| Double Driver ஐ கணனியில் நிறுவி ஸ்கான் செய்து பின்னர் பேக்கப் செய்யுமாறு பணித்தால் எல்லா டிரைவர்களையும் தனித்தனியாக பால்டர்களில் சேமித்துவிடும். இனி இலகுவாக கணனியை ரீஇன்ஸ்டால் செய்யும் போது பயன்படுத்தலாம். |
Tuesday, 7 September 2010
விண்டோஸ் டிரைவர்ஸ் அனைத்தையும் பேக்கப் செய்யும் இலவச யுட்டிலிட்டி
விண்டோஸ் கணனிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய 470 டூவீட்கள் தரும் மென்பொருள்
| புரவுசிங்க் செண்டர் போன்ற பொது இடங்களில் இருக்கும் கணனிகளை அதிகமானோர் பயன்படுத்துவதால் இன்னும் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே பாதுகாப்பிற்காக விண்டோஸில் செய்யவேண்டிய சில நடவடிக்கைகள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அவற்றையும் கஸ்டமைஸ் செய்வதோடு மேலதிகமாக கணனி பாதுகாப்பு திட்டங்களை செயற்படுத்துதல், அத்துடன் உங்கள் கணனியில் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க, பாஸ்வேட் பாதுகாப்புடன் டுவீட் செய்யப்பட்ட அனைத்து ஆப்ஸன்களையும் ரீசெட் செய்யவும் முடிந்தால் நல்லது தானே. அதற்காகதான் True System Security Tweaker என்ற மென்பொருள் இருக்கின்றது. இந்த மென்பொருள் மூலம் விண்டோஸ் கணனிக்கு அவசியமான 470 பாதுகாப்பு செயற்பாடுகளை டுவீக் செய்யலாம். இது ஒரு போர்ட்டபிள் அப்பிளிகேஷன். எனவே இதை இயக்கியதுமே பயன்படுத்த தொடங்கலாம். இதன் நவிகேஷன் பாரில் இடப்பக்கத்தில் எல்லா லோகேஷன்களையும் அக்ஸஸ் செய்யலாம். மேலும் User Restrictions மற்றும் Windows Common Restrictions என்ற பிரிவுகளின் கீழே ஏராளாமான டுவீட்களை செய்யலாம். விண்டோஸ் கணனியின் எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கிய Desktop, Credential manager இருந்து Control panel வரை , Drives restriction, File system இல் இருந்து Software restrictions வரை மற்றும் Network போன்றவைகளையும் டூவீக் செய்யலாம்.
|
Post Comment
Monday, 6 September 2010
எவ்வாறு windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது?
முதலில் இதன் அநுகூலம் என்ன என்பதை பார்ப்போமானால் Windows 7ஆனது DVD களிலேயே கிடைக்கும் DVD Drive இல்லாதவர்கள் USB Drive மூலமாக Windows 7 னை Install செய்து கொள்ளலாம்
அதே போல விரைவாகவும் Install செய்து கொள்ளலாம்....
தேவையானது:
*USB Flash Drive (Minimum 4GB)
*Windows 7 or Vista files.
இனி எவ்வாறு Windows 7 bootable ளினை USB Flash ல் உருவாக்குவது என்று பார்ப்போம்.
1.USB Portல் USB Flash Drive யினை செருகவும்
2. USB Flash Drive யினை NTFS ஆக Format செய்யவும்
3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்
4. பின் dvd Drive மற்றும் Flash Drive களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும். My Computer ல் இதனை காணலாம்
(இங்கு நான் DVD Drive க்கு 'D' யும் Flash Drive க்கு 'H' எனவும் கொடுத்துள்ளேன்
5.Command Prompt ஐ திறக்கவும்
*Type cmd in Start menu search box and hit Ctrl+ Shift+ Enter.
அல்லது
*Start menu > All programs > Accessories, right click on Command Prompt and select Run as administrator.
6. Command Prompt ல் பின்வருவதை டைப் செய்து என்டர் தட்டவும்
D: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
இங்கு D பதிலாக உங்கள் DVD drive letter யினை தரவும்
அடுத்து CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
7. BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.
இங்கு H பதிலாக உங்கள் Flash drive letter யினை தரவும்
8. Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive க்கு கொப்பி செய்யவும்
9. இனி உங்கள் flash Drive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிட்டது..
இனி நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7னை நிறுவிக் கொள்ளலாம்..
------
Bios ல் boot priority யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழமை போலவே நிறுவிக் கொள்ளலாம்-------
Post Comment
அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...
இன்று நான் பதிவிடுவது Internet download manager ஐ பற்றி ...
இந்த IDM மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவுவதன் மூலம் இணையத்தில் இருந்து மிக வேகமாக எந்த கோப்புகளை தரவிறக்கி கொள்ள முடியும்.
குறிப்பாக வீடியோக்களை அந்த தளத்தில் இருந்தே இலகுவில் தரவிறக்கம்
செய்து கொள்ள முடிவது இதன் சிறப்பம்சமாகும்..
அதாவது... உதாரணமாக Youtube ல் ஒரு பாடலை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமாயின் Youtube ல் குறித்த பாடலை Play செய்ததும் Player ன் வலது பக்க மேல் மூலையில் download this video என்று ஒரு சுட்டி தோன்றும்
அதனை அழுத்துவதன் மூலம் அந்த தளத்தில் இருந்தே விரைவாக குறித்த வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
சாதாரண முறையில் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்யும் போது ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு துண்டாகவே தரவிறக்கம் செய்யும்.
ஆனால் IDM மூலம் அதே கோப்பை தரவிறக்கம் செய்யும் போது குறித்த கோப்பை பல துண்டங்களாக பிரித்து ஒரே நேரத்தில் தறவிறக்கம் செய்வதால் மிக விரைவாக தரவிறக்கம் செய்யும்..
(கோப்பை IDM மூலம் தரவிறக்கம் செய்யும் போது.)
Rapidshare, mediafire, megaupload போன்ற தளங்களில் கணக்கு வைத்துள்ளவர்களும் விரைவாக IDM மூலமாக தறவிறக்கம் செய்ய முடியம்.
அதற்கு IDM ஐ Open செய்து Downloads ---> Option ஐ கிளிக் செய்து வரும் விண்டோவில் Siteslogin என்பதை அழுத்தி அதில் உங்கள் பயனர் பெயர் கடவுச் சொல் என்பதை கொடுத்து சேவ் செய்தால் போதுமானது.
மேலும் இதன் சிறப்பம்சமாக தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் கோப்பை பிறகு தரவிறக்க செய்வதற்கு ஏற்றவகையில் Pause செய்தும் வைக்கலாம்...
மேலும் schdule ஆக தரவிறக்கம் செய்யும் படியும் செட் செய்திடலாம்.
IDM தறவிறக்கம் செய்ய அழுத்துக
Post Comment
Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..
முதலில் இந்த பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்று பார்த்தால் நமது கணணியில் சில மல்வேர்கள், ஸ்பைவேர்கள் நின்று கொண்டு செய்யும் அட்டகாசம் தான் இது.
இவ்வாறான மல்வேர்கள் நமது பைல்களின் தனித்தன்மையை மாற்றிவிடும் அதுமட்டுமன்றி நமது ஒரிஜினல் கோப்புகளை மறைத்து அதன் பெயரில் டுப்ளிகேட் மல்வேர் பைல்களை உருவாக்கி விடும்.. இதை அறியாமல் நாம் ஒரிஜினல் பைல் என்று நம்பி இந்த டுப்ளிகேட் மல்வேர் பைல்களையே கிளிக் செய்கிறோம்.. இதன்போது நமது கணணியில் மேலும் பல அட்டகாசங்களை இந்த மல்வேர்கள் செய்கின்றன..
இதிலிருந்து நமது மறைந்த பைல்களை மீட்க என்னதான் வழி...
command Prompt ல் சில வசனங்களை கொடுப்பதன் மூலம் நமது PenDriveல் இருந்து மறைந்த கோப்புகளை மீட்டெடுக்கலாம்...
இதனை மேலும் இலகுபடுத்த command prompt உபயோகித்து என்னால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய மென்பொருள் PenDrive clean beta மூலம் இலகுவில் மீட்டெடுக்கலாம்..
PenDrive clean beta® தரவிறக்க சுட்டிக்கு இங்கே அழுத்தவும் (இது வெறும் 436 KB அளவையே உடை
- தரவிறக்கிய மென்பொருளை உங்கள் pen drive ல் இட்டு பின் அதனை open செய்யவும்...
(PenDrive clean beta ஐ உங்கள் pen Drive இல் இட்டு பின் pen Drive இல் இருந்தே Application ஐ open செய்யவும்)
- PenDrive clean beta என்பதை open செய்தவுடன் cmd window திறக்கும் பின் cmd window இல் press any key to continue… என்று வந்ததும் என்டரை தட்டவும்...
- பின் pen Drive scan செய்து முடித்ததும்
It is safe to double click your pen drive when you remove and attach again
It is advisable that run this program
before you remove the pen drive from computer.
Get More infore : http://farhacool.blogspot.com
என்று செய்தி வரும் ...
ஆம் இப்பொழுது உங்கள் பென் ரைவில் இருந்த வைரஸ்கள் அழிந்து, மறைந்த கோப்புக்கள் மீண்டிருப்பதை காணலாம்..
PenDrive clean beta வின் தொழிற்பாடுகள்
This program stops exe virus process in memory and
1.unhides your files and folders
2. makes sure safe double click on pen drive
3. deletes exe files created by SillyFDC virus including fun.exe in pen drive
3. Deletes autorun.inf file in pen drive
4. creates hidden, read-only autorun.inf folder, for security purpose
Post Comment
Subscribe to:
Posts (Atom)


