களுக்கு வரும் இல்லையேல் NO VIDEOS FOUND என்ற செய்தி தான் வரும். அதற்க்கு கீழே தரம் குறைந்த வீடியோக்கள் வரும் அதில் பார்த்து கொள்ளவும்

Post Comment

விண்டோஸ் பழுதுபார்ப்பு!

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் உபயோகிப்பவர்கள் அவ்வப்போது, தங்களது கணினி பூட் ஆகும் பொழுது, விண்டோஸ் லோடு ஆகும் திரை வந்த பிறகு, உடனடியாக ரீஸ்டார்ட் ஆகும் பிரச்சனையை சந்தித்து இருக்கலாம்.


இப்படி முதல் முறை ரீஸ்டார்ட் ஆகி மறுபடி பூட் ஆகும் பொழுது Safe mode ஆப்ஷனோடு திரை வந்திருக்கும்.
இதில் Safe mode இல் சென்றாலும், Last known Good Configuration -இல் சென்றாலும், இதே போன்று தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கும், உள்ளே இருக்கும் உங்களது முக்கியமான டேட்டாக்கள் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை.

சரி, விண்டோஸ் சீடியை வைத்து பூட் செய்து இந்த இயங்குதளத்தின் மேலேயே over write செய்து விடலாம் என்று முயலும் போது, அங்கேயும் ஆப்பு காத்திருக்கும். விண்டோஸ் சீடியில் பூட் செய்து முதலாவது Repair ஆப்ஷனை தவிர்த்து Agreement பக்கத்திற்கு அடுத்து வரும் திரையில் கீழே உள்ளது போல உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷன் காண்பிக்கப்பட்டால் 'R' கீயை அழுத்தி ரிப்பேர் செய்து கொள்ளலாம்.


ஆனால், விண்டோஸ் ரிப்பேர் வசதியில் செல்லும் போது உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனை Unknown partition என்றோ அல்லது விண்டோஸ் ஏற்கனவே நிறுவப்படாத மற்ற பார்ட்டிஷன்களை போலவே உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனும் பட்டியலிடப்பட்டிருக்கும். இது போன்ற நிலை வரும்பொழுது சற்று சிக்கல்தான்.

முதலாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இந்த நிலைக்கு முந்தைய வரலாறு (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!..) அதாவது இந்த ரீஸ்டார்ட் பிரச்சனை வருவதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது? முழுவதுமாக ஷட் டவுன் ஆவதற்கு முன்பாக பவரை அனைத்து விட்டீர்களா? அல்லது கரண்டு போய்விட்டதா? யாராவது Reset பட்டனை அழுத்திவிட்டு போய் விட்டார்களா? அல்லது இதில் ஏதுமில்லையா?

இந்த கேள்வியெல்லாம் எதற்கு? என்றால், இது போன்ற ரீ ஸ்டார்ட் பிரச்சனை பெரும்பாலும் பூட் பார்ட்டிஷனில் கோப்புகள் கிராஸ் லிங்க் ஆகிவிடவதால் ஏற்படுபவை, அல்லது (மிக அரிதாக) உங்கள் வன்தட்டிற்கு வயதாகி கொண்டிருக்கிறது அல்லது (மிகமிக அரிதாக) பிராசசர் ஃபேனில் தூசி அதிகம் படிந்து, ஃ பேனின் வேகம் குறைந்தது என்றும் கொள்ளலாம். கிராஸ் லிங்க் ஆவதற்கு முக்கிய காரணம் முறையாக ஷட் டவுன் செய்யாமலிருப்பது.

இந்த பிரச்சனை வரும் பொழுது எடுத்தவுடனே விண்டோஸ் Over write செய்து விடலாம் அல்லது புதிதாக வேறு ட்ரைவில் நிறுவிவிடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு முன்பாக, விண்டோசின் தாத்தா DOS கருவியான Chkdsk ஐ பயன்படுத்தி இந்த பிரச்னைக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

விண்டோஸ் பூட் சீடியை வைத்து உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். பிறகு முதலாவதாக வரும் Repair திரையில் 'R' கீயை அழுத்தி Recovery Console திரைக்கு வந்து விடுங்கள்.

இந்த பிரச்சனை உள்ள கணினிகளில், விண்டோஸ் பார்ட்டிஷன் உள்ள ட்ரைவை குறிப்பிடும்படி கேட்காது. தேர்வு செய்ய சொல்லி வந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, C:\> ப்ரோம்ப்டில் CHKDSK /R கட்டளை கொடுக்கலாம். ஒரு சில சமயங்களில் இந்த கட்டளை இயங்காமல் போனால், CD/DVD ட்ரைவிற்கு சென்று (உதாரணமாக g:) அங்கு CD\i386 கட்டளை கொடுத்து அந்த டைரக்டரிக்கு சென்று அங்கு CHKDSK கட்டளையை கொடுங்கள்.


இது முடிந்த உடன் Exit கொடுத்து கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது. கிராஸ் லிங்க ஆன சிஸ்டம் கோப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, கணினி முன்பு போல இயங்கும். பெரும்பாலான கணினிகளில் இந்த வழியை பயன்படுத்தி விண்டோஸ் எக்ஸ்பி ரீ ஸ்டார்ட் பிரச்சனையை சரி செய்யப் பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் அறிய எனது பிற இடுகைகளை வாசிக்கவும்.

Post Comment

Facebook: உங்கள் பெயரை மாற்ற

Facebook தளத்தில் முதல் முறையாக நீங்கள் கணக்கை துவங்கிய பொழுது, உங்கள் பெயரை கொடுத்திருப்பீர்கள். அதன் பிறகு, அந்த குறிப்பிட்ட பெயருக்கு பதிலாக, வேறு ஒரு பெயரை கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றினால், உங்கள் பெயரை முகபுத்தகத்தில் எப்படி மாற்ற முடியும் என்பதை பார்க்கலாம்.
Facebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Account லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Account Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து திறக்கும் திரையில், My Account என்பதற்கு கீழாக உள்ள Settings tab தான் Default ஆக இருக்கும், இல்லையெனில் Settings டேபை க்ளிக் செய்யுங்கள்.


இனி கீழே உள்ள Name என்பதற்கு நேராக உள்ள Change என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்


அடுத்த திரையில், First Name மற்றும் Last Name ஆகியவற்றை உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பிறகு Change Name பொத்தானை அழுத்தினால் போதுமானது.


Alternate Name ஏற்கனவே கொடுக்கவில்லை என்றால் இப்பொழுது கொடுத்துக் கொள்ளலாம். (அதுவும் தமிழில்)

Post Comment