Tuesday, 1 February 2011

ISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள் பைல்களாக மாற்ற

ISO பைல்களை பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய நாம் நீரோ அல்லது Poweriso, MagicISO, ISO Burner இதில் எதாவது ஒரு ரைட்டிங் சாப்ட்வேரினை பயன்படுத்தியே மாற்றம் செய்வோம். ISO பைல்கள் பெரும்பாலும் அதிக அளவுடையதாகவே இருக்கும். இந்த ISO பைல்களை நாம் பெண்ட்ரைவ்களில் பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நாம் USB வழியாக பூட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளானது Freeware அப்ளிகேஷன் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த மென்பொருளை Unzip செய்துகொள்ளவும். IsoBurner என்பதன் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Run as Administrator என்பதை தேர்வு செய்யவும். பின் ஒப்பன் ஆகும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான தேர்வை ஒகே செய்து விட்டு Next பொத்தானை அழுத்தி பூட்டபிள் பைலை உருவாக்கி கொள்ள முடியும்.

இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் பெண்ட்ரைவுகளிளும் பூட்டபிள் பைல்களை உருவாக்க முடியும். நேரிடையாக CD/DVDக்களில் ISO இமேஜ்களை ரைட் செய்யவும் முடியும்.

Post Comment

Tuesday, 28 December 2010

உங்கள் புகைப்படத்தை விரும்பும் வகையில் அழகாக்க!!


உங்களுடைய புகைப்படத்தினை அழகாக டிசைன் செய்திட மாஜிக் போட்டோ எடிட்டர் என்னும் சிறப்பு வாய்ந்த சாப்ட்வேர் உதவுகிறது.

சாப்ட்வேர் லிங்க் கீழே கொடுத்து உள்ளேன். இந்த சாப்ட்வேர் மிகவும் குறைந்த அளவு உடையதாகும்.

இந்த சாப்ட்வேர் இணை டவுன்லோட் செய்த பிறகு நீங்கள் விரும்பும் வண்ணத்தில் பின்புற புகைப்படத்தினை டிசைன் செய்து நீங்கள் விரும்பும் போடோவினை அதன் மீது தெளிய வைத்து அழகாக மெருகூட்டலாம்.

முதலில் இந்த சாப்ட்வேர்ரினை டவுன்லோட் செய்த பிறகு கீழ் கண்ட விண்டோ தோன்றும்.


பின்னர் நியூ என்னும் பட்டனை அழுத்தினால் புதிதாக செய்ய சொல்லி கேட்கும்.
பின்னர் சேவ் என்னும் பட்டன் நீங்கள் செய்து முடித்த புகைப்படத்தினை கேட்கும்.

இதில் backdrop என்னும் பட்டன் உங்கள் புகைப்படத்திற்கு பின்னல் இருக்கும் பேக்க்ரவுண்ட் புகைப்படத்தினை செட் செய்ய புகைப்படம் கேட்கும். அதை நீங்கள் விரும்பும் புகைப்படத்தினை நீங்கள் பின்புறமாக செட் செய்து கொள்ளலாம்.

பின்னர் clipart என்னும் பட்டன் கீழ்கண்டவாறு கேட்கும்..


இதில் நீங்கள் விரும்பும் அழகிய பொருட்களை தேர்வு செய்து உங்கள் புகைப்படத்திற்கு பக்கத்திலோ அல்லது அதற்கு உள்ளேயே புகைப்படத்தினை செட் செய்யலாம்.



உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை இங்கே பகிர்ந்து உள்ளேன்.

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Post Comment

Friday, 24 December 2010

மைக்ரோசாப்ட்டின் Security Essentials 2.0

Microsoft Security Essentials என்பது ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் ஆகும். இந்த ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதாகும். இது இரண்டாவது பதிப்பாகும். இதன் முந்தைய பதிப்பானது 2009 ம் வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டி வைரஸ் மென்பொருளானது மிகவும் பிரபலமானது ஆகும். மேலும் இந்த ஆண்டிவைரஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் இது மிகவும் சிறப்பான ஒன்றாக உள்ளது , இந்த ஆண்டி வைரஸ் ஆனது அதிகப்படியான பாதுகாப்பு தன்மையினை அளிக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த ண்டிவைரஸ் மென்பொருளானது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் மற்ற ஆண்டிவைரஸ்களை விட விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு Microsoft Security Essentials உகந்ததாக இருக்கும். மேலும் இந்த ஆண்டிவைரஸ் இண்டர்நெட் வழியாக எந்தவித வைரஸ்களும் நம்முடைய கணினிக்கு ஊடுருவாமல் இருக்க வழிவகை செய்கிறது, இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு தனி பாதுகாப்பினையும் இந்த ஆண்டிவைரஸ் வழங்குகிறது.

இந்த பதிப்பில் கூடுதல் அம்சமாக anti-malware engine புகுத்தப்பட்டுள்ளது, இந்த வசதியின் மூலமாக நம்முடைய கணினியில் புதிதாக எந்த ஒரு டிவைஸ்யை உள்ளீடு செய்தாலும் அதில் உள்ள வைரஸ்களை கிளீன் செய்துவிடும். இந்த ஆண்டிவைரஸ் நம்முடைய கணினிக்கு முழுமையான பாதுகாப்பு வசதியினை வழங்குகிறது

Post Comment

Sunday, 28 November 2010

PenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க


இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள்.


ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.

இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.


இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.





அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,



தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.




.

Post Comment

Friday, 26 November 2010

Windows Security: முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க


Anti Virus நிறுவப்படாத கணினி அல்லது முறையான உரிமம் இல்லாத Anti Virus மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ள கணினிகள், வைரஸ்/மால் வேர் தாக்குதல்களிலிருந்து தப்புவது மிகக் கடினமான விஷயமாகும். ஒரு சில சமயங்களில், உங்களது கணினி மிக மோசமான வைரஸ்/மால்வேர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, அதன் இயக்கும் முற்றிலும் முடக்கப் பட்டு, இயங்குதளம் கூட ஒழுங்காக பூட் ஆகாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம்.



இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களது மிக முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் அந்த கணினியில் இருந்தால் இன்னும் டென்ஷன்தான். உங்கள் பாதிக்கப்பட்ட கணினியை சோதிக்கும் கணினி வல்லுனர், புதிதாக இயங்குதளத்தை நிறுவினால்தான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். என்று சொல்லும் நிலை கூட வரலாம்.

இது போன்ற சமயங்களில் நமக்கு சமய சஞ்சீவியாக அமைவது Kaspersky நிறுவனத்தின் இலவச Bootable Kaspersky Rescue Disk.


இந்த பயனுள்ள கருவி, ISO இமேஜ் கோப்பாக தரவிறக்க Kaspersky தளத்திலேயே கிடைக்கிறது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரபட்டுள்ளது). இந்த ISO கோப்பை தரவிறக்கம் (வைரஸ்/மால்வேர் அல்லாத கணினியில்) செய்து கொண்டு, Nero Burning Rom போன்ற CD/DVD Burning Software ஐ பயன் படுத்தி இந்த ISO Image லிருந்து, CD ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருட்கள் இல்லாதவர்கள் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து ImgBurn மென்பொருளை தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளுங்கள்.


இப்படி உருவாக்கிய Kaspersky Rescue Disk ஐ பாதிக்கப்பட்ட கணினியில், First Boot Device ஐ Bios Settings இல் CD/DVD க்கு மாற்றிவிட்டு, இந்த CD ஐ கொண்டு பூட் செய்யுங்கள். திரையில் Kaspersky Rescue Disk. Graphic Mode என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


பின்னர் இதில் தொடரும் விசார்டை பின் பற்றி உங்கள் வன்தட்டில் உள்ள வைரஸ்/மால்வேர்களை நீக்கி, உங்கள் கணினியை உயிர்ப்பிக்கலாம்.



இது போன்ற பிரச்சனைகள் உங்கள் கணினியில் இல்லாவிட்டாலும் கூட, இந்த Rescue CD ஐ உருவாக்கி வைத்துக் கொள்வது, ஆபத்து நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.





Post Comment