நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி நம்மில் பலர் இணைய தளத்திலேயே நாள் முழுதும் மூழ்கிக் கிடக்கலாம். இதனால் ஏற்படும் கால விரயம், பண விரயம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் எப்போதாவது இதற்கு செலவாகும் பணத்தையோ, நேரத்தையோ யோசித்திருக்கிறோமா என்பதே கேள்வி.உலாவியை (பிரவுசர்) இணையதள இணைப்பின்றியே பெற முடிந்தால்... ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! ஆஃப் லைன் பிரவுசர் தற்போது வந்துள்ளது. இதற்கான மென்பொருள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்யும்.இந்த மென்பொருள் நீங்கள் பிரவுஸ் செய்யும் இணைய தளம் முழுவதையுமோ, ஒரு சில பகுதிகளையோ உங்கள் ஹார்டுவேரில் சேமிக்கும் திறன் கொண்டது. இதனால் இணையதள இணைப்பைப் பயன்படுத்தாமலேயே நீங்கள் அந்த இணைய தளத்தை பிரவுஸ் செய்யலாம்.பேஜ்நெஸ்ட் டாட் காம் (http://pagenest.com/) இது ஒரு இலவச ஆஃப் லைன் பிரவுசர். இதனைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த இணையதளத்தின் பக்கங்களை காப்பி செய்து ஹார்டு டிஸ்கில் ஏற்றிக் கொள்ளலாம்.பேஜ்நெஸ்டில் இணையதள முகவரி ஒன்றை அளியுங்கள் அது அந்த இணையதளம் முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ உங்கள் ஹார்டு டிஸ்கில் பதிவிறக்கம் செய்து விடும். அப்படியே அந்த இணையதளத்தில் ஆன்லைனில் என்ன கண்டீர்களோ அது அப்படியே டெக்ஸ்ட், இமேஜஸ், எச்.டி.எம்.எல் அனைத்தையும் அப்படியே அச்சு அசலாகக் காட்டும்.பேஜ்நெஸ்ட் மூலம் 40 கோப்புகள் வரை டவுன்லோடு செய்ய முடியும். விரைவில் டவுன்லோடு செய்தும் முடித்து விடலாம். இதில் பல சிறப்பம்சங்களும் உள்ளன.சமீபத்திய டவுன்லோடுகள் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கிளிக் செய்யலாம். ஒரே கிளிக்கில் டவுன்லோடு செய்த பல்வேறு இணையதளங்களுக்கு செல்லும் வசதியும் உள்ளது. மேலும் இதற்காக நீங்கள் எந்த செட்டிங்கையும் மாற்ற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பேஜ்நெஸ்ட் பிரவுசர் மூலமும் நீங்கள் பிரவுஸ் செயலாம். மேலும் டவுன்லோடு செய்த இணையதளக் கோப்புகளை காப்பி செய்து நீங்கள் லேப்-டாப்பிலும் வைத்துக் கொள்ளலாம் எனவே நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதனை வாசிக்கலாம். இதனை விண்டோஸ் விஸ்தா, எக்ஸ்பி-2000, எம்.இ மற்றும் 98 ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும்.இதே போல் http://www.httrack.com/ மற்றும் http://www.spadixbd.com/backstreet/ ஆகிய இணையதளங்களும் உள்ளன. இந்த இணையதளங்களை மட்டுமே ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட மணி நேரங்கள் பயன்படுத்தி நீங்கள் வழக்கமாக பார்க்கும் இணையதளங்களை டவுன் லோடு செய்தால் இன்டர்நெட் இணைப்பு பற்றிய பிரச்சினைகளும் இல்லை, செலவும் பெருமளவு குறையும
Thursday, 10 April 2008
Sunday, 3 February 2008
Fingerprints தொழில் நுட்ப்பம்
Fingerprints தொழில் நுட்ப்பம்நம் கணினியையும் அதில் உள்ள தகவல்களையும் திருடு போகாமல் பாதுகாக்க இப்போது பிரபலமடைந்து வரும் முறை கைவிரல் ரேகையை கடவுசொல்லுக்கு பதிலாக பயன்படுத்துவது தான்.நாம் நம் கணினிக்குள் நுழையும் போது, encrypt செய்யப்பட்ட பைல்களை திறக்கும் போது மற்றும் சில windows applications களை திறக்கும் போதும் இந்த விரல் ரேகை முறையை கடவுச்சொல்லுக்கு பதில் பயன்படுத்தலாம். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுச்சொல் பயன்படுத்துவோர் அதை சிரமப்பட்டு நினைவில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை மேலும் நமது கடவுச்சொல்லை யாரேனும் திருடிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் தேவை இல்லை. நம் விரலை வெட்டி எடுத்து சென்றுவிடாமல் பார்த்து கொண்டால் போதும்.மேலும் விபரம் அறிய இங்கே சென்று பார்க்கவும். http://www.upek.com/solutions/eikon/default.asp
Ayngaran
Post Comment
Thursday, 31 January 2008
விரும்பிய கோப்புக்கு மாற்ற
விரும்பிய கோப்புக்கு மாற்றவும் youtube லிருந்து தரைவிறக்கவும் இந்தத் தளம் பயன்படுகிறது அதாவது http://www.mediaconverter.org/index.php இந்தத் தளம் online யினிலேயே கோப்பை மாற்றுகிறது
Post Comment
Wednesday, 30 January 2008
இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள்
இன்று இணையத்தில் பல செயலிகளை (programs) இலவசமாக அல்லது ஒரு குறிக்கப்பட்ட கால எல்லை வரைக்கும் பாவிக்கக் கூடியவகையில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது.
ஒருமென்பொருளைத் தயாரித்து வெளியில் விடுவதற்கு ஒரு கணிசமான அளவில் செலவு ஏற்படும். ஆனால் அந்த மென்பொருளை இலவசமாக பாவனையாளர்களுக்கு வழங்குவதனால் அங்கு எந்தவிதத்திலும் உற்பத்திச்செலவை திரும்ப பெற்றுக்கொள்ளக்க கூடிய வாய்ப்பில்லை.
எனவே இவ்வாறான இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அந்த மென்பொருட்களுடன் சில கட்டளைத்தொகுப்புகளையும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இனி நாங்கள் இவ்வாறான இலவச செயலிகளை பாவிக்கின்ற போது இடையிடையே தான்தோன்றி சாளரங்கள் (pop-up windows) மூலமும் பட்டைகள் (banners) மூலமும் விளம்பரங்கள் மாறிமாறி அடிக்கடி எமது திரையில் தென்படும். இவ்விளம்பரங்கள் மூலம் இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அவற்றிற்கான உற்பத்திச்செலவை திரும்ப பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு ஒரு செயலி இயங்கிக்கொண்டு இருக்கின்ற பொழுது, தான்தோன்றி சாளரங்கள் மூலமும் பட்டைகள் மூலமும் விளம்பரங்கள் மாறிமாறி அடிக்கடி எமது திரையில் விழுவதுபோல் செய்யப்பட்ட மென்பொருள் ADWARE என அழைக்கப்படும்.
ஆனால் இவ்வாறான செயலிகள் உங்களைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் நீங்கள் கணணியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் அவதானித்து அவற்றை உங்களுக்குத்தெரியாமல் அல்லது உங்கள் அனுமதி இல்லாமல் மூன்றாம் நபர்களுக்கு அனுப்பக்கூடிய கட்டளைத்தொகுப்புகளையும் தன்னுள் உள்ளடக்கி இருக்கின்றன.
இனி SPYWARE என்றால் என்னவென்று பார்ப்போம். நாங்கள் இணையத்தில் தொடுத்து இருக்கின்ற வேளையில் எமக்குத் தெரியாமல் எமது அனுமதி இன்றி எம்மைப்பற்றிய தகவல்களை சேகரித்து பின்வழியால் (back channel)வேறுபட்ட நிறுவனங்களுக்கும் விளம்பரதாரருக்கும் அனுப்பிவைக்கும் தொழில்நுட்ப மென்பொருள் SPYWARE எனப்படும்.
இவ்வாறான உளவுபார்க்கும் கட்டளைக்கோப்பகளை முற்றாக எமது கணணியிலிந்து நீக்கி எமது கணணியை சுத்தப்படத்த பின்வரும் SPYBOT SEARCH AND DESTROY மென்பொருளை நீங்கள் பாவிக்கலாம்.
Post Comment
MS Office VS Open Office
Open Office is a Freeware Software, which is as good as the $550 value Microsoft Office.You can download it here freely DOWNLOAD HERE
Post Comment
Subscribe to:
Posts (Atom)
